ஆனைக்குட்டம் அணையை புனரமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

ஆனைக்குட்டம் அணையை புனரமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த திட்டம் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆனைக்குட்டம் அணையை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. அருகில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன் உள்ளனர்.
ஆனைக்குட்டம் அணையை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. அருகில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன் உள்ளனர்.
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணையில் ரூ.49கோடியில் புனரமைக்கப்படும் பணி தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனைக்குட்டம் அணையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அணையின் தன்மை, மதகில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து செயற்பொறியாளர் மூலம் அணை பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளரை தொடர்பு கொண்டு இந்த திட்டம் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி செயற்பொறியாளர் அமுதா, உதவி பொறியாளர் சுந்தரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com