என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்நடை மருத்துவமனை
    X
    கால்நடை மருத்துவமனை

    கீழ்நகரில் பழுதடைந்துள்ள கால்நடை மருத்துவமனை சீரமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை முற்றிலும் சீரமைத்து போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்தை அடுத்த கீழ்நகர் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த கால்நடை மருத்துவமனை மூலம் கீழ்நகர், புதுப்பாளையம், மேல்நகர், ஐயம்பாளையம், புங்கம்பாடி, சம்புவராயநல்லூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. கதவு மற்றும் ஜன்னல்கள் உள்பட தரை தளம், மேல்மாடி ஆகியவை உடைந்து, விரிசல் அடைந்து காணப்படுகிறது.

    மழைக்காலங்களில் கட்டிடம் முற்றிலும் நீர் கசிவு ஏற்பட்டு உள்ளே மருந்து, மாத்திரைகள் வைக்க முடியாத நிலை உள்ளது. மொட்டை மாடியில் செடி, கொடிகள் முளைத்து சிறிய தோட்டம் போல் காணப்படுகிறது. பாதுகாப்பின்றி உள்ள இக்கட்டிடத்தை சிலர் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே கட்டிடத்தை முற்றிலும் சீரமைத்து போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×