என் மலர்
திருவண்ணாமலை
போளூர் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொத்தரை கிராமத்தில் சாராயம் விற்ற சகுந்தலா (வயது 70), கவுரி (53) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒலி மாசு, புகையில்லா தீபாவளியை கொண்டாடுவோம் என்று கலெக்டர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை:
தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். தீபாவளி பண்டிகையில் விருந்து மற்றும் இனிப்புடன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம், காலமாக நடந்து வருகிறது. பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையும், தொடர் ஓசை நிரந்தரமான செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தடுக்கும் வகையில் பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. அதன்படி காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், புகையில்லா தீபாவளி மற்றும் விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றது. எனவே காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும். தீபாவளி பண்டிகை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத் திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியினைக் கொண்டாடவும். ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 180 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
சென்னை திருவெற்றியூரில் வேல் யாத்திரை தொடங்க முயன்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க.வின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரியும் நேற்று மதியம் மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் தணிகைவேல் ஆலோசனைக்கு இணங்க திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள திருவள்ளூவர் சிலை அருகில் பா.ஜ.க.வினர். திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணைத்தலைவர் அருணை ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் மூவேந்தன், எஸ்.சி.அணி பொதுச் செயலாளர் விஜயராஜ், மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் நடராஜன் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரியும் வெற்றிவேல், வீரவேல் என்று கண்டன கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 180 பேரை திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ரஞ்சித்குமார். இவர் திருவண்ணாமலையை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு ரஞ்சித்குமாரின் தாய் உள்பட 7 பேர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த ரஞ்சித்குமார் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர் பகுதியில் முககவசம் அணியாத 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
போளூர்:
போளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த் துறை, காவல் துறைகளை சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் முதல் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என 13 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள்.
தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் மலையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மலை உச்சி வரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 20-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் மலையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் மலை உச்சி வரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

களம்பூர் அருகே தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை செய்யப்பட்டார். யார் அவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூர் அருகே வடமாதிமங்கலம் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை 55 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து களம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, விநாயகமூர்த்தி, முத்துக்குமார், மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?, ஏன் இங்கு வந்தார்? என்ற விவரங்கள் தெரியவில்லை. அவர் ஆரஞ்ச் மற்றும் சந்தன நிற சேலையும், வெள்ளை நிற ரவிக்கையும், நீல நிற பாவாடையும் அணிந்திருந்தார். கவரிங் வளையல் போட்டுள்ளார்.
மேலும் அந்த பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார்? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலாவுக்கு தடைவிதிக்க கூடாது என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் தொன்மை வாய்ந்தது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் 20 லட்சம் பக்தர்கள் வரை அன்று கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. வருகிற 20--ந்தேதி திருவிழா தொடங்குகிறது.29--ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா நடைபெறாது என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை தீபத் திருவிழா பல்லாண்டுகளாக தடையின்றி நடந்து வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துவது தெய்வ குற்றம் ஆகும். எனவே தீபத்திருவிழா தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா வுக்கு தடை விதிக்கக் கூடாது. தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால் தேவையான கட்டுப்பாடுகளை விதித்து வழக்கம்போல் தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பொதுமக்களிடம் கருத்து கேட்டு அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தீபத் திருவிழா தேரோட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

திருவண்ணாமலை கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் அன்னை மீனாட்சி உழவார பணிக்குழுவை சேர்ந்த சுமார் 40 பேர் ஈடுபட்டனர்.
பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தீபத்திருவிழா ஒன்றாகும். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் அன்னை மீனாட்சி உழவார பணிக்குழுவை சேர்ந்த சுமார் 40 பேர் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்யவது, விளக்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

போளுரை அடுத்த முக்குரும்பை கிரமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
போளுர்:
போளுரை அடுத்த முக்குரும்பை கிரமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆர்.மீரா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதாநேதாஜி, ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணவேணிசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பி.அண்ணாமலை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுந்தர் தலைமையில் டாக்டர்கள் பாரதி, பிரபாகர், யோகேஷ்பாபு, இளங்கோ, கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, ஈ.சி.ஜி, கண்புரை பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்தனர். இதில் 3 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

குடிநீர் வழங்காததை கண்டித்து சாத்தனூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100 நாள் வேலைக்கு லஞ்சம் கேட்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அருகே நெடுங்காடி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்த குடிநீர் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முறையாக குடிநீர் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சியில் பலமுறை புகார் செய்தும் ஊராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை கண்ணகந்தலில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், நெடுங்காவடி பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100 நாள் வேலைக்கு ஒரு நபருக்கு ரூ.100 லஞ்சம் கேட்பதாக புகார் கூறிய அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
மேலும் குடிநீர் தொட்டி ஆபரேட்டரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி தகவலறிந்த சாத்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் விஜயா ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அர்ஜூனாபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 55), தொழிலாளி. இவர் 2 ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி பச்சையப்பன் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.