search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரியாபட்டி யூனியனில் வளர்ச்சி பணிகள் ஆய்வு
    X

    காரியாபட்டி யூனியன் முடுக்கன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி யூனியனில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

    • காரியாபட்டி யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.10லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோணுகால், தண்டியேந்தல், முடுக்கன்குளம், சூரனூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தண்டியேந்தல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.76லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கிராம நூலக கட்டிடத்தையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தண்டியேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்து அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் இதர மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தண்டியேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து அங்கு பழுதடைந்த கட்டிடத்தை பார்வையிட்டு அதனை பராமரிப்பு பணி மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முடுக்கன்குளம் ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.65 க்ஷலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் களத்தையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூட கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.56கோடி மதிப்பில் முடுக்கன் குளம்- காரியாபட்டி-நரிக்குடி சாலைகள் மேம்படுத்தப்பட்டு வரும் பணிகளையும், சூரனூர் ஊராட்சியில் தேனூர் பெரியகுளம் கண்மாயில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.73லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மதகு மற்றும் வரத்து கால்வாய் பராமரிப்பு பணிகளையும், சூரனூர் ஊராட்சி, தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.3.08 லட்சம் மதிப்பில் புனரமைக்கப் பட்டுள்ள 3 பள்ளி வகுப்பறை கட்டிடங்களையும், தேனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டிடத்தையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சண்முகப்பிரியா மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×