என் மலர்
நீங்கள் தேடியது "EB Employee house jewelry theft"
ஆம்பூரில் மின்ஊழியர் வீட்டுக்குள் புகுந்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர்:
ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத் (வயது 40). இவர் உதேயேந்திரம் பகுதியில் மின் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி.
தம்பதியினர் நேற்று முன்தினம் வாணியம்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வீட்டை பூட்டிச் சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை ராஜேந்திரபிரசாத் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரபிரசாத்துக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ராஜேந்திரபிரசாத் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை பார்வையிட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.