search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிடந்த காட்சி
    X
    100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிடந்த காட்சி

    பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

    பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரணாம்பட்டு:

    ஆந்திர மாநிலம் வி.கோட்டாவில் இருந்து நேற்றிரவு புளிய மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேலூருக்கு புறப்பட்டது.

    லாரியை குடியாத்தம் நெல்லூர் பேட்டையை சேர்ந்த சிவா (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையை சேர்ந்த பரந்தாமன் (36) லாரியில் வந்தார். லாரி பேரணாம்பட்டு அடுத்த தமிழக எல்லையான பத்தலபல்லி குண்டத்து கானாறு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது 1-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி மலைப்பாதையில் இடதுபுறம் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 100 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் லாரி சுக்குநூறாக நொறுங்கியது.

    மேலும் லாரியில் இருந்த டிரைவர்கள் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பள்ளத்தில் லாரி விழுந்து கிடப்பதை கண்டு பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம மக்கள் பள்ளத்தில் இறங்கி மர கட்டைகளை அப்புறப்படுத்தி சிவா, பரந்தாமன் ஆகியோரின் உடலை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.

    2 பேரின் பிணத்தையும் பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து நடந்த மலைப்பாதையில் 25 அடி உயரமுள்ள முகடு ஒன்று உள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கிறது.

    25 அடி உயரமுள்ள முகடை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தால் விபத்துக்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    Next Story
    ×