என் மலர்
வேலூர்
வேலூர்:
அனைத்து பொது வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் வங்கிகளை இணைக்ககூடாது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை விரைவுபடுத்த கோரியும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடக் கோரியும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த கோரியும் வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிட கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து பொது வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சம்பத்குமார், ரஜனி முன்னிலை வகித்தனர். கோபால், விஜயகுமார், கார்த்திகேயன், ஆனந்தன், சோமசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாரத ஸ்டேட்வங்கி முதன்மை வங்கி மேலாளர் கே.கே.மணி தலைமை வகித்தார் இந்தியன் வங்கி நவீந்திரன் வரவேற்றார். பாரத வங்கி புகழேந்தி இந்தியன் வங்கி கணேஷ் கனரா வங்கி ரமேஷ் விஐயாவங்கி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் கனரா வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் கார்த்திகேயன் விஜயா வங்கி ஞானசவுந்தரி வங்கி மேலாளர்கள் கோதண்டம் சார்லஸ் துனண மேலாளார்கள் சதிஷ் சுஜின் மதிவாணன் சரவணன் ரஞ்சித் உட்பட பலர் பேசினார்கள் ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கனரா வங்கி வைத்திஸ்வரி நன்றி கூறினார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் எட்வின்சேவியர். இவரது மகன் ஷத்ஜன்ராஜ் (வயது 19). இவர் காட்பாடி லட்சுமி நகரில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி கேட்டரிங் படித்து வந்தார்.
ஷத்ஜன்ராஜ் ஒருபெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் ஷத்ஜன்ராஜ் காதலை ஏற்க மறுத்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
திருவண்ணாமலை மாவட்டம் கம்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28), முதுகலை பட்டதாரி ஆசிரியரான இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அரக்கோணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.
இவர் 12-ம் வகுப்புக்கு பாடம் நடத்தும்போது தவறாக நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் பெற்றோர்களிடம் மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் ராமனுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீது விசாரணை நடத்த மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் நிஷாந்திக்கு அவர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிஷாந்தி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
அப்போது ஆசிரியர் வெங்கடேசன் வகுப்பறையில் எங்களை தொட்டு பேசுகிறார், தவறான, ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று மாணவிகள் கூறி உள்ளனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து 18 மாணவிகள் எழுத்துபூர்வமாக நிஷாந்தியிடம் கொடுத்து உள்ளனர்.
இதன் மூலம் ஆசிரியர் வெங்கடேசன், பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்த தனது விசாரணை அறிக்கையை கலெக்டர் ராமனிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தி சமர்ப்பித்தார். அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் வெங்கடேசன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் மேற்பார்வையில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று காவனூர் தோல்ஷாப் அருகே பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போலீசார் ஆசிரியர் வெங்கடேசனை பிடித்து ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று அதிகாலை 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை பெங்களூரை சேர்ந்த முகமதுதன்வீர் டிரைவர் ஓட்டிச் சென்றார். வேலூர் அடுத்த மோட்டூர் என்ற இடத்தில் பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில் பஸ் டிரைவர் முகமதுதன்வீர், கோவையை சேர்ந்த பிரகாஷ், குமரேசன், பாஸ்கர், ராஜேஷ், சத்தியநாதன், விஷ்ணுஹாசன், ஹரிகா, அன்னபூர்ணா உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்பூலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை பெரியமூக்கனூர் அருகே உள்ள தாய பவட்டம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கபடவில்லை. அப்பகுதி பெண்கள் குடிநீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு மனு கொடுத்தனர். ஆனால், இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் திடீர்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த திமிரி உள் வட்டத்திற்கு உட்பட்ட பழையனூர் பரதராமி ஏரிகளில் அரசு அனுமதியின்றி மண் கடத்திச் செல்வதாக ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம் பகவத் மற்றும் டி.எஸ்.பி. கலைச் செல்வம் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவர்கள் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்த 3 டிப்பர் லாரிகள், மண் அல்ல பயன்படுத்திய ஒரு ஜே.சி.பி. மற்றும் 2 பைக் பறிமுதல் செய்தனர். திமிரி பாத்திகாரன் பட்டியை சேர்ந்த அப்பாதுரை (44), அனந்தாங்கள் தேவேந்திரன் (43), நெமிலி வேடந்தாங்கலை சேர்ந்த ராஜ்குமார் (24) ஆகியோரை கைது செய்தனர்.
அதேபோல் பரதராமி ஏரியில் மண் அள்ளிக் கொண்டு இருந்த 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் பாபு (40), அலமேலு ரங்காபுரம் பழனி (28) 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். வழக்குப்பதிவு செய்து ஆற்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (60). அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் சிறுவர் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வருகிறார்.
இவரது கணவர் வெங்கடேஸ்வரன் (வயது62). இந்த காப்பகத்தில் அதிகளவில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுமிகளை கோட்டீஸ்வரி தனது வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முதியவர் வெங்கடேஸ்வரன், வீட்டுக்கு வரும் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக, வாரம் ஒரு முறை காப்பகத்துக்கு வரும் வாலாஜாவை சேர்ந்த வார்டன் மலர்விழியிடம் 3 சிறுமிகளும் புகார் செய்துள்ளனர். உடனடியாக அவர், சிறுமிகளை அழைத்து சென்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து, சிறுமிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய கோட்டீஸ்வரியை கைது செய்தனர். இதையறிந்த முதியவர் வெங்கடேஸ்வரன் தலைமறைவானார்.
இந்நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வருவதை அறிந்த வெங்கடேசன் வேலூர் ஜே.எம் 3-வது கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து முதியவர் வெங்டேஸ்வரன் மற்றும் கோட்டீஸ்வரி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி வெற்றிமணி உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரும் ஜெயிலில் அடைக்கபட்டனர்.
நாட்டறம்பள்ளி:
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 50), கூலி தொழிலாளி. இவரது கணவர் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விறகு எடுத்து வர அருகில் உள்ள அக்ராவரம் மலைப்பகுதிக்கு வளர்மதி சென்றார்.
வெகுநேரம் ஆகியும் வளர்மதி திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மலைப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வளர்மதி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அவர்கள் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வளர்மதியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வளர்மதிக்கு அதேபகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (வயது40) என்பவருடன் கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது. அவருக்கு வளர்மதி கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை போலீஸ் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அதே கிராமத்தில் உள்ள ஒரு மாமரத்தில் சிவலிங்கம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வளர்மதியை கொன்று விட்டு இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? சிவலிங்கம் எப்படி இறந்தார் என்பது குறுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 50), கூலி தொழிலாளி. இவரது கணவர் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விறகு எடுத்து வர அருகில் உள்ள அக்ராவரம் மலைப்பகுதிக்கு வளர்மதி சென்றார்.
வெகுநேரம் ஆகியும் வளர்மதி திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மலைப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வளர்மதி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அவர்கள் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வளர்மதியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வளர்மதிக்கு அதேபகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (வயது40) என்பவருடன் கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது. அவருக்கு வளர்மதி கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை போலீஸ் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அதே கிராமத்தில் உள்ள ஒரு மாமரத்தில் சிவலிங்கம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வளர்மதியை கொன்று விட்டு இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? சிவலிங்கம் எப்படி இறந்தார் என்பது குறுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து வந்த ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் போலீசாரை கண்டதும் ஓடினார்.
போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சித்தூர் ஆட்டோ நகரை சேர்ந்த ராஜசேகரன் (வயது 35), என்பது தெரியவந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறிய பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது.
மேலும் சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களிலும் திருட்டில் ஈடுபட்டுள்ளார். ராஜசேகரனை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
வேலூர் அடுத்த ஊசூர் புலிமேடு இந்திராநகரை சேர்ந்தவர் சின்னபையன் மகள் சுகன்யா (24). இன்று காலை வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கழுத்து அறுத்து கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.
ரத்த வெள்ளத்தில் சுகன்யா இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்ட அக்கம் பக்கத்தினர் அரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சுகன்யா குடும்பத்தினருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கோவில் கட்டுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இதில் சுகன்யா கொலை செய்யபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக வாலிபர் ஒருரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அசோகன் (வயது 48). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார்.
அசோகன் தனது குடும்பத்துடன் இன்று காலை ஜோலார்பேட்டைக்கு பைக்கில் சென்றார். ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த வேன் பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் இருந்து 3 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் 3 பேரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மலர்விழியை மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மலர்விழி இறந்தார்.
அசோகன் அவரது மகள் ஆர்த்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






