என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் கஸ்பா வ.உ.சி. தெருவில் 2 நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்போது வ.உ.சி. தெருவிற்கு குடிநீர் கொண்டு செல்லும் பைப் லைன் உடைந்து விட்டது.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து உடைந்த பைப் மீது ரப்பர் டியூப் சுற்றி விட்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை வ.உ.சி. தெருவிற்கு மாநகராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
அப்போது கழிவுநீர் கலந்த குடிநீர் துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் பைப் லைன் உடைந்து விட்டது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலட்சியத்துடன் இருந்து விட்டனர். இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் இந்த குடிநீரை பயன்படுத்தினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடைந்த குடிநீர் குழாய் பைப் லைனை சரி செய்து மீண்டும் குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேரம் மறியலில் ஈடுபட்டும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.
நாட்டறம்பள்ளி அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் வரலட்சுமி (வயது21). இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
பன்னீர் அதே பகுதியில் வசிக்கும் உறவுக்காரர் மகனுக்கும் மகள் வரலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். ஆனால் வரலட்சுமிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.
இதுகுறித்து தனது தந்தையிடம் பலமுறை முறையிட்டும் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தி வந்தனர்.
இதனால் மனமுடைந்த வரலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வரலட்சுமி இறந்தார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத் (வயது 40). இவர் உதேயேந்திரம் பகுதியில் மின் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி.
தம்பதியினர் நேற்று முன்தினம் வாணியம்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வீட்டை பூட்டிச் சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை ராஜேந்திரபிரசாத் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரபிரசாத்துக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ராஜேந்திரபிரசாத் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை பார்வையிட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காட்டுக்காநல்லூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மனைவி நளினி (வயது 51). இவர்களுடைய மகள் சென்னையில் உள்ளார். மகளை பார்ப்பதற்காக கணவன், மனைவி இருவரும் சென்னைக்குச் செல்ல முடிவு செய்தனர்.
அதற்காக ஊரில் இருந்து புறப்பட்ட அவர்கள், நேற்று பகலில் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து காட்பாடி ரெயில் நிலையத்துக்குச் செல்ல, ஒரு தனியார் பஸ்சில் ஏறினர். ஓடும் பஸ்சில் நளினியின் அருகில் 3 பெண்கள் அமர்ந்திருந்தனர். நளினி தனது கைப்பையை மடியில் வைத்திருந்தார். அந்தக் கைப்பையில் ரூ.3 ஆயிரம் இருந்தது.
காட்பாடி சில்க் மில் பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்ற போது, நளினியின் கைப்பையைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவரிடம் கூறினார். அந்த நேரத்தில், நளினியின் அருகில் அமர்ந்திருந்த 3 பெண்களும் பஸ்சை நிறுத்தி அவசர அவசரமாக கீழே இறங்கினர்.
அந்தப் பெண்கள் மீது சந்தேகமடைந்த நளினியும், திருநாவுக்கரசும் ஓடும் பஸ்சை நிறுத்தி, கீழே இறங்கி 3 பெண்களை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அதில் ஒரு பெண், நளினியின் கைப்பையை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. கைப்பையை பார்த்த நளினி, அதனை அப்பெண்ணிடம் இருந்து கைப்பற்றினார்.
கைப்பையைத் திருடிய 3 பெண்களை, அப்பகுதி மக்களின் உதவியோடு பிடித்து, விருதம்பட்டு போலீசில் ஒப்படைத்து, அவர்கள் மீது புகார் செய்தார்.
போலீசார், 3 பெண்களிடம் விசாரித்தனர். அவர்கள் சேலம் மாவட்டம் ஓமலூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மனைவி அலமேலு (25), கணேசனின் மனைவி சாந்தி (46), விக்ரமின் மனைவி கவிதா (29) எனத் தெரிய வந்தது. இதையடுத்து 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கல்கோவில் கிராமத்தை சேர்ந்த கங்கைஅமரன் மகள் மகாலெட்சுமி (வயது15). ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
அரையாண்டு தேர்வு விடுமுறை தினத்தையொட்டி பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மாணவி மகாலெட்சுமி இன்று காலை சிறப்பு வகுப்பில் பங்கேற்க பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். 2-வது மாடியில் உள்ள அவரது வகுப்பறைக்கு சென்றார் காலை 9.30 மணிக்கு மாணவி திடீரென 3-வது மாடிக்கு சென்றார்.
அங்கு சென்ற அவர் மாடியில் இருந்து திடீரென விழுந்தார். இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் ஓடிவந்தனர். அவர்கள் மாணவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மாணவியின் பெற்றோர் ஆலங்காயம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் உறவினர்கள் பள்ளியில் குவிந்தனர். அவர்கள் மாணவியின் உடலை கண்டு கதறி அழுதனர்.
ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து போலீசார், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒகேனக்கல்:
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்துள்ள நடு வேட்டந்தன்பட்டியை அருணாசலம். இவருடைய மகன் நவீன் (வயது18). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நவீன் மற்றும் அவருடைய உறவினர்கள் கடந்த 27-ந் தேதி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது ஊட்டமலை பரிசல் துறைக்கு சென்றனர். அங்குள்ள காவிரி ஆற்றில் நவீன் உறவினர்களுடன் குளித்தபோது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நவீனை தேடும் பணியில் பரிசல் ஓட்டிகள் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள் 2 நாட்களாக ஈடுபட்டனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. பின்னர் இன்று காலை 3-வது நாளாக அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நவீனின் உடல் ஊட்டமலை பரிசல் துறை அருகே கிடைத்தது. உடனே நவீனின் உடலை பரிசல் ஓட்டிகள் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர்:
அரக்கோணம் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்களை சரியான அளவில் எடைபோடாமல் அனுப்பப்படுகிறது.
இந்த செயலை கண்டித்து ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்கள் அனைத்தும் லாரியில் வரும் எடைதராசில் சரியான அளவில் எடையிட்டு அந்தந்த மாதத்திற்கான கலர்நூல் தையலிட்டு விற்பனையாளர் முன்பாக கடையிலேயே வழங்க கோரியும் தொடர்ந்து இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதை மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாநில மையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட செயற்குழு கூட்டத்தின் முடிவின்படியும் மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வருகிற 31-ந்தேதி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் ரேசன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று பேசுகிறார். மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
அரக்கோணம்:
நெமிலி அருகே உள்ள பத்திபுத்தூர் கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக குடிநீர் சப்ளை செய்யவில்லை.
இது தொடர்பாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில்
ஊராட்சி செயலாளர் குடிநீர் தொட்டி ஆபரேட்டர் ஆகியோருக்கு சம்பளம் வழங்காததால் குடிநீர் சப்ளை செய்யவில்லை எனக் கூறப்பட்டது.
இது தொடர்பாக நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதற்கு பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை பத்திபுத்தூரில் உள்ள நெமிலி-அரக்கோணம் சாலையில் மறியல் செய்தனர். பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராம லிங்கம், அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் அருகே உள்ள நாகலேரி வட்ட பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை புகுந்தது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியது.
நேற்று காலை அலமேலு என்ற பெண் மாட்டுக்கு தீவனம் எடுக்க கரும்புத் தோட்டத்துக்கு சென்றார். அப்போது சிறுத்தை சத்தமிட்டது. இதனால் திடுக்கிட்ட அந்த பெண் ஊருக்குள் சென்று பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கரும்புத்தோட்டத்துக்கு சென்றனர். பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து 3 பேரை தாக்கியது. பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அதைத்தொடர்ந்து ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். இதில் சிலர் சிறுத்தைப்புலி இருந்த பகுதியை நோக்கி கல்வீசினர்.
இதனால் கோபம் கொண்ட சிறுத்தை மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் புகுந்து தாக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் உயிர் தப்பினால் போதும் என கருதி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுத்தை அவர்களை துரத்தியது.
அப்போது சிறுத்தை தாக்கியதில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதுமக்கள் கலைந்து ஓடியதால் சிறுத்தை மறுபடியும் நாகலேரி முட்புதரில் புகுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் வனத்துறை அதிகாரி சோழராஜன், வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தாசில்தார் கிருஷ்ணவேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் 3 கூண்டுகள் கொண்டு வரப்பட்டது. அதில் மாட்டு இறைச்சி, கோழி, நாய் ஆகியவற்றை அடைத்து ஏரி பகுதியில் வைக்கப்பட்டது.
மேலும் சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.
வனத்துறையினர் மயக்க ஊசியுடன் இரவு முழுவதும் சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை. இன்று காலை கரும்பு தோட்டம், முள்புதர்களில் சிறுத்தையை தேடினர். அங்கு அது இல்லை அங்கிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. சிறுத்தை காட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளது.
அதனை பிடிக்க தொடர்ந்து வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். பொதுமக்கள் சிறுத்தையை பார்த்தால் அதை தாக்க முயற்சி செய்யவேண்டாம். அந்த இடத்தில் இருந்து வெளியேறி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். #Leopard
வாணியம்பாடி கலால் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் போலீசார் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கலையம்பட்டு என்ற இடத்தில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் போலியாக தயாரிக்கப்பட்ட பீர், பிராந்தி, ரம் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், மதுகடத்தி வந்த லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபாட்டில் கடத்தி வந்த வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த தங்கதுரை (வயது 26), என்பவரை கைது செய்தனர். இதேப்போல் அந்த வழியாக பைக்கில் வந்தவரை பிடித்து சோதனை நடத்தியதில் 150 லிட்டர் கள்ள சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
கள்ளசாராயம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த பழனி (வயது 57), என்பவரை கைது செய்தனர். #tamilnews
வாணியம்பாடி:
வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்தனர்.
நேற்று ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் கன்றுகுட்டி, 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது.
இந்த நிலையில் இன்று காலை நாகலேரி வட்டம் சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாரதி (வயது 45). இவரது தங்கை அலுமேலு (42). ஆகிய 2 பேரும் மாடுகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக ஏரிகரைக்கு சென்றனர்.
ஏரிக்கரை அருகே கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து அலுமேலுவை கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதி சிறுத்தையை விரட்டினார். அவரையும் கையில் கடித்தது. அப்போது அந்த வழியாக வந்த சந்தோஷ் என்பவரையும் சிறுத்தை கையில் கடித்தது.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சிறுத்தையை விரட்டியடித்தனர். பொதுமக்களை கண்டதும் சிறுத்தை மீண்டும் அங்கிருந்த கரும்பு தோட்டத்திற்கு சென்று பதுங்கி கொண்டது.
படுகாயமடைந்த 3 பேரையும் மீட்ட பொது மக்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்காயம் மற்றும் திருப்பத்தூர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிறுத்தைபுலியை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சிறுத்தை பதுங்கியுள்ள இடத்தில் திரண்டனர். கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் தீ வைத்தனர். மேலும் சிறுத்தை நோக்கி கற்களை வீசினர். அப்போது கூட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு நின்றிருந்த 2 பேரை கடித்து குதறியது. இதில் கமல் என்பருக்கு வயிறு பகுதியிலும், சுப்பு என்பவருக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #Leopard






