என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை
    X

    பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை

    • பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவிர்த்தான் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சமுத்திரகனி (வயது40). இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் மேலும் உடல்நிலை மோசமானது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சமுத்திரக்கனி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி கதிரேஸ்வரி (30). சம்பவத்தன்று இவர்களது மகளுக்கு காய்ச்சல் இருந்தது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் விரக்தியடைந்த கதிரேஸ்வரி வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள முள்ளிக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்ற பிச்சை (54). இவர் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி ஜமீன் சல்வார் பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (47). மது பழக்கம் காரணமாக நோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக விரக்தியில் இருந்த ஈஸ்வரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×