என் மலர்
வேலூர்
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல மேலும் ஒரு ரெயில் வர தாமதம் ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜோலார் பேட்டையில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் இரவு பகலாக பணிகளை மேற்கொண்டனர். கடந்த 12-ந் தேதி முதல் ஜோலார்பேட்டையில் ரெயில் நிலையத்திலிருந்து 50 வேகன்களை கொண்ட ரெயில் 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சென்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீரை இறக்கி வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் ஒரு ரெயில் மூலம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னை நகர மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மற்றொரு ரெயில் 50 வேகன்களுடன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ரெயில் வேகன்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் ரெயில் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ரெயில் வர மேலும் 2 நாட்கள் ஆகும். அந்த ரெயில் வந்ததும் 2 ரெயில்களில் சென்னை மக்களுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.
ரெயில்களின் இயக்கத்தை படிப்படியாக உயர்த்தி தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு தற்போது மொத்தம் ரூ.58.75 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அவரது மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோரது பெயர்களில் மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதிர் ஆனந்த்திடம் மொத்தம் ரூ.14 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 870 மதிப்பிலும், அவரது மனைவியிடம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 618 மதிப்பிலும், மகள் செந்தாமரை பெயரில் ரூ.31 லட்சத்து 96 ஆயிரத்து 684 மதிப்பிலும் அசையும் சொத்துக்கள் உள்ளன.
இதில் கதிர் ஆனந்த் பெயரில் கையிருப்பாக பணம் ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்து 16, அவரது மனைவி பெயரில் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 879, கதிர் ஆனந்த் பெயரில் ரூ.65 லட்சத்து 25 ஆயிரத்து 437 மதிப்பிலான நகைகளும், அவரது மனைவி பெயரில் ரூ.27 லட்சத்து 18 ஆயிரத்து 637 மதிப்பிலும், மற்றவை வங்கியிருப்பு, பங்கு பத்திரங்களில் முதலீடு, காப்பீட்டு முதலீடு, நகைகளும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கதிர் ஆனந்தின் மனைவி பெயரில் மட்டும் ரூ.33 லட்சத்து 7 ஆயிரத்து 588 மதிப்பிலான கடன் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதிர் ஆனந்த் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், தனது குடும்பத்துக்கு மொத்தம் ரூ.57 கோடியே 24 லட்சத்து 94 ஆயிரத்து 163 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் 3 மாதங்களில் அவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரத்து 288 உயர்ந்து தற்போது மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர் ஆனந்த் பெயரில் ரூ.26 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரத்து 618 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.14 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 661 மதிப்பிலும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர் ஆனந்தின் மனைவி பெயரில் மட்டும் ரூ.33 லட்சத்து 7 ஆயிரத்து 588 மதிப்பிலான கடன் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதிர் ஆனந்த் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், தனது குடும்பத்துக்கு மொத்தம் ரூ.57 கோடியே 24 லட்சத்து 94 ஆயிரத்து 163 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் 3 மாதங்களில் அவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரத்து 288 உயர்ந்து தற்போது மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. நாளை வியாழக்கிழமை கடைசி நாளாகும்.
அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 21 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் இன்று மனுதாக்கல் செய்தார்.
கடந்த 15-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் வேலூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கடந்த முறை கதிர்ஆனந்த் மனுதாக்கல் செய்தபோது அவரது மனைவி சங்கீதா மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்தார். இவர் கணவருக்கு ஆதரவாக தீவிர பிரசாரமும் மேற்கொண்டார். எனவே இந்த முறையும் கதிர்ஆனந்தின் மனைவி மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதிர்ஆனந்த் மீது தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அதற்கு பதில் பலம் வாய்ந்த மாற்று வேட்பாளர் வேட்புமனு செய்வது தொடர்பான ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கடந்த முறை கதிர்ஆனந்த் மனுதாக்கல் செய்தபோது அவரது மனைவி சங்கீதா மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்தார். இவர் கணவருக்கு ஆதரவாக தீவிர பிரசாரமும் மேற்கொண்டார். எனவே இந்த முறையும் கதிர்ஆனந்தின் மனைவி மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் தொகுதியில் நாளை மனுதாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் 3 பேர் விரைவில் வருகை தர உள்ளனர்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை வியாழக்கிழமை கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க.வில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடு கின்றனர். இதுதவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட பலர் போட்டியிடுகிறார்கள்.
அந்தந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
தேர்தல் நாள் நெருங்கி வருவதால் பிரசாரம் களை கட்டியுள்ளது. ஓட்டு எந்திரம் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் பறக்கும்படை, ஒரு நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே பண பட்டுவாடா காரணமாக வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டதால் இந்த முறை பண பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை தீவிரமாக சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலுர் மாவட்டம் முழுமைக்கும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் செலவின பார்வையாளராக வினய்குமார்சிங், ஆர்.ஆர்.என்சுக்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வேலூர் தொகுதிக்கான சிறப்பு செலவின பார்வையாளரை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியான முரளிகுமாரை சிறப்பு செலவின பார்வையாளராக நியமித்து தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே சென்னையில் வருமான வரி டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 அதிகாரிகளும் வேலூருக்கு வருகை தர உள்ளனர்.
வருகிற 20-ந்தேதிக்கு மேல் வேலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் களைகட்டும். வெளியூரில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வேலூர் வருகின்றனர். பண மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது.
1553 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 20 கம்பெனி துணை ராணுவ படை வரவழைக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

83000 30526, 83000 30527 என்ற செல்போன் எண்களில் தேர்தல் தொடர்பான புகார்களை எந்த நேரத்திலும் அவர்களிடம் தெரிவிக்கலாம்.

மேலும் வேலூர் தொகுதிக்கான சிறப்பு செலவின பார்வையாளரை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியான முரளிகுமாரை சிறப்பு செலவின பார்வையாளராக நியமித்து தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே சென்னையில் வருமான வரி டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 அதிகாரிகளும் வேலூருக்கு வருகை தர உள்ளனர்.
வருகிற 20-ந்தேதிக்கு மேல் வேலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் களைகட்டும். வெளியூரில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வேலூர் வருகின்றனர். பண மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது.
1553 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 20 கம்பெனி துணை ராணுவ படை வரவழைக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு:
ஆந்திர மாநிலம் வி.கோட்டாவில் இருந்து நேற்றிரவு புளிய மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேலூருக்கு புறப்பட்டது.
லாரியை குடியாத்தம் நெல்லூர் பேட்டையை சேர்ந்த சிவா (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையை சேர்ந்த பரந்தாமன் (36) லாரியில் வந்தார். லாரி பேரணாம்பட்டு அடுத்த தமிழக எல்லையான பத்தலபல்லி குண்டத்து கானாறு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது 1-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி மலைப்பாதையில் இடதுபுறம் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 100 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் லாரி சுக்குநூறாக நொறுங்கியது.
மேலும் லாரியில் இருந்த டிரைவர்கள் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பள்ளத்தில் லாரி விழுந்து கிடப்பதை கண்டு பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம மக்கள் பள்ளத்தில் இறங்கி மர கட்டைகளை அப்புறப்படுத்தி சிவா, பரந்தாமன் ஆகியோரின் உடலை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.
2 பேரின் பிணத்தையும் பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த மலைப்பாதையில் 25 அடி உயரமுள்ள முகடு ஒன்று உள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கிறது.
25 அடி உயரமுள்ள முகடை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தால் விபத்துக்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் வழக்கம்போல் அதிகமாகவே காணப்பட்டது. பகலில் 98.6 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் மாலை 6 மணியளவில் கருமேகங்கள் திரண்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு 10.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. அதன்பின்னர் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. புதிய பஸ்நிலையம் அருகே ஆற்காடு சாலை, காமராஜர் சிலை அருகே தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
வேலூர் தொகுதி தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று வேலூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குச் சாவடியில் பணிபுரிவதற்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் மொத்தம் 7557 ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு, தேர்தல் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கிய செல்போன் வாயிலாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடர்பாக குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பயிற்சி வகுப்பில் 1233 பேர் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் விளக்கம் கோரும் குறிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கத்தக்க காரணமில்லாமல் பயிற்சி வகுப்பிற்கு வராதவர்களுக்கு பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தனியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 18-ந் தேதி சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்திட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.
இந்த சிறப்பு வகுப்புகளிலும் கலந்து கொள்ளாதவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கட்டாய பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.89 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.44 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் வருமான வரித்துறையினர் தனியாக குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
வேலூர் வசூரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.27 லட்சத்து 74 ஆயிரம் சிக்கியது. பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று வரை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலைகண்காணிப்பு குழுக்கள் நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.44 லட்சத்து 32 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாணியம்பாடியில் ரூ.89,41,800 மதிப்புள்ள தங்கத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்ல வேண்டாம். என்று பொதுமக்களும், வியாபார நிறுவனங்களும், வியாபாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்தலுக்காக பணம், பொருள் கொடுப்பது தொடர்பான புகார்களை 1800-425-3692 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இதுவரை 18 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 7 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 2-ம் நாளில் சுயேட்சை கட்சியினர் மனுத்தாக்கல் செய்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று வேட்பு மனுத்தாக்கல் வழக்கம்போல் தொடங்கியது.
தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நரேஷ்குமார் தனது ஆதரவாளர்களுடன் சைக்கிளில் வந்தார். ஆனால் சைக்கிளில் உள்ளே செல்ல அனுமதி அளிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதையடுத்து வெளியில் இருந்து நடந்து வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் மனுத்தாக்கல் செய்தார்.
இதேபோல் முன்னாள் தாசில்தார் செல்வராஜ் சுயேட்சையாகவும், தேசிய மக்கள் கழகம் சார்பில் திவ்யாவும், இந்திய குடியரசு கட்சி (ஆர்.பி.ஐ.) சார்பில் ஆறுமுகமும், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பலராமனும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, முற்போக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் கணேசன் என மொத்தம் 6 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை 3 நாட்களில் மொத்தம் 18 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் நாளை மனுத்தாக்கல் செய்கிறார்.

வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் வழக்கம்போல் அதிகமாகவே காணப்பட்டது. பகலில் 98.6 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் மாலை 6 மணியளவில் கருமேகங்கள் திரண்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 10.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. அதன்பின்னர் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. புதிய பஸ்நிலையம் அருகே ஆற்காடு சாலை, காமராஜர் சிலை அருகே தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் வழக்கம்போல் அதிகமாகவே காணப்பட்டது. பகலில் 98.6 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் மாலை 6 மணியளவில் கருமேகங்கள் திரண்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 10.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. அதன்பின்னர் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. புதிய பஸ்நிலையம் அருகே ஆற்காடு சாலை, காமராஜர் சிலை அருகே தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மேலும் ஒரு ரெயில் நாளை ஜோலார்பேட்டைக்கு வருகிறது.
ஜோலார்பேட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடந்த மாதம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்தார்.
அதன்படி ஜோலார் பேட்டையில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் இரவு பகலாக பணிகளை மேற்கொண்டனர். கடந்த 12-ந் தேதி முதல் ஜோலார்பேட்டையில் ரெயில் நிலையத்திலிருந்து 50 வேகன்களைக் கொண்ட ரெயில் 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சென்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீரை இறக்கி வினியோகிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு ரெயில் மூலம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னை நகர மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 4-வது நாளான நேற்று மதியம் 1.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய 5-வது யார்டுக்கு சிறப்பு ரெயில் வந்தடைந்தது. 5-வது யார்டில் ரெயிலுக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின்சாரத்தை ஊழியர்கள் துண்டித்தனர்.
இதையடுத்து 100க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் ரெயிலில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3.30 மணி நேரம் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதன்பிறகு ரெயில்வே ஊழியர்கள் ஒவ்வொரு வேகனிலும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உள்ளதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து அந்த ரெயில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. இன்று காலை ரெயில் மீண்டும் வந்ததும் அதில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது.
இந்நிலையில் மேலும் ஒரு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மற்றொரு ரெயில் 50 வேகன்களுடன் புறப்பட்டு நாளை ஜோலார்பேட்டை வந்தடைகிறது. 18-ந் தேதி முதல் அதையும் சேர்த்து 2 ரெயில்களில் சென்னை மக்களுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.
ரெயில்களின் இயக்கத்தை படிப்படியாக உயர்த்தி தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் தொகுதியில் ரஜினி ரசிகர்கள் ஆதரவு யாருக்கும் இல்லை என்று வாலாஜாவில் சத்யநாராயணா கூறி உள்ளார்.
வாலாஜா:
வேலூர் மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட வாணியன்சத்திரம், அனந்தலை, வன்னிவேடு, சென்னசமுத்திரம், பாகவெளி ஆகிய 5 ஊர்களில் உள்ள பழமை வாய்ந்த குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட ரஜினி ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி இதற்கான பூமி பூஜை வாணியன் சத்திரத்தில் உள்ள குளக்கரையில் நடந்தது.
இதில் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயணா கலந்துகொண்டு பூஜை செய்து தொடங்கி வைத்தார். வேலூர் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் என்.ரவி உள்பட பலர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து சத்யநாராயணா நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் யாருக்கும் ரஜினியின் ஆதரவு இல்லை. மேலும் கடவுள் அருளாலும், குரு அருளாலும் விரைவில் அரசியல் பிரவேசம் செய்வார். எப்போது வருவார் என அவர்தான் முடிவு செய்யவேண்டும். ரஜினி கட்சியை ஆரம்பித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவளிப்பாரா? என்பதையும் அவர்தான் முடிவு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நீர்நிலைகளை பாதுகாப்பதுடன் குளங்கள், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணி கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இங்கு பூமி பூஜையுடன் தொடங்கியது.