என் மலர்
வேலூர்
வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் ஆட்டோ டிரைவர். இவரது மகன் கோகுல் (வயது 17). ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கோகுல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கோகுல் சிறுமியை காதலிப்பது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கோகுலை கண்டித்தனர். இருந்தாலும் கோகுல் சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளார்.
இதனால் சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் கடந்த மாதம் 24-ந்தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற கோகுலை சாயிநாதபுரத்தில் மடக்கி சிறுமியின் பின்னாடி சுற்றக்கூடாது என்று எச்சரித்தனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கோகுலை சரமாரியாக தாக்கினர். இதில் கோகுல் படுகாயமடைந்து மயங்கி சரிந்தார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அருகில் இருந்தவர்கள் கோகுலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை ராஜகுரு, அவரது உறவினர் தமிழ்ச்செல்வன், நண்பர்கள் தண்டபாணி, செந்தில், மாதவன், சிட்டிபாபு ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதனால் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோகுலின் உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருமாது கெர்ப்ப... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின்... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த... பெருமாளே.
இந்த திருப்புகழ் பாடல் உண்டு. இந்த சுவாமி மலை பாராயணம் செய்யலாம்.
வேலூரில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் ஷோபனா (வயது 57). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது குடியிருப்பு மற்றும் கார்களில் சோதனை நடத்தினர்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அவரின் வீட்டிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில் அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் நகை உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 11 வங்கிக்கணக்குகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். இதுதொடர்பாக வங்கி மேலாளர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
மேலும் ஷோபனா பயன்படுத்திய வங்கி லாக்கரை திறந்து பார்க்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இவை தவிர அவர், உறவினர்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்து உள்ளாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் பெரும் கோடீசுவரரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
லண்டனின் பக்கிங்ஹாம்சையரில் உள்ள 300 ஏக்கர் கிளப் ஒன்றை தங்கள் வசிப்பிடமாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது மும்பை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
வேலூர்:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
இதையடுத்து தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டு மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் 65 சதவீதம்பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மீதமுள்ள 35 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம், செலுத்தாதவர்கள் விவரம் அவர்களுடைய ஆதார் எண் செல்போன் எண் தடுப்பூசி செலுத்தாததற்கான காரணங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகின்றன. தடுப்பூசி போடாதவர்களின் விவரங்கள் சேகரித்த பின்பு சிறப்பு முகாம்களுக்கு அழைத்து தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 115 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று முன்தினம் ரூ.4.58 கோடிக்கு மது விற்பனையானது.
தீபாவளி நாளான நேற்று ரூ.4.80 கோடிக்கு மது விற்பனையானது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இந்த டாஸ்மாக் கடைகளில் ரூ.2.95 கோடிக்கு மது விற்பனையும், தீபாவளி நாளான நேற்று ரூ.2.71 கோடிக்கு மது விற்பனையானது.
மொத்தம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.15.04 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
திருச்சி:
திருச்சி சுந்தர் நகர் ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது50) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், புத்தூர் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (45) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மின் வாரியத்தில், உதவி செயற்பொறியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. அதற்கு பணம் கொடுத்தால் வாங்கிவிடலாம் என்று செந்தில்குமாரிடம், நாகராஜன் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து தனது உறவினருக்கு அந்த வேலையை வாங்கி கொடுக்கும்படி, செந்தில்குமார் கடந்த 2017 -ம் ஆண்டு ரூ.12 லட்சத்தை நாகராஜனிடம் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து வருடங்கள் கடந்த நிலையில், வேலை வாங்கி கொடுக்காததால், பணத்தை தந்துவிடுங்கள் என்று செந்தில்குமார் கேட்டுள்ளார். விரைவில் வேலை வாங்கித் தருகிறேன் என்று நாகராஜன் கூறியுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில்குமார், திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் உதவி ஆணையர் சின்னசாமி, இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜனை தேடி, விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், நாகராஜன் ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்தது தெரியவந்ததை, தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று, நாகராஜனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வேலூர்:
வேலூர் விருப்பாட்சி புரத்தை சேர்ந்த யுவ நாதன் மற்றும் 25-க்கும் மேற்பட்டோர் வேலூர் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த பெருவளையத்தை சேர்ந்தவர். தச்சம்பட்டறையை சேர்ந்த ஒருவர் வேலூர் ஆயுதப்படை போலீசில் பிகிலராக வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஒருவர் ஆகிய இவர்கள் 3 பேரும் சேர்ந்து காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், வேலைக்கு தகுந்தாற்போல் ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடிவரை கடந்த 2019-ம் ஆண்டு பணம் பெற்றுள்ளனர். கொரோனா காரணம் காட்டி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
ஒரு சிலருக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். மேலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாகும் தேர்தல் முடிந்தவுடன் வேலை வாங்கித் தருவதாகவும் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. வேலை வாங்கிக் கொடுங்கள் இல்லையென்றால் பணத்தை திருப்பித் தாருங்கள் என கேட்டபோது பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொறுப்பு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஷோபனா (வயது 57) வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
தந்தை பெரியார் பாலிடெக்னிக் வளாகத்திலேயே தங்கி உள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்கள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
இந்த மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக், என்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான டெண்டர் விடுவது, நிதி ஒதுக்கீடு செய்வது பணிகளை ஆய்வு செய்வது போன்றவை இவரது பணியாகும்.
இந்த நிலையில் மண்டல செயற்பொறியாளர் ஷோபனா லஞ்சம் வாங்குவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு முதல் ரகசியமாக கண்காணித்தனர்.
வேலூர் ஜெயில் அருகே அணைக்கட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஷோபனா காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார்.
அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அவரது காரில் சோதனையிட்டனர். அதில் ரூ.5 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்திற்கு கணக்கு இல்லை.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அங்கிருந்த ரூ.3.92 லட்சத்திற்கான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அலுவலகம் சம்பந்தமான 18 ஆவணங்கள் ஷோபனாவின் அறையில் இருந்தன. அவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓசூரில் உள்ள ஷோபனாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சோதனை நடத்தினர்.
அங்கு கட்டு கட்டாக ரூ.1 கோடிக்கு மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து பணத்தை கணக்கிட்டு வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.








