என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்ட லங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். அதன் அடிப்படை யில் சிவகாசி, விருதுநகர் உள்ளட்ட பல்வேறு பகுதி களில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கிருஷ்ணன்கோவில் போலீசார் சம்பவத்தன்று செம்பட்டையான்கால் சமத்துவபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த கார்த்திக்ராஜா (வயது25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 140 கிராம் கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் தொடர்பு டைய எம்.புதுப்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருதுநகர் தர்காஸ் தெருவில் மேற்கு போலீசார் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்ற வீரபத்தி ரன் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22),பெரிய

    கொல்லப்பட்டியை சேர்ந்த காட்டுவா மைதீன், கலைஞர் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (20), மாரீஸ்வரன் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்ட லங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    • சிவகாசி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார் தெரிவித்தார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரம் சாமி நத்தம் காலனியை சேர்ந்த வர் பூமிநாதன் என்ற புவனே சுவரன். இவரது மனைவி சந்தனமாரி (வயது 20). இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளான்.

    கடந்த சில மாதங்களாக பூமிநாதன் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று மகனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சந்தனமாரியின் தாய் முத்துலட்சுமி மகள், பேரனை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டின் கதவு வெளிபுறமாக பூட்டப்பட்டு இருந்தது. செல்போனும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. சிலமணி நேரம் கழித்து பூமிநாதன் அங்கு வந்து கதவை திறந்தார். அப்போது முத்துலட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஒரு அறையில் சந்த னமாரி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சந்தனமாரி ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர் பாக மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர். இந்த நிலையில் தனது மகள் சாவில் மர்மம் இருப்ப தாக முத்துலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் நில விவரங்களை விவசாயிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விவசாயிகள் தாங்கள் இதுவரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விவசாயிகள் பயன்பெ றும் வகையில் தமிழக அரசு மூலம் 1.4.2023 முதல் செயல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான வேளாண் அடுக்ககம் (AGRI STACK) மூலம் நில விவரங்களுடன் இணைக் கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடமை வாரி யாக புவியியல் குறியீடு செய்தல், நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விவரம்-இனங்களை குறித்து அறிந்து கொள்ள இயலும்.

    இதில் முக்கியமாக நில விவரங்களுடன் இணைக் கப்பட்ட விவசாயிகள் விவரம் அறிய உருவாக்க பட்டுள்ள GRAINS வலைதளத்தில் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை, வேளாண் மைத்துறை, தோட்ட கலைத்துறை, கூட்டுறவு துறை, பட்டு வளர்ச்சித்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதை சான்றளிப்பு துறை, சர்க்கரை துறை ஆகிய துறைகள் இணைக்கப்பட்டு ள்ளதால் அரசு திட்டங்க ளின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்ற டைவதை உறுதிப்படுத்த முடியும்.

    மேலும் இது ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

    விவசாயிகள் தாங்களே நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் அரசு திட்டங்கள் மூலம் பயன்பெ றலாம். விவசாயிகள் தாங்கள் இதுவரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

    திட்டங்க ளின் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் GRAINS வலைதளத்தில் தங்களது ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண் மற்றும் நில பட்டா விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

    AGRISTACK/GRAINS Project-தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் விவசாயிகள் தரவு தளத்திற்கான சேகரிப்பு தொடர்பாக விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர்கள், மின்னணு மாவட்ட மேலாளர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர்கள், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோருக்கு வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளம் பற்றி மாவட்ட அளவிலான பயிற்சி வழங்கப்பட்டு, மாவட்ட அளவிலான பயிற்சி பெற்ற அலுவலர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவ லர்கள், வருவாய் ஆய்வா ளர்கள், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறை சார்ந்த களப்பணி யாளர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டு பதிவேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை தங்களது கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் மூலம் வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் தேசிய நுகர்வோர் தின விழா நடந்தது.
    • மாணவர்களின் வினாக்களுக்கு நீதிபதி விளக்கமளித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரேசுவரி கல்வியியல் கல்லூரியில் தேசிய நுகர்வோர் தின விழா நடந்தது. செயலாளர் திலீபன்ராஜா தலைமை தாங்கினார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி சேகர் பங்கேற்றார்.

    அவர் பேசுகையில், நாம் வாங்கிய பொருட்களில் பழுதுகள் இருந்தால் அவற்றை சரிசெய்து கொடுக்கவும், பொருட்களை மாற்றவும் நுகர்வோருக்கு உரிமை உண்டு. நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை நீக்கவும், அவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், அவர்கள் அடையும் பொருளாதார இழப்பினை தவிர்க்கவும் 1986- களில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.

    நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது ரசீது இல்லை என்றாலும் வழக்கு தொடரலாம் என்றார். மாணவர்களின் வினாக்களுக்கு நீதிபதி விளக்கமளித்தார்.

    நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேசினர். மாணவிகள் தங்கநிலா, பவதாரணி தொகுத்து வழங்கினர். உதவிப் பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.

    • திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் வலியுறுத்தினார்.
    • இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ராஜசேகரிடம் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சி லர் சரோஜா கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கூரைக்குண்டு பஞ்சாயத்து சாத்தூர் ரோடு நான்கு வழிச்சாலை அருகே புதிய சமுதாயக்கிணறு கடந்த 2020-21ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கிணற்று நீரை முத்துராமலிங்கம் நகர், நிறைவாழ்வு நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    சமுதாய கிணற்றில் இருந்து கோடைகால தேவைக்கு குடிநீர் விநியோ கம் செய்ய முடியாத நிலையில் அது காட்சி பொருளாக உள்ளது.

    எனது முயற்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் பாலம்மாள் நகர் பகுதியில் புதிய கழிவுநீர் கால்வாய் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதற்காக மாவட்ட ஊராட்சி பொது நிதி ரூ.4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மேற்படி பணி நடைபெறா மல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கூரைக்குண்டு பஞ்சாயத்தில் 1, 4-வது வார்டு பகுதிகளான முத்துராம லிங்கம் நகர், பாலம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் இதுவரை கிராமசபை கூட்டம் நடத்தப்படவில்லை. மேற்படி பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை.

    இதனால் எனது 9-வது வார்டு பகுதியின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர் பாக கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆனைக்குட்டம் அணையை புனரமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த திட்டம் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணையில் ரூ.49கோடியில் புனரமைக்கப்படும் பணி தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனைக்குட்டம் அணையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அணையின் தன்மை, மதகில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து செயற்பொறியாளர் மூலம் அணை பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளரை தொடர்பு கொண்டு இந்த திட்டம் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி செயற்பொறியாளர் அமுதா, உதவி பொறியாளர் சுந்தரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 96 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி-தங்க நாணயங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
    • தலைவர் சுந்தரலட்சுமி, யூனியன் தலைவர் சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுப்பாராஜ் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    இதில் அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு யூனியனை சேர்ந்த 96 ஏழை பெண்களுக்கு ரூ.42 லட்சத்து 92 ஆயிரத்து 448 மதிப்பில் 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் திருமண நிதியுதவிகள் என மொத்தம்; ரூ.87 லட்சத்து42 ஆயிரத்து 448 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது படித்து காவல்துறையில் பணி பெற்று, சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் பெண்கள் பணியாற்றி வரும் காலமாக இருக்கிறது.

    போதிய பணவசதி இல்லாத காரணத்தால் ஏழை பெண்களின் திருமணம் தடைபடுவதால், திருமண நிதியுதவி திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டபடிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும், வழங்கப்படுகிறது.

    பெண் குழந்தைகள் படிக்க வைக்க வேண்டும். படிக்க வைப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை அவர்களாகவே உருவாக்கி கொள்ள முடியும். பெண்கள் கல்வி கற்பதற்கும், வாழ்வில் ஆண்களுக்கு நிகராக முன்னேற்றம் அடைவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து உருவாக்கி தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, யூனியன் தலைவர் சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம நிர்வாக அதிகாரி- உதவியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    • 1000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் மதன்குமார். உதவியாளராக இருப்பவர் கருப்பையா. இவர்களது அலுவலகத்துக்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் 1000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இதன் அடிப்படையில் இதுகுறித்து விசாரணை நடத்திய சாத்தூர் ஆர்.டி.ஓ. அனிதா இவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    • மதுரை, விருதுநகர், சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    • 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சிவக்குமார் மதுரை டி.கல்லுப்பட்டி மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் உதவி இயக்குநர் மற்றும் விரிவுரை யாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் விருதுநகரில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் சாந்தி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குநராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் ராஜ்மோகன் மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமிக்கப் பட்டுள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலு வலராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் இளங்கோவன் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடு மற்றும் சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பிற கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.
    • சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினர் முதலிடத்தை பிடித்து வெற்றி கேடயத்தை பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றத்தின் சார்பில் "வானம்பாடி 2023" என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். பேச்சு, கோலம், மருதாணிப் போட்டி, முகஓவியம், நெருப்பின்றி சமைத்தல், காய்கறிகளில் உருவம் அமைத்தல், வினாடி-வினா, மவுன நாடகம், நிலைக்காட்சி, கிராமிய நடனம் உள்ளிட்ட 10 போட்டிகள் நடந்தன.

    இதில் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 9 கல்லூரிகளில் இருந்து 220 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழியல் துறைத்தலைவர் அமுதா வரவேற்றார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் பொற்கொடி நன்றி கூறினார். இந்த நிகழ்வை தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் மரியசெல்வி உள்ளிட்ட தமிழியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்தனர். ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினர் முதலிடத்தை பிடித்து வெற்றி கேடயத்தை பெற்றனர்.

    • சொத்து வரியை குறைக்க கோரி வருகிற 28-ந் தேதி முற்றுகை போராட்டம் நடக்கிறது
    • ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்கம், அறம் அறக்கட்டளை, முகநூல் நண்பர்கள், தெரசா நற்பணி இயக்கம், தென்னை விவசாயிகள் சங்கம், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம், நேதாஜி ரத்ததான கழகம், தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தமிழகத்திலேயே அதிகமாக வரிவிதித்துள்ள (சென்னை 12.40%, ராஜபாளையம் 20.80%) ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை குறைக்க வலியுறுத்தியும், தாமிரபரணி தண்ணீருக்கு 3 மடங்கு (மாதம் ரூ.50 என்பதை 150 ஆக) உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், ராஜபாளையம் நகரில் 5 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகத்தை வருகிற 28-ந் தேதி முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    • விருதுநகர் மாவட்டத்தில் 22-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொரு ளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவா தித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது குறித்து விவாதித்தல் நடக்கிறது.

    மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள் குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சித்திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவா தித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்தல் நடக்கிறது.

    எனவே வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    ×