என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார்.
    • மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து  தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

    நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார். நடந்துவரும் பாதையின் இருபுறமும் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தவெக கட்சிக் கொடி வடிவிலான துண்டுகளை மேடை மீது அவர்கள் வீசினர். அதை அன்போடு எடுத்து தனது தோளில் அணிந்துகொண்டார்.

    அவ்வாறு வீசப்பட்ட கொடிகள் பலவற்றை எடுத்து தனது தோளில் அவர் போட்டுக்கொண்டது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பாதுகாவலர் ஒருவரும் உற்சாக மிகுதியில் நடைபாதை மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    நடைபாதையிலிருந்து நிகழ்ச்சி மேடையில் ஏறிய விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மாமன்னர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வி.சாலையில் நடைபெறுகிறது.
    • நடிகர் விஜய்-க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வந்ததும், அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அவரை நோக்கி தொண்டர்கள் வீசிய கட்சி கொடியை, த.வெ.க. தலைவர் விஜய் தன் கழுத்தில் அணிந்து கொண்டார்.

    அதன்பிறகு மேடைக்கு சென்ற விஜய் அங்கு வைக்கப்பட்டு இருந்த மாமமன்னர்கள், மொழிப்போர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த 100 உயர கொடி கம்பத்தில் த.வெ.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் கட்சி கொடியை ஏற்றும் போது தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதைத் தொடர்ந்து த.வ.க. தொண்டர்கள் கட்சி உறுதிமொழி ஏற்றனர்.த.வெ.க. பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்தனர். த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு இதுவரை சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்று தெரியவந்துள்ளது.


    • மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வந்துள்ளனர்
    • தொண்டர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும்

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற உள்ளது. பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு  முழுவதும் இருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதுவரை மாநாட்டுக்கு மொத்தம் 8 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் அதிகம் உள்ளதால் மாநாட்டை முன்கூட்டியே முடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    தொண்டர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வி.சாலையில் நடைபெறுகிறது.
    • நடிகர் விஜய்-க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். த.வெ.க. தலைவர் விஜய்யை பார்த்ததும், மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    முன்னதாக மாநாடு துவக்கத்தில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 41 கலைஞர்கள் சேர்ந்து பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்டவை த.வெ.க. மாநாட்டு மேடையில் இடம்பெறுகிறது. மேலும் கோவையை சேர்ந்த 27 பேர் அடங்கிய குழு வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடுகின்றனர்.

    கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழக அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த நடிகர் விஜய் அதன் பிறகு கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியானது.

    இதன் தொடர்ச்சியாக விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்றது. அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு துவங்கியது.

    த.வெ.க. மாநாட்டுக்கு வந்திருப்பவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற் காக 4 இடங்களில் பார்க் கிங் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள கீரைக் கொண்டை என்ற இடத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்பில் வாகனங்களை நிறுத்த பெரிய பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.

    இது தவிர 80 ஏக்கரில் ஒரு இடம், 37 ஏக்கரில் ஒரு இடம், 40 ஏக்கரில் இன்னொரு இடம் என மொத் தம் 4 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த வாகன நிறுத்தும் இடங்கள் அனைத்தும் கார், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களால் நிரம்பி வழிந்தது.

    வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் டயர் பஞ்சரானால் அதனை சரி செய்வதற்காக மெக்கானிக்குகளும் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    • கையேந்தி பவன் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • ஓட்டல்களில் உணவு வகைகளும் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன.

    விக்கிரவாண்டியில் நடைபெறும் த.வெ.க. மாநாட்டுக்கு வந்த தொண் டர்கள் மற்றும் நிர்வாகி களால் திண்டிவனத்தில் இருந்து விக்கிரவாண்டி சாலை வரையில் உள்ள அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழிந்தன.

    மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி உள்ள பெரிய ஓட்டல்கள் முதல் சிறிய ஓட்டல்கள் வரை அனைத்திலுமே கட்சி தொண்டர்கள் காலை, மதியம் என உணவை சாப்பிடுவதற்கு அலைமோதினார்கள். இதன் காரணமாக சாலை யோரம் உள்ள கையேந்தி பவன் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    காலை உணவாக இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளை தொண்டர்கள் வாங்கி சாப்பிட்டதால் ஓட்டல்களில் உணவு வகைகளும் சீக்கிரமாகவே விற்று தீர்ந்தன.

    மேலும் பலர் உணவுகள் கிடைக்காமல் திணறிவந்தனர். ஆனால் மாநாட்டில் இரவுநேர உணவுகளுக்கு மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ளது.
    • ஒரு தொண்டர் சத்தியமங்கலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு நடந்தே வருகை தருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரசிகர்கள் திரளாக வந்த வண்ணம் உள்ளனர். விஜய்-ன் முகமூடி அணிந்த படி தொண்டர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளனர்.

     

    இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களின் நெகிழ்ச்சி வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஒரு தொண்டர் சத்தியமங்கலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு நடந்தே வருகை தருகிறார்.

    மேலும் தமிழகவெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு சௌந்தரராஜா அவர்களின் தலைமையில், சென்னை, வடபழனியில் தொடங்கி விக்கிரவாண்டி வரை நமது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.

    பெங்களூருவில் இருந்து பாண்டிசேரி செல்லும் ரெயிலில் பயணித்த ரசிகர்கள் அடுத்த முதலமைச்சர் என கோஷம் எழுப்பி கொண்டாடினர்.

     இதற்கும் மேலாக மாநாட்டிற்கு விடுமுறை கொடுக்காததால் வேலையை உதறி விட்டு மாநாட்டிற்கு ஒரு தொண்டர் வருகை தந்துள்ளார்.

    தமிழ்நாட்டை தவிர கேரளா, கர்நாடகாவில் இருந்து விஜய் ரசிகர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள விழுப்புரம் செல்கிறார்கள். இந்த ரசிகர்கள் கர்நாடகாவில் இருந்து 289 கிலோமீட்டர் ஆட்டோவிலேயே மாநாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

    இப்படி தவெக மாநாடு தொடர்பான நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் விபத்தில் 3 தவெக தொண்டர்கள் இறந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. 

    • வாகனங்களை நிறுத்தி செல்பி எடுத்து செல்கின்றனர்.
    • குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    மாநாடு நடைபெறும் வி சாலை பகுதி தமிழகம் முழுவதும் பிரபலமான இடமாக தற்போது உருவெடுத் துள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் பலர் மாநாடு திடல் அருகே வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர்.

    இதுபோன்று நேற்று இரவு மின் ஒளியில் ஜொலித்த மாநாடு திடலை பார்ப்பதற்காக குடும்பத்துடன் குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    சொகுசு வாகனங்களிலும் மோட்டார் சைக்கிளிலும் மேலும் அருகில் உள்ள கிராம வாசிகள் சைக்கிள்களிலும் வந்து மாநாட்டு திடலை பார்த்து சென்றதால் சுற்றுலா தலம் போல் காட்சியளித்தது விக்கிரவாண்டி சாலை.

    • வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றது.
    • இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

    விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று பிரமாண்டமாக நடைபெறும் விஜய் கட்சி மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தமிழக வெற்றிக்கழக கட்சி தொண்டர்கள் அதிகாலை முதல் வாகனங்களில் அணிவகுத்த வண்ணம் உள்ளனர்.

    சென்னை- விக்கிரவாண்டி ஜி.எஸ்.டி ரோட்டில் விஜய் கட்சி கொடி கட்டிய கார்கள், பஸ்கள், வேன்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றது.

    இதன் காரணமாக விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, ஓங்கூர் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம் என கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் த.வெ.க. கட்சி வாகனங்கள் செல்ல தடுப்புகளை அகற்றி தனி வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் சென்று வருகின்றன.

    • திடலுக்குள் அனுமதிக்காததால் வெளியே காத்திருந்தனர்.
    • விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன்.

    வேலூர் அருகே உள்ள சோழவரத்தை சேர்ந்தவர் சுகன்யா. இவரது மகள் லாவண்யா அடுக்கம்பாறையில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். நேற்று இரவு தாயும் மகளும் வேலூரில் இருந்து புறப்பட்டு மாநாட்டு திடலுக்கு வந்தனர்.

    திடலுக்குள் யாரையும் அனுமதிக்காததால் திடலுக்கு வெளியே விடிய விடிய இருவரும் காத்திருந்தனர். இதுபற்றி லாவண்யா கூறியதாவது:-

    எனக்கு விஜய்யை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.இதுவரை நேரில் பார்த்தது கிடையாது. எப்படியாவது இந்த முறை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் புறப்பட்டு வந்தோம். எங்கள் ஊரில் இருந்து என்னைப்போல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள்.

    கண்விழித்து விடிய விடிய காத்திருந்தது கஷ்டமாக தெரியவில்லை. எப்படியாவது இன்று விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன். எனக்கு இப்போது 17 வயது ஆகிறது. வருகிற தேர்தலில் முதல் ஓட்டு போடுகிறேன். அதுவும் விஜய்க்கு போடப் போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
    • தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.

    விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மாநாடு தொடங்க இருக்கிறது. த.வெ.க. முதல் மாநில மாநாடு தொடங்குவதை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
    • இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு வந்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு வந்துள்ளார். மாநாட்டில் வந்த அவர், செய்தியாளர் கேட்ட கேள்விக்கு வேடிக்கையாக பதில் அளித்துள்ளார். அதில் தவெக மாநாட்டிற்கு செல்ல அலுவலகத்தில் விடுமுறை கேட்டேன், ஆனால் நிறுவனத்தில் விடுப்பு தர மறுத்தார்கள், மீறி எடுத்தால் வேலையை விட்டு நீக்குவேன் என கூறினார்கள், நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அப்படியே இங்கு வந்துவிட்டேன் என இளைஞர் பேட்டியளித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சில நாட்களுக்கு முன்னர், விடுப்பு தரவில்லை என்றால் வேலை உதறி விட்டு மாநாட்டிற்கு வருபவனே உண்மையான தொண்டன் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    ×