search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பார்வையாளர்கள்"

    கொல்கத்தாவில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்காள தேர்தல் பார்வையாளர்களிடம் காணொலி காட்சி மூலம் விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக பேரணியில் அக்கட்சி தலைவர் அமித் ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.
     
    இந்நிலையில், கொல்கத்தாவின் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, இன்று காலை 11.30 மணியளவில் மேற்கு வங்காள தேர்தல் பார்வையாளர்களிடம் காணொலி காட்சி மூலம்  விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். #ElectionCommissionMeeting #SunilArora
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  #ElectionCommissionMeeting #SunilArora
    ×