search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    58 மகளிர் குழுக்களுக்கு ரூ.4.36 கோடி கடனுதவி
    X

    நிகழ்ச்சியில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    58 மகளிர் குழுக்களுக்கு ரூ.4.36 கோடி கடனுதவி

    • விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 58 மகளிர் குழுக்களுக்கு ரூ.4.36 கோடி கடனுதவியை கலெக்டர் வழங்கினார்
    • வங்கிகள் உங்களை தேடி வந்து கடன்களை கொடுக்கின்றன.

    விருதுநகர்,

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் இணைந்து மாபெரும் மகளிர் சுய உதவிக்குழு கடன் முகாமை நடத்தியது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    இதில் 58 மகளிர் குழுக்களுக்கு ரூ.4 கோடியே 36 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான கடனு தவிகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளின் மூலமாக கலெக்டர் வழங்கி னார்.

    முகாமில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு புதிய கடன்களை அதிகமாக வழங்கியிருக்கிறோம். விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கக்கூடிய கடன்கள் வாரா கடன்களாக மாறுகின்றனவா? என்றால் இல்லை. அனைத்து குழுக்களும் தாங்கள் பெறக்கூடிய கடன்களை முழுமையாக திரும்ப செலுத்தி விடுகின்றன. அதனால் தான் வங்கிகள் உங்களை தேடி வந்து கடன்களை கொடுக்கின்றனர்.

    புதிதாக உங்களுக்கு கடன்களை வழங்கக்கூ டியது, புதிதாக உங்களுக்கு கடன்களை பெறக்கூடியது, தனிநபர் அல்லது குழுவின் உடைய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகும். ஒரு நாடாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி உங்களின் வருமானத்தை பெருக்கு வதற்கு புதிய முதலீடுகளை செய்ய வேண்டும்.

    பெண்களுக்கு உண்மை யான வலிமை, உண்மையான சுதந்திரம், விடுதலை என்பது அவர்களின் பொருளாதார வலிமையை பொறுத்தது தான் ஆகும். நீங்கள் பொருளாதார வலிமையை அடைவதற்கு நிறைய பணத்தை நல்ல வழியில் அதனை ஈட்டுவதற்கு நாம் வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும்.

    அதற்கு மிகவும் முக்கிய மானது ஒரு முதலீடு. அந்த முதலீட்டை வைத்து உங்கள் உழைப்பால், திறமையால், அர்ப்பணிப்பால் பெண்கள் பெரிய அளவில் பொருளா தார வலிமை பெற முடியும். பொருளாதார வலிமை இருந்தால் உங்களால் நிறைய சாதிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் நாகையா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், ஊரக கிராமிய பயிற்சி மைய இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×