என் மலர்
நீங்கள் தேடியது "அரசு வேலை மோசடி"
வேலூர்:
வேலூர் விருப்பாட்சி புரத்தை சேர்ந்த யுவ நாதன் மற்றும் 25-க்கும் மேற்பட்டோர் வேலூர் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த பெருவளையத்தை சேர்ந்தவர். தச்சம்பட்டறையை சேர்ந்த ஒருவர் வேலூர் ஆயுதப்படை போலீசில் பிகிலராக வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஒருவர் ஆகிய இவர்கள் 3 பேரும் சேர்ந்து காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், வேலைக்கு தகுந்தாற்போல் ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடிவரை கடந்த 2019-ம் ஆண்டு பணம் பெற்றுள்ளனர். கொரோனா காரணம் காட்டி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
ஒரு சிலருக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். மேலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாகும் தேர்தல் முடிந்தவுடன் வேலை வாங்கித் தருவதாகவும் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. வேலை வாங்கிக் கொடுங்கள் இல்லையென்றால் பணத்தை திருப்பித் தாருங்கள் என கேட்டபோது பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொறுப்பு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.






