என் மலர்
செய்திகள்

கொலை
சிறுமியை காதலித்த ஆட்டோ மெக்கானிக் அடித்துக்கொலை
வேலூரில் 14 வயது சிறுமியை காதலித்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் ஆட்டோ டிரைவர். இவரது மகன் கோகுல் (வயது 17). ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கோகுல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கோகுல் சிறுமியை காதலிப்பது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கோகுலை கண்டித்தனர். இருந்தாலும் கோகுல் சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளார்.
இதனால் சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் கடந்த மாதம் 24-ந்தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற கோகுலை சாயிநாதபுரத்தில் மடக்கி சிறுமியின் பின்னாடி சுற்றக்கூடாது என்று எச்சரித்தனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கோகுலை சரமாரியாக தாக்கினர். இதில் கோகுல் படுகாயமடைந்து மயங்கி சரிந்தார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அருகில் இருந்தவர்கள் கோகுலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை ராஜகுரு, அவரது உறவினர் தமிழ்ச்செல்வன், நண்பர்கள் தண்டபாணி, செந்தில், மாதவன், சிட்டிபாபு ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதனால் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோகுலின் உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story