என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய நுகர்வோர் தின விழா
- சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் தேசிய நுகர்வோர் தின விழா நடந்தது.
- மாணவர்களின் வினாக்களுக்கு நீதிபதி விளக்கமளித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரேசுவரி கல்வியியல் கல்லூரியில் தேசிய நுகர்வோர் தின விழா நடந்தது. செயலாளர் திலீபன்ராஜா தலைமை தாங்கினார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி சேகர் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், நாம் வாங்கிய பொருட்களில் பழுதுகள் இருந்தால் அவற்றை சரிசெய்து கொடுக்கவும், பொருட்களை மாற்றவும் நுகர்வோருக்கு உரிமை உண்டு. நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை நீக்கவும், அவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், அவர்கள் அடையும் பொருளாதார இழப்பினை தவிர்க்கவும் 1986- களில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது ரசீது இல்லை என்றாலும் வழக்கு தொடரலாம் என்றார். மாணவர்களின் வினாக்களுக்கு நீதிபதி விளக்கமளித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேசினர். மாணவிகள் தங்கநிலா, பவதாரணி தொகுத்து வழங்கினர். உதவிப் பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.






