என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • வத்திராயிருப்பு அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தப்படடார்.
    • இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள லட்சுமியாபுரம் தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் ராஜஸ்வரன் (வயது28). இவரும், டி.மானகசேரியை சேர்ந்த சேது மகள் நாகராணி என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த மாதம் 23-ந்தேதி ராஜேஸ்வரன், நாகராணி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி மூவரைவென்றானில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் திரும ணத்தை பதிவு செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் 2 பேரும் லட்சுமியாபுரத்தில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராணியின் சகோதரர் செல்போனில் தொடர்பு கொண்டு தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சேர்த்தி ருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இதையடுத்து நாகராணி தனது கணவருடன் தாயாரை பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் தாயை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக கூறி நாக ராணியை மட்டும் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் ராஜேஸ்வரனின் வாட்ஸ்-அப்-க்கு நாகராணி அனுப்பிய தகவலில் தன்னை உறவினர்கள் கடத்தி செல்வதாக குறிப் பிட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரன் இதுகுறித்து நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கத்தின் சார்பில் மகாசபை கூட்டம் நடந்தது.
    • இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சிவகாமிபுரம் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மகாசபைக் கூட்டம் சாலியர் உறவின் முறை பொதுக்கட்டிடத்தில் நடந்தது.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கைத்தறி மேலாண்மை இயக்குநர் ரகுநாத் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் நெசவாளர்களுக்கு வருடம் முழுவதும் ஜனதா சேலை வேலை வழங்க வேண்டு மென பிரதான கோரிக்கையாக முன் வைக்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. இந்த கோரிக்கை குறித்து வருகிற சட்ட மன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் வலியுறுத்தியும் உள்ளதாக கூறினார்.

    மேலும் நெசவாளர்களின் நலன் காக்க தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். அவரது வழியில் நமது மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை அமைச்ச ரும், தொழில்த்துறை அமைச்சரும், நானும் நெசவாளர்களுக்கு உறு துணையாக இருப்போம் என கூறினார்.

    அதனைத்தொடர்ந்து சங்கத்திலுள்ள நெசவாளர் அனைவருக்கும் போனஸ் தொகையையும் நெசவு அச்சு பிரைம் செட்-ஐ வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் குருநமச்சிவயம், நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜேந்திர குமார், குருசாமி, குணா ராமலட்சுமி, நாகேஷ்வரன் மற்றும் திருவள்ளுவர், நடராஜன் நெசவாளர்கள் கழக நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் வருகிற 28, 29-ந் தேதிகளில் சொத்துவரி உயர்வை கண்டித்து கதவடைப்பு போராட்டம் நடக்கிறது.
    • இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேர்வு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் பஞ்சாலைகள், விவசாயம் ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது.

    இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100 கிராமங்களுக்கு ராஜபாளையமே தாய் நகரமாகவும், தினமும் ராஜபாளையம் நகரத்தில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் கிராம மக்கள் வந்து செல்லும் நகராட்சியாகவும் உள்ளது.

    இந்த நகராட்சியில் மாநில அளவில் மிகவும் அதிகபட்சமாக சொத்து வரி, குடிநீர்வரி உயர்த்தி இருப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் வைத்து செயலாளர் எம்.சி.வெங்கடேஸ்வரராஜா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பத்மநாதன், செயலாளர் ஆடிட்டர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சுகந்தம் ராமகிருஷ்ணன், ராஜவேல், டைகர் சம்சுதீன், வாசுதேவ ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக் களை தெரிவித்தனர்.

    முடிவில் வருகிற 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி உயர்வை கண்டித்து கதவடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை காட்ட முடிவு செய்தனர்.

    • சிவகாசியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • அச்சடிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.



    அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. 

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அச்சகத் தொழிலில் முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் இங்கு தான் அச்சிடப்படுகிறது. சிவகாசியில் செயல்பட்டு வரும் அச்சகங்களில் லட்சக்கணக்கான பணியா ளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஒவ்வொரு கல்வி ஆண்டின் போதும் பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்த கங்கள் சிவகாசி அச்சகங்க ளில் தயாராவது வழக்கம். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல், பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தக மாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மூலம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டிற்கு தேவை யான பாடப்புத்தகங்கள் கணக்கிடப்பட்டு, அச்சகங்களுக்கு டெண்டர் மூலம் அச்சிடும் பணிகள் வழங்கப்படும்.

    இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாட புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் அச்சடிக்கப்பட்ட பாட புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்தபணிகள் தமிழகத்திற்கு 85 சதவீதம் வழங்கப்பட்டாலும் 15 சதவீத பணிகளை ஆந்திர மாநிலதிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 100 சதவீத பணிகளையும் தமிழகத்திற்கே வழங்கி தமிழக அச்சக தொழிலில் ஈடுபடுவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரியாபட்டி யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.10லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோணுகால், தண்டியேந்தல், முடுக்கன்குளம், சூரனூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தண்டியேந்தல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.76லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கிராம நூலக கட்டிடத்தையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தண்டியேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்து அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் இதர மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தண்டியேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து அங்கு பழுதடைந்த கட்டிடத்தை பார்வையிட்டு அதனை பராமரிப்பு பணி மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முடுக்கன்குளம் ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.65 க்ஷலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் களத்தையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூட கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.56கோடி மதிப்பில் முடுக்கன் குளம்- காரியாபட்டி-நரிக்குடி சாலைகள் மேம்படுத்தப்பட்டு வரும் பணிகளையும், சூரனூர் ஊராட்சியில் தேனூர் பெரியகுளம் கண்மாயில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.73லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மதகு மற்றும் வரத்து கால்வாய் பராமரிப்பு பணிகளையும், சூரனூர் ஊராட்சி, தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.3.08 லட்சம் மதிப்பில் புனரமைக்கப் பட்டுள்ள 3 பள்ளி வகுப்பறை கட்டிடங்களையும், தேனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டிடத்தையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சண்முகப்பிரியா மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் முனீஸ்வரி(வயது25). இவரும் விருதுநகர் அம்மன் கோவில் பட்டியை சேர்ந்த பட்டாசு தொழிலாளி கருப்பசாமி என்பவரும் கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு காத லித்து திரும ணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இ தன் காரணமாக முனீஸ்வரி கலிங்கப்ப ட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் பிரிந்து சென்ற கணவருடன் சேர்ந்து வாழ முனீஸ்வரி விருப்பம் தெரிவித்தார். கருப்பசாமி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    சம்பவத்த ன்று கணவர் வேலை பார்க்கும் பட்டாசு ஆலைக்கு சென்று சேர்ந்து வாழ வேண்டும் என்று முனீ ஸ்வரி கூறியுள்ளார். அதற்கு கருப்பசாமி பெரியோர்கள் முன்னி லையில் பேசிய பின் சேர்ந்து வாழலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு வந்த முனீஸ்வரி வாழ்க்கையில் வெறுப்படைந்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கருப்பையா கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
    • இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 19-ந் தேதி பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை (21-ந் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்து உள்ளது.

    மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிவகாசி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது தாயார் இறந்து விட்டார்.

    விருதுநகர்,

    சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் முனீஸ்வரி(வயது26) திருத்தங்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது தாயார் இறந்து விட்டார். இந்தநிலையில் முனீஸ்வரிக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு முனீஸ்வரி தாய் இறந்து 3 மாதமே ஆகியிருப்பதால் தற்போது திருமணம் வேண்டாம் என மறுத்துள்ளார். ஆனால் குடும்பத்தினர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இதனால் அவர் விரக்தி யுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அருகில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த முனீஸ்வரி வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.

    • பெண் முன்னேற்றத்திற்கு முதல்-அமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
    • புதிய கடனுதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

    விருதுநகர்,

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய இடங்களில் கூட்டுறவுத் துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தள்ளுபடிச் சான்று மற்றும் புதிய கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் 476 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 4497 பயனாளிகளுக்கு ரூ.7.9 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 40 மகளிர் சுய உதவி குழுக்க ளில் உள்ள 450 பயனாளி களுக்கு ரூ.2.35 கோடி மதிப்பிலான புதிய கடனு தவிகளையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஓரு காலத்தில் பெண் பிள்ளைகள் பெறுவது சுமை என்ற நினைத்த காலம் மாறி தற்போது பெண்கள் சம உரிமை பெற்று ஆண்களைவிட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    இதற்கு காரணம் பெரி யார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தான். பெண்களுக்கான உரிமை, கல்வி, விதவை மறுமணம், சொத்துரிமை, பெண்களுக்கான சமத்துவம் கிடைக்க பல்வேறு சமுதாய சீர்திருந்தங்களை செய்வதால் தான் அவர்கள் வழிவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்கும், சமத்துவதிற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன், தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், ஸ்ரீவில்லி புத்தூர் நகர்மன்ற தலைவர் ரவிக்கண்ணன், ராஜபாளை யம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ஸ்ரீவில்லி புத்தூர் ஊராட்சிய ஒன்றியக்குழுத் தலைவர் ஆறுமுகம், ராஜபாளைமய் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ், வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிந்துமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • உண்டியல் திறப்பானது கோவில் யூடியூப்பிலும் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.

    சாத்தூர்,

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இம்மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. 8 நிரந்தர உண்டியல் 1 கோசாலை உண்டியல் உள்பட 9 உண்டியல்கள் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டன.

    அதில் ரொக்கம் ரூ.37 லட்சத்து 67 ஆயிரத்து 839-ம், தங்கம்- 179.96 கிராம், வெள்ளி- 551.84 கிராம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.

    இந்து அறநிலைய துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உதவி ஆணையர் மற்றும் நேர்முக உதவியாளர் யக்ஞநாராயணன், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம், மகாராஜன், நவரத்தினம், அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டனர்.

    தமிழக அரசு உத்தரவின் படி உண்டியல் திறப்பானது கோவில் யூடியூப்பிலும் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.

    • ராஜபாளையம் அருகே குடிநீர் திருடிய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
    • செயல் அலுவலர் வெங்கடகோபு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி 16-வது வார்டு முகவூர் ரஸ்தா கீழ்புறம் முறையற்ற போலி குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் திருடப்பட்டு வருவதாக புகார் வந்தது.

    இதனையடுத்து செயல் அலுவலர் வெங்கடகோபு நேரடியாக களத்தில் இறங்கி முகவூர் ரஸ்தா பகுதியில் ஆய்வு செய்தார். அதில் முறையற்ற போலி குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் திருடி வருவது கண்டறியப்பட்டு பணியாளர்களால் உடனடியாக அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    மேலும் முறையற்ற குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒருவார காலத்திற்குள் தாங்களாக முன்வந்து தங்களது முறையற்ற குடிநீர் இணைப்பினை துண்டிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு தொடர்ந்து துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.

    மேலும் இழப்பீட்டு தொகை பல மடங்காக உயர்த்தி வசுலிக்கப்படும் என்று செயல் அலுவலர் வெங்கடகோபு எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின்போது குடிநீர் கட்டணம் செலுத்தாத 19 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    • விருதுநகர் மாவட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 2022-2023ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விருதுநகர்,

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொ கை வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயல்படு த்தப் பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப் பங்கள் வரவேற்க ப்படு கின்றன.

    1.1.2022 அன்று 58 வயது நிறைவ டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்து க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவல கத்தில் இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றி யமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச் சான்று தமிழறிஞ ர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப் பத்துடன் இணைக்க ப்பட வேண்டும்.

    இதற்கான விண்ணப்ப படிவம் நேரிலோ, தமிழ் வளர்ச்சி துறையின் வலை தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படு பவருக்குத் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3500-ம், மருத்துவப்படி ரூ.500-ம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவ லகத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் அளிக்க வேண்டும், நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்க கத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×