என் மலர்
செய்திகள்

கங்கைஅமரன்
தண்டராம்பட்டு அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- தொழிலாளி கைது
தண்டராம்பட்டு அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு தாலுகா கீழ்சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கங்கைஅமரன் (வயது 34). பெங்களூருவில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 30-ந் தேதி இரவு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வீட்டின் கதவை தட்டியுள்ளார். அந்த வீட்டில் 30 வயதுடைய பெண், தனது மகனுடன் வசித்து வருகிறார். கதவை தட்டும் சத்தம்கேட்டு, திறந்து பார்த்த போது கங்கை அமரன் வீட்டின் வாசலில் நிற்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். கங்கைஅமரன் திடீரென வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த அந்த பெண்ணின் மகன் பயத்தில் கூச்சலிட்டவாறு வீட்டிற்கு வெளியே ஓடியுள்ளான்.
இதனால் அக்கம் பக்கத்தினர் வந்து விடுவார்களோ என்று அஞ்சிய கங்கைஅமரன் அந்த பெண்ணை பார்த்து இன்று தப்பித்து விட்டாய், என்றாவது ஒரு நாள் உன்னை அடையாமல் விடமாட்டேன், இல்லையென்றால் உன்னையும், உன் மகனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு, பின்வாசல் வழியாக தப்பியோடி விட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கங்கைஅமரனை கைது செய்தனர்.
Next Story






