என் மலர்
வேலூர்
குடியாத்தம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் சச்சின் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் தங்கம் நகர் 1-வது தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில் உள்ள 15 அடி ஆழ தரை தள குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்காக வேலைக்கு சென்றனர்.
கடந்த 2 நாட்களாக வேலை பார்த்து வந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது தொட்டியை சுத்தம் செய்ய கெமிக்கல் ரசாயனத்தை பயன்படுத்தினர்.
அந்த ரசாயனத்தில் இருந்து வெளியேறிய விஷ வாயுவினால் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை கண்ட நடராஜன் குடியாத்தம் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தொட்டியில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர்.
போலீசார் அவர்களை குடியாத்தம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இவர்களுக்கு எந்த நாட்டில் என்ன உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதாக இருக்கும்.
பொதுவாக இந்த ரெய்டு எல்லாம் ஒருவர் போனில் பேசுவதை வைத்து தான் உளவுத்துறை மூலம் அறிந்து சோதனை நடைபெறும். இது கூட தெரியாமல் அடுத்தவர் மீது பழிபோடுவது மிக தவறு.
இவ்வாறு அவர் கூறினார். #ITRaid #DuraiMurugan #ACShanmugam
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டோபிகானா பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35) மெக்கானிக். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு தீபக், தினேஷ், ஸ்ரீநாத் என்ற 3 மகன்கள் உண்டு. முரளிக்கும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு சுமதி(30) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த சம்பவம் முரளியின் மனைவி சுமதிக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர், தனது கணவருடனான பழக்கத்தை விட்டுவிடுமாறு சுமதியை கண்டித்துள்ளார். இதனால் முரளி அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இதன் காரணமாக முரளியின் மனைவி சுமதி மீது அந்தப்பெண் ஆத்திரமடைந்தார். மேலும் அவரை பழிவாங்க திட்டமிட்டார்.
24.10.2014 அன்று முரளியின் இரண்டாவது மகன் தினேஷ்(வயது 3) வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அவனை முரளியின் கள்ளக்காதலி சுமதி தனது வீட்டுக்கு கடத்திச்சென்றார். அங்கு சிறுவன் தினேசின் கை, கால்களை கட்டி, வாயையும் கட்டினார். தொடர்ந்து தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தார். பின்னர் சிறுவனின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் பீரோவில் மறைத்துவைத்து விட்டார். அதில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க மிளகாய் பொடியை தூவினார்.
இந்த நிலையில் மகனை காணாததால் முரளி மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சிறுவன் தினேசை கொலைசெய்தது பற்றி சுமதி தனது உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டார். உடனே போலீசார் சுமதியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது சிறுவன் தினேஷ் கொலை செய்யப்பட்டு பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், சுமதியை கைதுசெய்தனர்.
இந்த வழக்குவிசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி எஸ்.குணசேகர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். சிறுவனை கொலை செய்ததற்காக சுமதிக்கு 10 வருடமும், கொலையை மறைத்ததற்காக 3 வருடமும் சிறைத்தண்டனை விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம்-தக்கோலம் இடையே புதிய ரெயில் பாதையில் சிக்னல்கள் மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை சென்னை-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரலில் காலை 7.25 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22625) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22626) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் பெங்களூரு சதாப்தி ரெயில் (12027) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். பெங்களூருவில் காலை 6 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் சென்னை சதாப்தி அதிவிரைவு ரெயில் (12028) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.
பெங்களூரு - சென்னை அதிவிரைவு ரெயில் (12608), காட்பாடி ஜங்ஷன் வரை இயக்கப்பட்டு, காட்பாடியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் மைசூர்- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12610) காட்பாடியில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்தாகிறது.
வாஸ்கோடகாமா- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (17312) ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ஏப்ரல் 4 மற்றும் 11-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.
ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (22679) ஏப்ரல் 6 மற்றும் 13-ந் தேதியில் ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். அன்றைய தேதிகளில் ஜோலார்பேட்டையில் இருந்த சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படுகிறது.
பெங்களூரு- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (12640) ஏப்ரல் 14-ந் தேதி சோளிங்கர் வரை இயக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படும்.

சென்னை சென்ட்ரல்- வாஸ்கோடகாமா விரைவு ரெயில் (17311) சென்னை சென்ட்ரல்- ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 5 மற்றும் 12-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி அதிவிரைவு ரெயில் (22698) சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 7 மற்றும் 14-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.
தனப்பூர்- பெங்களூரு இடையே இயக்கப்படும் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12296) ஏப்ரல் 12-ந்தேதி கூடூர்- சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்- காட்பாடி வழியாக இல்லாமல், கூடூர்- ரேணிகுண்டா- திருப்பதி- காட்பாடி வழியாக இயக்கப்படும்.
பெங்களூரு- தனப்பூர் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12295) ஏப்ரல் 5-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை காட்பாடி- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி திருப்பதி- கூடூர் வழியாக இயக்கப்படும்.
பெங்களூரு- தர்பாங்க் வரை இயக்கப்படும் பாக்மதி அதிவிரைவு ரெயில் (12578) ஏப்ரல் 13-ந் தேதி முதல் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயங்கும்.
யஷ்வந்த்பூர் - கமாக்கியா அதிவிரைவு ரெயில் (12552) ஏப்ரல் 3 மற்றும் 10-ந் தேதியில் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் வழியாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயக்கப்படும்.
பெங்களூரு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12658) ஏப்ரல் 13-ந் தேதி காட்பாடி- அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் மார்க்கமாக இல்லாமல் காட்பாடி- வேலூர்- திருவண்ணாமலை- விழுப்புரம்- எழும்பூர்- கடற்கரை வழியாக இயக்கப்படும்.
நேரம் மாற்றியமைக்கப்படும் ரெயில்கள் விவரம்
சென்னை சென்ட்ரல் - சாய்நகர் வாராந்திர ரெயில் (22601) ஏப்ரல் 10-ந் தேதி காலை 10.10 மணிக்கு பதிலாக பிற்பகல் 1.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.
யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரெயில் ஏப்ரல் 14-ந் தேதி காலை 11 மணிக்கு பதிலாக மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
வேலூர் காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் அதிகாரிகள் குழு சோதனை நடத்த வந்தனர். வருமானவரித் துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் அந்த அதிகாரிகள் முரண்பட்டுப் பேசியதால், தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

திடீரென நள்ளிரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் சோதனை செய்ய வேண்டும் என்றனர். விவரங்களை கேட்டோம். பிறகு தவறாக வந்து விட்டோம் என கூறினர். சிறிது நேரம் கழித்து யாருடனோ செல்போனில் பேசி விட்டு மீண்டும் வந்தனர், நாங்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என கூறினர். யார், என்ன என்பது குறித்து தெரியாமல் உள்ளே விட மறுத்தோம். பின்னர் உள்ளே வந்து சோதனை நடத்தினர். எதுவும் சிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இது போன்று செயல்களில் அரசு ஈடுபடுவது முறையானதல்ல.
நாங்கள் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனம் நடத்தவில்லை. சாதாரண கல்லூரி தான் வைத்துள்ளோம். ஆனால் வேலூரில் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களை திசை திருப்பவே ஆளும்கட்சி இவ்வாறு செய்துள்ளது. இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எங்களுக்கு மன உளைச்சல் தரவும், களத்திலே நேருக்கு நேராக நின்று எதிர்க்க பலமின்றியும் இவ்வாறு செய்கின்றனர். மிரட்டுவது, பொய் கூறுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்து ‘மோடி ஜே’ என கூறிவிடுவோம் என எண்ணுகின்றனர். அவ்வாறு ஒருபோதும் நடக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Duraimurugan #DMK #Raid
வேலூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வேலூர் மண்டி தெருவில் திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-
மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. அதோடு தமிழகத்தை வஞ்சிக்கும் துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்துள்ளது. இது ஒரு மினி சட்டமன்ற தேர்தல். ஏனென்றால் இந்த 18 தொகுதிகளிலும் வெல்ல முடியவில்லை என்றால் மோடி என்ன?, அவர்களுக்கெல்லாம் டாடி வந்தால் கூட இவர்களை காப்பாற்ற முடியாது. இவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தான் ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெற வைத்தார்கள்.
துரோகிகளுடன் இணைந்து தற்போது இரட்டை இலையை தூக்கி கொண்டு வருகிறார்கள். இரட்டை இலைக்கு பின்னால் மோடி இருக்கிறார் என்று யாரும் மறந்து விடக்கூடாது. இந்த அமைச்சர்களுக்கு பின்னாலும் மோடி தான் இருக்கிறார். ஜெயலலிதாவின் கட்சி இது.

ஆனால் இந்த படுபாவிகள் ஆட்சியையே மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். ஜெயலலிதா கட்சி தொடங்கியதில் இருந்து கடைசி காலம் வரை அனுமதிக்கபடாதவர்கள் இன்று இரட்டை இலையை தூக்கிக் கொண்டு வந்து நம்மிடம் வாக்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் முடிவு கட்ட வேண்டும்.
மற்றொரு வேட்பாளரை அவரது தந்தை தத்து கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். ஆட்சியில் இல்லாத போதே பிரியாணி கடைகள், பியூட்டி பார்லர், டீ கடைகள் அடித்து நொறுக்குகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் இவர்களை ஆட்சி கட்டிலில் அனுமதிக்கவில்லை.
தற்போது அவர்கள் ராகுலுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஒருவேளை நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தீர்கள் என்றால் அடுத்த நிமிடமே அவர்கள் மோடியின் பக்கம் சென்று விடுவார்கள்.
ஏனென்றால் அவர்களின் வரலாறு அப்படி. கட்சி மாறுபவர்கள் அவர்கள். ஆட்சி அதிகாரத்துக்காக என்ன வேண்டும் என்றாலும் கூறுவார்கள். தமிழை வைத்து பிழைப்பு நடத்துவார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வாய் மூடி நின்றவர்கள் அவர்கள்.
வேலூர் மக்கள் அரசியல் அறிவு கொண்டவர்கள். தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது. பாலாறு, காவிரி, மீத்தேன், நீட் போன்ற பல்வேறு பிரச்சினைகளை தமிழகத்துக்குள் வர அவர்கள் கதவை திறந்து விடுவார்கள்.
தத்து கொடுத்து விட்டார்கள் என நினைத்து நீங்கள் ஏமாந்து வாக்களித்தால் உங்களது சொத்துகள் அனைத்தும் பறிக்கப்படும். அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நாடு சுருட்டப்படும். தமிழகத்தை விற்று விடுவார்கள். தமிழகத்தில் மக்கள் ஆட்சி மலர எங்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
சின்னம் கிடைப்பதற்காக நாங்கள் துரோகிகளிடம் போராடி நீதிமன்றம் சென்று சின்னம் பெற்றுள்ளோம். கூட்டணி கட்சியினரும் நம்முடைய வெற்றி சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்கள். நம்மிடம் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பிரிவினை கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran


வேலூர்:
வேலூர் அடுத்த திருமலைக்கோடி விஸ்வநாதன் நகர், சரஸ்வதி நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இது வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி பொதுமக்கள் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாசில்தார் ரமேஷ் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் தேர்தல் முடிந்து 4 மாதகாலத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டுவதற்காக ஊர் பொதுமக்கள் இடம் கேட்டனர். அதற்கு பெருமாள் சம்மதம் தெரிவித்து 2 சென்ட் இடத்தை தானமாக கொடுத்தார். கோவிலுக்கு மேலும் இடம் தேவை என்று ஊர்பொதுமக்கள் கேட்டதின் பேரில் மீண்டும் 2 சென்ட் இடத்தை தானமாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தானமாக கொடுத்த 4 சென்ட் இடத்தை விட கூடுதலாக இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெருமாள் தட்டி கேட்டார் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த சரவணன், பாலசுப் பிரமணியன், சண்முகம் ஆகிய 3 பேர் பெருமாளை சரமாறியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து பெருமாளின் மகன் அண்ணாமலை அமெரிக்காவில் இருந்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சரவணன், பாலசுப்பிரமணியன், சண்முகம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தைரியநாதன் இவரது மகன்கள் லால்ஆத்மநாதன் (வயது 36).டிவி மெக்கானிக் பிரபுநாதன் (30). கார் டிரைவர் இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த லால்அத்மநாதன் அவரது தம்பி பிரபுநாதனை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடித்த பிரபுநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பிரபுநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் இது தொடர்பாக லால்ஆத்மநாதனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






