search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆற்காடு அருகே ஏரி மண் கடத்திய 5 பேர் கைது
    X

    ஆற்காடு அருகே ஏரி மண் கடத்திய 5 பேர் கைது

    ஆற்காடு அருகே ஏரி மண் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரி உள் வட்டத்திற்கு உட்பட்ட பழையனூர் பரதராமி ஏரிகளில் அரசு அனுமதியின்றி மண் கடத்திச் செல்வதாக ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம் பகவத் மற்றும் டி.எஸ்.பி. கலைச் செல்வம் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவர்கள் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்த 3 டிப்பர் லாரிகள், மண் அல்ல பயன்படுத்திய ஒரு ஜே.சி.பி. மற்றும் 2 பைக் பறிமுதல் செய்தனர். திமிரி பாத்திகாரன் பட்டியை சேர்ந்த அப்பாதுரை (44), அனந்தாங்கள் தேவேந்திரன் (43), நெமிலி வேடந்தாங்கலை சேர்ந்த ராஜ்குமார் (24) ஆகியோரை கைது செய்தனர்.

    அதேபோல் பரதராமி ஏரியில் மண் அள்ளிக் கொண்டு இருந்த 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் பாபு (40), அலமேலு ரங்காபுரம் பழனி (28) 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். வழக்குப்பதிவு செய்து ஆற்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×