என் மலர்
விருதுநகர்
- பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவிர்த்தான் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சமுத்திரகனி (வயது40). இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் மேலும் உடல்நிலை மோசமானது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சமுத்திரக்கனி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி கதிரேஸ்வரி (30). சம்பவத்தன்று இவர்களது மகளுக்கு காய்ச்சல் இருந்தது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் விரக்தியடைந்த கதிரேஸ்வரி வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள முள்ளிக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்ற பிச்சை (54). இவர் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி ஜமீன் சல்வார் பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (47). மது பழக்கம் காரணமாக நோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக விரக்தியில் இருந்த ஈஸ்வரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சோழபுரம் வெக்காளியம்மன் கோவில் அருகே லாரி சென்றபோது எஞ்சினில் ஏர் லாக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- வாயால் ஊதி ஏர் லாக்கை வேலுசாமி அகற்ற முயன்றார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மருதப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 65). லாரி டிரைவரான இவர் சங்கரன்கோவிலில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு ராஜபாளையம் அருகில் உள்ள சத்திரப்பட்டிக்கு வந்தார். அங்கு லோடு இறக்கிவிட்டு மீண்டும் சங்கரன்கோவில் புறப்பட்டார்.
சோழபுரம் வெக்காளியம்மன் கோவில் அருகே லாரி சென்றபோது எஞ்சினில் ஏர் லாக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாயால் ஊதி ஏர் லாக்கை வேலுசாமி அகற்ற முயன்றார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேலுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேலுசாமியின் மகன் சின்னராஜ் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 58 மகளிர் குழுக்களுக்கு ரூ.4.36 கோடி கடனுதவியை கலெக்டர் வழங்கினார்
- வங்கிகள் உங்களை தேடி வந்து கடன்களை கொடுக்கின்றன.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் இணைந்து மாபெரும் மகளிர் சுய உதவிக்குழு கடன் முகாமை நடத்தியது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
இதில் 58 மகளிர் குழுக்களுக்கு ரூ.4 கோடியே 36 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான கடனு தவிகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளின் மூலமாக கலெக்டர் வழங்கி னார்.
முகாமில் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு புதிய கடன்களை அதிகமாக வழங்கியிருக்கிறோம். விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கக்கூடிய கடன்கள் வாரா கடன்களாக மாறுகின்றனவா? என்றால் இல்லை. அனைத்து குழுக்களும் தாங்கள் பெறக்கூடிய கடன்களை முழுமையாக திரும்ப செலுத்தி விடுகின்றன. அதனால் தான் வங்கிகள் உங்களை தேடி வந்து கடன்களை கொடுக்கின்றனர்.
புதிதாக உங்களுக்கு கடன்களை வழங்கக்கூ டியது, புதிதாக உங்களுக்கு கடன்களை பெறக்கூடியது, தனிநபர் அல்லது குழுவின் உடைய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகும். ஒரு நாடாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி உங்களின் வருமானத்தை பெருக்கு வதற்கு புதிய முதலீடுகளை செய்ய வேண்டும்.
பெண்களுக்கு உண்மை யான வலிமை, உண்மையான சுதந்திரம், விடுதலை என்பது அவர்களின் பொருளாதார வலிமையை பொறுத்தது தான் ஆகும். நீங்கள் பொருளாதார வலிமையை அடைவதற்கு நிறைய பணத்தை நல்ல வழியில் அதனை ஈட்டுவதற்கு நாம் வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்கு மிகவும் முக்கிய மானது ஒரு முதலீடு. அந்த முதலீட்டை வைத்து உங்கள் உழைப்பால், திறமையால், அர்ப்பணிப்பால் பெண்கள் பெரிய அளவில் பொருளா தார வலிமை பெற முடியும். பொருளாதார வலிமை இருந்தால் உங்களால் நிறைய சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் நாகையா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், ஊரக கிராமிய பயிற்சி மைய இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. உதவிப்பேராசிரியை சாந்தி வரவேற்றார். ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா, உதவிப் பேராசிரியர்கள் சாந்தா கிறிஸ்டினா, ஸ்வப்னா ஆகியோர் பேசினர்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வகுப்பாசிரியர்களிடம் கலந்துரையாடினார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை குறிப்புகள் பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உதவிப்பே ராசிரியர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிக நிறும செயலரியல் துறை சார்பில் மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நோக்கமானது மாணவர்களிடையே சந்தையிடுதல் குறித்த சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதாகும். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
இதில் 105 மாணவர்கள் இணைய வழி சந்தையிடுதலை மையமாக வைத்து விளம்பர நடிப்பு மற்றும் வண்ண கோலம் வரைதல் போன்ற போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றனர். துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் விண்ணரசி ரெக்ஸ் போட்டிக்கான விதிமுறை களை எடுத்துரைத்தார்.
முடிவில் உதவி பேராசிரியர் சூர்யா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் ஜாஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார்.
- விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தமிழ்செல்வி(28). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த தமிழ்செல்வி திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதையடுத்து நாகராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே மந்திரியோடை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும், விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை யடுத்து அவரது தாயார் ஆவியூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
சாத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் மேட்டுராஜா(43), பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. வியாபார நஷ்டம் காரணமாக மேட்டுராஜா பலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மீண்டும் கடன் வாங்க முடிவு செய்தார்.
ஆனால் இதற்கு கிருஷ்ணவேணி சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வெளியே சென்ற மேட்டுராஜா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் காணமுடியா ததால், கிருஷ்ணவேணி சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா தொடங்குகிறது.
- தக்கார் ரவிச்சந்திரன், அறங்காவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
108 வைணவ கோவில்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரனது ஆண்டாள், பெரியாழ்வார் என இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரிய தலமாகும். இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து பங்குனி உத்திர நாளில் ரங்க மன்னாரை மணம் புரிந்தார் என்பது வரலாறு ஆகும்.
ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லி புத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 28-ந் தேதி
(செவ்வாயக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
13 நாட்கள் விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஏப்ரல் 1-ந் தேதி 5-ம் நாள் விழாவில் கருட சேவை நடைபெறுகிறது.
விழாவின் உச்ச நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை செப்புத்தேரில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதன்பின் பெரியாழ்வார் ஆண்டாளை கன்னிகா தானம் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது.
பின்னர் ஆடிப்பூர கொட்டகையில் எழுந்தருளும் ஆண்டாள்- ரங்கமன்னாருக்கு இரவு 7 முதல் 8 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெறும். 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) குறடு மண்டபத்தில் புஷ்பயாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
திருக்கல்யாண திருவிழாவிற்காக கோவிலில் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், அறங்காவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.
- பி.எம் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்காவை செயல்படுத்த இடம் தேர்வு செய்யப்படும்.
- பிரதமர் மோடியையும், மத்திய மந்திரி பியூஷ் கோயலையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறயி ருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பி.எம் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா அமைக்க விருதுநகர் மாவட்டம்,
இ.குமாரலிங்கபுரம் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் மூலமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பெரிதும் பயனடையும்.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கா புரத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம்.மித்ரா) அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தும், தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டுமென தெரிவித்தும், முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஆகியோருக்கு 18-3-2023 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) இந்த பூங்கா அமையவுள்ள இடத்தில் ஏற்கெனவே 1.052 ஏக்கர் நிலத்தை தன்வசம் வைத்துள்ளதாகவும், அதனால் அந்த நிறுவனம் இந்த திட்டத்தை உடனடியாக அங்கு செயல்படுத்த தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனம் பெரிய தொழில் பூங்காக்களை நிறுவி தனது திறனை நிரூபித்துள்ளது என்றும், தற்போது மாநிலத்தில் 2 ஆயிரத்து 890 நிறுவனங்கள் 39 லட்சத்து 4 ஆயிரத்து 785 பணியா ளர்களுடன், 38.522 ஏக்கரில் 28 தொழிற்பேட்டைகளை இந்த நிறுவனம் நிறுவியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் தொழிற் பூங்காக்களில் தொழில் தொடங்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தனியாரால் மேம்படுத்தப்பட்டுள்ள தொழிற் பூங்காக்கள் குறைந்த அளவிலேயே வெற்றியை கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் பி.எம். மித்ரா ஜவுளி பூங்காவை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தினால் இந்தத் திட்டத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக அடைய இயலும் என்று தமிழக அரசு உறுதியாக நம்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான நிலங்களை தன்வசம் வைத்துள்ள சிப்காட் நிறுவனம், ஏற்கெனவே பல்வேறு தொழிற் பூங்காக்களை மேம்படுத்தி செயல்படுத்துவதில் உறுதியான சாதனை நிகழ்த்தியுள்ளதால் தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனத்தின் மூலம் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம் மித்ரா) திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் மோடியையும், மத்திய மந்திரி பியூஷ் கோயலையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் அருகே தோட்டத்து கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் நதியா(வயது23).
நர்சிங் முடித்துள்ள இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கற்பகம் வேலைக்கு செல்லு ம்போது மகளையும் உடன் அழைத்துச்சென்று வந்தார்.
சம்பவத்தன்று கற்பகம் வேலைக்கு செல்லும்போது மகளை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு நதியா வரவில்லை என கூறி மறுத்து விட்டார். இதையடுத்து கற்பகம் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களிடம் மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறி வேலைக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் வீட்டில் இருந்த நதியா திடீரென மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த கற்பகம் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அதே ஊரை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் நதியா பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். நதியா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி பேருந்தில் திடீரென புகை ஏற்பட்டது.
- டிரைவர் சமயோசிதத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.
ராஜபாளையம்
சிவகாசியில் உள்ளது பிரபல தனியார் கல்லூரி. ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகள் கல்லூரி பேருந்தில் தினமும் கல்லூரிக்கு செல்வது வழக்கம். இன்று காலை வழக்கம் போல கல்லூரி பேருந்து மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு ராஜபாளையம் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. தென்காசி ரோட்டில் பஸ் சென்று கொண்டிருந்த போது பேட்டரி பகுதியில் இருந்து புகை வெளியானது. இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர். பஸ்சிலிருந்து டிரைவர் இறங்கிவந்து பேட்டரி பேனல் கதவைத் திறந்து பார்த்த போது அதிக புகை வெளியானது. உடனடியாக சமயோசிதமாக பேட்டரி வயரை துண்டித்து மாணவ-மாணவிகளை பஸ்சிலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிட்டார். இதனால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆனால் சென்சாரை சரி செய்தால் மட்டுமே பஸ்சை நகர்த்த முடியும் என்பதால், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிக்க அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழைய பஸ் நிலைய மேம்பாட்டுப் பணிகள், தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதால் அந்த சாலையே தற்போது பிரதான சாலையாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் மெக்கானிக்கை வரவழைத்து கடுமையாகப் போராடி பஸ்சை அப்புறப்படுத்தி சரிசெய்து அனுப்பிவைத்தனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- செண்பக தோப்பு பகுதியில் பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியது.
- செண்பக தோப்பு வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பக தோப்பு பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாழை, பப்பாளி, மா உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட செண்பக தோப்பு வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாததால் காட்டாறுகள் வறண்டு காணப்படுகிறது.
கோடை காலம் தொடங்கும் முன்பே கடுமையான வெயில் அடிப்பதால் ஊற்றுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி மலை அடிவாரத்திற்கு வருகின்றன. அடிவா ரப்பகுதியில் வனத்துறை சார்பில் தொட்டிகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக மலை அடிவாரத்திற்கு தண்ணீர் தேடி வரும் ஒற்றை காட்டு யானை தோட்டத்தில் உள்ள வாழை, மா, பப்பாளி உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் அடிவாரத்தில் அமைக்கப்பட்டது போல் மலைப்பகுதியிலும் தண்ணீரை தேக்கி வைத்தால் வனவிலங்குகள் விளை நிலங்களுக்கு வருவது தவிர்க்கப்படும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
- தமிழக பட்ஜெட்டில் அனைத்து துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
தமிழக பட்ஜெட் குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொலைநோக்கு பார்வை யோடு தயாரிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சமூக நீதிக்கான பட்ஜெட்டாகும்.
குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதியாண்டில் இருந்து மாதம் ரூ.1000 உரிமைத் தொகை யாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்தையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
அதேப்போல விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் நகரில் இருந்து மதுரை ஒத்தக்கடை வரை மெட்ரோ ெரயில் திட்டம் ரூ.8ஆயிரத்து 800 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருப்பது அனைத்து மக்களையும் மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.
மதுரைக்கு மெட்ரோ ெரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தேன். என் குரலுக்கு மதிப்பளித்து மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
பள்ளிக்கூடம் முதல் (காலை உணவு) ஏரி, குளங்கள் சீரமைப்பு, பன்னோக்கு, மருத்துவ மனைகள், போக்குவரத்து 14 ஆயிரத்து 500 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் திட்டங்கள் என அனைத்து துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது தொலை நோக்குப் பார்வையான பட்ஜெட் என்பதற்கும், சமூக நீதிக்கான பட்ஜெட் என்பதற்கும் எடுத்துக் காட்டுகள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை ஆசிரமத்தில் மனைவி சேர்ந்ததால் கடை உரிமையாளரை, வாலிபர் தாக்கினார்.
- இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி நடுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 32). இவர் அதே பகுதியில் பெயிண்ட் கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் தென்காசி மாவட்டம் ராயகிரி நடுத்தெருவை சேர்ந்த கண்ணன்(42) என்பவரின் மனைவி ஜெய பிரபா(35) வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி ஜெயபிரபா திடீரென மாயமானார். தனது மனைவியை கண்ணன் பல இடங்களில் தேடினார். மேலும் பலரிடம் விசாரித்தார்.
அப்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு ஆசிர மத்தில் ஜெயபிரபா தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற கண்ணன், தன்னுடன் வருமாறு மனைவியை அழைத்தார்.
ஆனால் ஆசிரமத்திலேயே இருக்க விரும்புவதாக கூறி அவருடன் செல்ல ஜெ யபிரபா மறுத்துவிட்டார்.மனைவி ஆசிரமத்தில் சேர்ந்ததற்கு அவரது கடை உரிமையாளர் கதிரேசன் தான் காரணம் என நினைத்து கண்ணன் அவர் மீது ஆத்திரமடைந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று பெயிண்ட் கடைக்கு சென்ற அவர், மனைவி ஆசிரமத்தில் சேர்ந்ததற்கு கதிரேசன்தான் காரணம் எனக்கூறி கதிரேசனுடன் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கண்ணன் அவரை அடித்து உதைத்தார்.
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் கதிரேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






