என் மலர்
திருவண்ணாமலை
வேட்டவலம் அருகே ராணுவவீரர் வீட்டில் 20 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேட்டவலம்:
வேட்டவலத்தை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு நீலகண்டன், ஜெய்சங்கர் உள்பட 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். நீலகண்டன் ராணுவத்தில் வேலைபார்த்து வருகிறார்.
நீலகண்டன் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் தனது தம்பி ஜெய்சங்கரிடம் திருவண்ணாமலையில் உள்ள ராணுவ கேன்டீனில் பொருட்கள் வாங்க சென்றார். வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றனர். வீட்டு சாவியை வழக்கம் போல வாசற்படியின் வைத்து விட்டு சென்றனர்.
இந்த நிலையில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் ஜெய்சங்கர் வீட்டின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை நீங்கள் யார் என்று அங்கிருந்தவர்கள் கேட்டதற்கு ஜெய்சங்கரின் நண்பர்கள் என்று கூறி போனில் பேசுவது போன்று அங்கிருந்து சென்று விட்டனர்.
மேலும் செல்லங்குப்பம் கிராமத்தில் ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதற்கு அந்த தெருவில் உள்ள பொதுமக்களும் சென்றுவிட்டனர். இதனால் திரும்பவும் வந்த அந்த நபர்கள் நீலகண்டன் வீட்டில் இருந்த சாவியை எடுத்து பூட்டைத் திறந்து வீட்டிற்குள் சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகைகளை திருடிக்கொண்டு, சாவியை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்தில் நிலத்திற்கு சென்றிருந்த ஜெய்சங்கரின் அம்மா பச்சையம்மாள் வீட்டுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளேசென்றபோது பீரோ உடைபட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில் வைத்திருந்த 20 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெய்சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்துவிட்டு வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், பன்னீர்செல்வம், தனிப்பிரிவு ஏட்டு கோட்டீஸ்வரன் ஆகியர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தூசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் தர்மாபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 59), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கடைக்குச் சென்று வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் தவறானது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன், கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், கூட்டுறவுத் துறையின் சிறப்புப்பணி அலுவலர் ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் அந்தோணிசாமி ஜான்பீட்டர், ரவிக்குமார், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் காமாட்சி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் தேவராஜன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கிசான் கிரடிட் கார்டு, வேளாண் பயிர்க் கடன், சிறு, குறு விவசாய கடன், முதலீட்டுக் கடன், நகைக் கடன். கைத்தறிக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறு வணிகக் கடன், டாம்கோ, டாம்செட்கோ, மகளிர் சுயஉதவிக் குழு கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொது வினியோகத் திட்டம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு வங்கி, அம்மா மருந்தகம், கூட்டுறவு மருந்தகம், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், அம்மா நகரும் ரேஷன் கடைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமான அம்மா நகரும் நியாய விலைக் கடையை செயல்படுத்தி, ஒரு சாமானிய முதல்-அமைச்சராக திகழந்து வருகிறார். தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
கலசபாக்கம் பகுதியில் மலைக்கிராமங்கள் அதிகமாக உள்ளதால் அங்கு மட்டும் 85 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு அருகாமையில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது முதல்- அமைச்சரின் மாபெரும் சாதனை. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது. எந்த அறிவிப்பாக இருந்தாலும் தமிழக முதல்-அமைச்சர்தான் அறிவிப்பார். மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டு பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்திற்கு 316 டன் வெங்காயம் பிற மாநிலங்களில் இருந்து வரப்பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று 11 டன் வெங்காயம் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணை பதிவாளர்கள் சரவணன், ஆரோக்கியராஜ், பிரேம், கமலக்கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

போளூர் அருகே ஏரியில் மண் கடத்த முயன்ற 11 டிராக்டர், 2 பொக்லைன் எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்து 13 பேரை கைது செய்தனர்.
போளூர்:
போளூரை அடுத்த மண்டகொளத்தூர் ஏரியிலிருந்து செங்கல் சூளைக்கு பயன்படுத்த சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி கொண்டிருப்பதாக போளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பாஷ்யம், மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது 11 டிராக்டர், 2 பொக்லைன் எந்திரம் ஆகியவற்றில் ஏரி மண் அள்ளப்பட்டு நிரப்பி புறப்பட தயார் நிலையில் இருந்தன. போலீசார் வருவதை கண்டதும் டிராக்டர்களை அங்கேயே நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மண்டகொளத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 27), கருணாகரன்(45), சிவகுமார்(31), முத்துராமன்(28), சாந்தகுமார்(40), கமலக்கண்ணன்(40), மணிகண்டன் (32), விஜயகுமார் (35), வேதகிரி (35), அண்ணாதுரை (45), புவிவானந்தலை சேர்ந்த சுரேஷ் (32), நரசிங்கபுரத்தை சேர்ந்த சத்யபிரகாஷ் (34), மொடையூரை சேர்ந்த கார்த்திகேயன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 13 பேரையும் போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்.
அதனை தொடர்ந்து ஏரி மண்ணுடன் 11 டிராக்டர்கள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலையில் நிறுத்தப்பட்டன.

பெரணமல்லூர் அருகே கொரோனா நிதி வாங்கித்தருவதாக கூறி பணவசூலில் ஈடுபட்டு மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 71) விவசாயி. இவரும் ஆரணி பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி கண்ணனும் (41) பெரணமல்லூர் பகுதி கிராமங்களில் பல்வேறு நபர்களிடம் கொரோனா சிறப்பு நிதி பெற்றுத் தருவதாக கூறி வந்தனர். இதை உண்மையென நம்பியவர்கள் தங்களுக்கு கொரோனா நிதி வாங்கித்தரும்படி கூறியுள்ளனர்.
இவ்வாறு நம்பி வந்த 15-க்கும் மேற்பட்டோரிடம் முன்கூட்டியே கமிஷன் தர வேண்டும் என கூறி ரூ.500, ரூ.1000, ரூ.2 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என 2 பேரும் வசூல் செய்தனர்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாகியும் கொரோனா சிறப்பு நிதி பெற்றுத் தராததால் பணம் கொடுத்தவர்கள் சம்பத் மற்றும் கண்ணனிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அவர்கள் கொரோனா நிதி விரைவில் வந்து விடும் என கூறி வந்தனர். பல நாட்களாகியும் பணம் கிடைக்காதவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் நடுபட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன் என்பவர் தன்னிடம் சம்பத் மற்றும் கண்ணன் ஆகியோர் கொரோனா நிதி பெற்றுத்தருவதாக கூறி ரூ.70 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாக கூறி பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பத், கண்ணன் ஆகியோர் மீது பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் இருவரும் கொரோனா சிறப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்து செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 27). இவர் கடந்த சில தினங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அருகே பட்டப்பகலில் வீடுபுகுந்து திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி:
ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி கவுரி (வயது 55). தனியாக வசித்துவரும் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள மகள் மகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
மதியம் சாப்பிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முன்பக்க கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் ஒருவர் பீரோவை உடைத்து திருடிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இதை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த நபர் தப்பி ஓடமுயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து கட்டிபோட்டு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட நபரிடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த ஒரத்தை கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த்குமார் (34) என்பது தெரியவந்தது. மேலும் இவர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து 1½ பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பட்டப்பகலில் வீடுபுகுந்து திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பூத்கள் வாரியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை பூத் வாரியாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரடியாக சென்று ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
அதன்படி திருவண்ணாமலை நகரில் 39 வார்டுகளில் பூத்கள் வாரியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் தலா 25 பேர் வீதம் 138 பூத்களுக்கு 3 ஆயிரத்து 450 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பூத் வாரியாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்து வரும் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உட்பட அனைத்து திட்டங்களையும் அரசு முழுமையாக நிறைவேற்றி வருகின்றன. படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை முதல்-அமைச்சர் உருவாக்கி வருகிறார். அ.தி.மு.க. அரசின் சாதனைகள் புதிய திட்டங்கள் மக்களுக்கு எடுத்துக்கூறியும் சமூக நலத்திட்டங்களை மக்கள் பெறுகின்ற வகையில் உறுதுணையாக பாசறை நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக மாற்ற வேண்டும். முதல்-அமைச்சர் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்திட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இதற்கு பாசறை நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் முழுமையாக பாடுபடவேண்டும் என்றார்.
நிகழ்ச்சிகளில் திருவண்ணாமலை நகர செயலாளர் ஜே.செல்வம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் தொப்புளான், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் சித்த வைத்தியர் பழனி மற்றும் வட்ட செயலாளர்கள், பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆரணி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கோதை (வயது 54). இவரது கணவர் சண்முகம் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதற்கிடையில் இவரது மகளுக்கு வந்தவாசியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அந்த பெண்ணும் சமீபத்தில் இறந்து விட்டார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பூங்கோதை தற்கொலை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் குதித்து விட்டார். நீண்ட நேரமாகியும் தாய் காணவில்லை என மகன் சீனுவாசன் தேடிப்பார்த்து நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் பூங்கோதை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் பூங்கோதை இறந்தது தெரியவந்தது. இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தண்டராம்பட்டு அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு தாலுகா கீழ்சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கங்கைஅமரன் (வயது 34). பெங்களூருவில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 30-ந் தேதி இரவு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வீட்டின் கதவை தட்டியுள்ளார். அந்த வீட்டில் 30 வயதுடைய பெண், தனது மகனுடன் வசித்து வருகிறார். கதவை தட்டும் சத்தம்கேட்டு, திறந்து பார்த்த போது கங்கை அமரன் வீட்டின் வாசலில் நிற்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். கங்கைஅமரன் திடீரென வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த அந்த பெண்ணின் மகன் பயத்தில் கூச்சலிட்டவாறு வீட்டிற்கு வெளியே ஓடியுள்ளான்.
இதனால் அக்கம் பக்கத்தினர் வந்து விடுவார்களோ என்று அஞ்சிய கங்கைஅமரன் அந்த பெண்ணை பார்த்து இன்று தப்பித்து விட்டாய், என்றாவது ஒரு நாள் உன்னை அடையாமல் விடமாட்டேன், இல்லையென்றால் உன்னையும், உன் மகனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு, பின்வாசல் வழியாக தப்பியோடி விட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கங்கைஅமரனை கைது செய்தனர்.
கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை முற்றிலும் சீரமைத்து போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தை அடுத்த கீழ்நகர் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த கால்நடை மருத்துவமனை மூலம் கீழ்நகர், புதுப்பாளையம், மேல்நகர், ஐயம்பாளையம், புங்கம்பாடி, சம்புவராயநல்லூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. கதவு மற்றும் ஜன்னல்கள் உள்பட தரை தளம், மேல்மாடி ஆகியவை உடைந்து, விரிசல் அடைந்து காணப்படுகிறது.
மழைக்காலங்களில் கட்டிடம் முற்றிலும் நீர் கசிவு ஏற்பட்டு உள்ளே மருந்து, மாத்திரைகள் வைக்க முடியாத நிலை உள்ளது. மொட்டை மாடியில் செடி, கொடிகள் முளைத்து சிறிய தோட்டம் போல் காணப்படுகிறது. பாதுகாப்பின்றி உள்ள இக்கட்டிடத்தை சிலர் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே கட்டிடத்தை முற்றிலும் சீரமைத்து போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலசபாக்கம் அருகே காவலாளி கொலை வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். மதுகுடித்துவிட்டு வந்து அடிக்கடி அடித்ததால் தீர்த்துக்கட்டினேன் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த கடலாடியில் உள்ள போலீசார் குடியிருப்பு அருகில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் இரவு நேர காவலாளியாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 40) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கட்டுமான பணிகள் நடைபெறும் சார் பதிவாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஏரியில் ஆறுமுகம் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஆறுமுகத்தின் மனைவி ஈஸ்வரியை போலீசார் விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அவர் குடித்து வந்து அடிக்கடி ஈஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அதனால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் வேறு யாராவது சம்பந்தப்பட்டு உள்ளனரா? என்றும், வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.