என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை பெற வாக்காளர்கள் அலைக்கழிப்பதை தடுக்க இணையதளம் மூலமாக பதிவிறக்்கம் செய்து உடனடியாக அவற்றை வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    திருவண்ணாமலை:

    புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை பெற வாக்காளர்கள் அலைக்கழிப்பதை தடுக்க இணையதளம் மூலமாக பதிவிறக்்கம் செய்து உடனடியாக அவற்றை வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 13 மற்றும் 14-ம் தேதிகளில் இதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமின்போது பெயர் சேர்க்க கோரிய புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் இந்த சிறப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ளும்படி கலெக்டர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.
    மாணவிகள் ஓட்டுப்போடாமல் இருக்கக்கூடாது என்று வந்தவாசியில் நடந்த கல்லூரி விழாவில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசினார்.
    வந்தவாசி:

    வந்தவாசியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் மகளிர் தினம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி நிறுவனர் முனிரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட நிர்வாகமும், தனியார் கல்லூரி நிர்வாகமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு மகளிர் தின நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

    பின்னர் பேசிய அவர் புதிய வாக்காளர்கள் ஓட்டு போடும்போது நமது தொகுதி வேட்பாளர்கள் என்ன செய்வார்கள், தொகுதிக்கு என்ன தேவை என்பதை அறிந்து வாக்களிக்கவேண்டும். கல்லூரியில் 4,000 மாணவிகள் இருக்கிறீர்கள். உங்களுடைய அத்தனை வாக்குகளும் பதிவாக வேண்டும். ஓட்டுப் போடாமல் இருக்க கூடாது என்று வலியுறுத்தினார்.

    தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வைத்து, அதில் வாக்களிப்பது குறித்து மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

    நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் அஜிதா பேகம், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாலட்சுமி, தாசில்தார் திருநாவுக்கரசு, கல்லூரி இயக்குனர் ரமணன், முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி 2 வது பெரிய நகரமாகும். கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
    சோழர், பல்லவர்கள் காலத்தில் ஆரண்யம் என்று அழைக்கப்பட்டு வந்த ஆரணி ஜாகீர்தார்களின் தலைமையிடமாக விளங்கியது. இங்கு காஞ்சிபுரத்திற்க்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றதாகும்.

    ஆரணி பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றிருப்பதனால் ஆரணி நகரை இந்தியாவின் பட்டு நகரம் என்றும், தமிழ்நாட்டின் அரிசி நகரம் என்றும் இரு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. ஆரணி பட்டு சேலையானது, புவிசார் குறியீடு பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது. அதேபோல் ஆரணி அரிசிக்கும் தேசிய விருது பெற்றுள்ளது. இங்கு வரலாற்று சிறப்புமிக்க புத்திர காமேட்டீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், எந்திர வடிவில் சனீஸ்வர பகவான் கோவில், அருள்மிகு பச்சையம்மன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், ஸ்ரீவேம்புலியம்மன் கோவில், அமிர்தாம்பிகை உடனுறை சந்திரசேகரேஸ்வரர் கோவில் ஆகியவை கோவில்கள் அமையப்பெற்று கோவில்களின் நகரம் எனும் போற்றப்படும் அளவிற்கு உள்ளதாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது.

    ஆரணி தொகுதி

    ஆரணி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 563 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 753 பேர், பெண்கள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 788 பேர், மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் உள்ளனர்.

    ஆரணி தொகுதி

    ஆரணி சட்டமன்றத் தொகுதியில் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள், கண்ணமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள், ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளும், மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளும் உள்ளன. தொகுதி மறுசீரமைப்பின் போது செய்யார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செய்யாறு தாலுகாவில் உள்ள பல்லான் தாங்கள், மேல் சீச மங்கலம், முனுகப்பட்டு, கொருக்காதூர், மேல் நகரம் பேடு, கடுகனூர், மாளிகைபட்டு, மேல் மட்டை, விண்ணமங்கலம், புதுக்கோட்டை, பில்லாந்தி, நாவல்பாக்கம், திருமணி ஆகிய ஊராட்சிகளில் ஆரணி சட்டமன்ற தொகுதிகள் சேர்க்கப்பட்டது.

    ஆரணி தொகுதி

    இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் என மொத்தம் 89 ஊராட்சிகளும், ஒரு நகராட்சி (ஆரணி) பகுதியும், ஒரு பேரூராட்சி (கண்ணமங்கலம்) பகுதியும் ஆரணி சட்டமன்ற தொகுதி அடங்கியுள்ளன.

    இந்த தொகுதியில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 28 சதவீதம், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 17 சதவீதமும், இதர பிரிவினர் 25 சதவீதம் உள்ளனர்.

    இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் ஆரணி சட்டமன்றத் தொகுதியில் சி.ஆர்.சி கட்சி (காமன்வெல்த் கட்சி) ஒரு முறையும், காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும், அ.தி.மு.க 6 முறையும், தி.மு.க. 5 முறையும், தே.மு.தி.க ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

    ஆரணி தொகுதி

    கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சேவூர் ராமச்சந்திரனும், தி.மு.க. சார்பில் ஆர் சிவானந்தத்தின் மகன் ஆர்.எஸ். பாபுவும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்ற சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலை துறை அமைச்சரானார். இதன் மூலம் ஆரணி தொகுதியில் வெற்றி பெற்றவர் முதல் முறையாக அமைச்சரானார்.

    கோரிக்கைகள்

    ஆரணி பட்டு சேலை தயாரிப்பு அதிக அளவில் உள்ளன. எனவே பட்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆரணி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை, உரிய சிகிச்சை அளிப்பதற்கு உயர்தர உபகரணங்கள் இல்லை. எனவே போதிய டாக்டர்களை நியமித்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். அரசு சார்பில் வேளாண்மை கல்லூரியும், கலைக் கல்லூரியும், நர்சிங் கல்லூரியும் தொடங்கப்பட வேண்டும் என்பதும் ஆரணியில் நகராட்சிக்கு சொந்தமான 450 கடைகள் உள்ளன.

    ஆரணி தொகுதி

    வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்ட தால் பாதிப்பேர் கடைகளை காலி செய்துவிட்டனர். மற்றவர்கள் வாடகை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாகும். மேலும் ஆரணி நகரில் குப்பைகள் அதிக அளவில் சேகரிக்கப்படுகின்றன. இதனை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு இல்லை. அதனை அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் முக்கியமான கோரிக்கை ஆகும்.

    ஆரணி தொகுதி

    1951- வி.கே.கண்ணன்- பொதுநலகட்சி
    1957- துரைசாமி ரெட்டியார்- சுயேட்சை
    1962- கோதண்டராம பாகவதர்- காங்கிரஸ்
    1967- நரசிம்மன்- தி.மு.க.
    1971- பி.யு.சண்முகம்- தி.மு.க.
    1977- நரசிம்மன்- அ.தி.மு.க.
    1980- ஏ.சி.சண்முகம்- அ.தி.மு.க.
    1984- சின்னகுழந்தை- அ.தி.மு.க.
    1989 - தயாளன்- தி.மு.க.
    1991- ஜெய்சன் ஜேக்கப்- அ.தி.மு.க.
    1996- சிவானந்தம்- தி.மு.க.
    2001- ராமச்சந்திரன்- அ.தி.மு.க.
    2006- சிவானந்தம்- தி.மு.க.
    2011- பாபுமுருகவேல்- தே.மு.தி.க.
    2016- சேவூர் ராமச்சந்திரன்- அ.தி.மு.க.
    தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற செய்ய உறுதி ஏற்கவேண்டும் என பா.ஜ.க.மாநில தலைவர் எல்.முருகன் பேசினார்.
    போளூர்:

    போளூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. தேர்தல் ஆலோசனை கூட்டம் போளூர் ஸ்ரீராமஜெயம் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஓ.பி.சி. அணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான சி.ஏழுமலை தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வலிமைமிக்க பிரதமராக திகழ்ந்து வருகிறார். அவர் பலமான தமிழகத்தை உருவாக்க விரும்புகிறார். பிரதமரின் சிறப்பான திட்டங்களால் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் தங்களுக்கு நோய் தொற்றிக் கொள்ளுமோ என உயிருக்கு பயந்து தி.மு.க.வினர் வெளியே வரவில்லை. ஆனால் பா.ஜ.க.வினர் களத்தில் இறங்கி சேவை செய்தனர். போளூர் தொகுதியில் சி.ஏழுமலை, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களையும் கொரோனா காலகட்டத்தில் வழங்கினார்.

    பிரதமர், கொரோனா நிவாரண நிதியாக மாதம் ரூ.500 வீதம் ஒரு கோடி ஏழை மக்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தினார். ஆண்டுக்கு 6 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறார். அனைவருக்கும் வீடு, கழிவறை, அனைவருக்கும் கியாஸ் இணைப்பு என ஏராளமான திட்டங்கள் பிரதமரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. தி.மு.க. தமிழக மக்களுக்கும், பண்பாட்டுக்கும், பக்திக்கும் எதிரானது. கந்தசஷ்டியை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு தந்தது. எனவே இந்தத் தேர்தலில் கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு தந்த தி.மு.க. வை பா.ஜ.க. என்ற காவிக்கூட்டம் ஓட ஓட விரட்டி அடிக்கும்.

    இலங்கையில் 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க.வையும், கமிஷனையும் பிரிக்க முடியாது. அதனால்தான் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து வருகின்றனர். எனவே அ.தி.மு..க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய பா.ஜ.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில ஓ.பி.சி. அணி துணைத் தலைவர் சி.ஏழுமலை பேசுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பா.ஜ.க. மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற கட்சிகளெல்லாம் தேய்ந்து வருகிறது. உலக அரங்கில் பிரதமர் மோடி உயர்ந்து நிற்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலரும் காலம் விரைவில் வரும். அதற்கு மாநிலத் தலைவர் கரத்தினை வலுப்படுத்துவோம் என்றார்.

    நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் செல்வேந்திரன் வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் நித்யானந்தம், மாவட்ட பார்வையாளர் ராஜேந்திரன், தர்மரக்ஷண சமிதி வேலூர் கோட்ட அமைப்பாளர் முருகன், பா.ஜ.க. மாவட்டத் துணைத் தலைவர் கோபி, பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், ஆரணி நகர செயலாளர் சேகர், போளூர் நகர செயலாளர் வெங்கடேசன், வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஜெயச்சந்திரன், பாண்டுரங்கன், சீனுவாசன் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வசூர் கூட்ரோட்டில் சி.ஏழுமலை தலைமையில் கேரளா செண்டை மேளத்துடன் மாநில தலைவர் முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேடையில் ஆளுயர மாலை அணிவித்து நினைவு பரிசை ஏழுமலை வழங்கினார். போளூர் பைபாஸ் சாலை, குன்னத்தூர் கூட்ரோடு, ஸ்ரீராமஜெயம் கல்வி நிறுவன வளாகம் போன்ற பகுதிகளில் மாநிலத் தலைவர் முருகனை வரவேற்று சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு கொடிகள், தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள், கட் அவுட்டுகள் போன்றவை அமைக்கப்பட்டு இருந்தது.
    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் இலக்கு என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    பா.ஜ.க. சார்பில் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் எங்களது இலக்கு. அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் வெற்றிக்காகவும் பாடுபடுவோம். தமிழக சட்டப்பேரவைக்குள் தி.மு.க. வரக்கூடாது என்பதில் குறியாக உள்ளோம்.

    தமிழ் கடவுள், தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது. தமிழகத்துக்கும், தமிழர்களின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். தி.மு.க.வின் இருண்ட ஆட்சி மீண்டும் வரக்கூடாது என தமிழக மக்கள் உள்ளனர்.

    தி.மு.க.வுக்கு தகுந்த பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள். எந்தெந்த தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடும் என பேச்சுவார்த்தையின் மூலம் முடிவு செய்யப்படும். இரட்டை இலக்கு எண்ணிக்கையில் தமிழக சட்டப்பேரவைக்கு பா.ஜ.க.வினர் செல்வார்கள்.

    கூட்டணி கட்சிகளை தி.மு.க. மதிப்பதில்லை. தி.மு.க. கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். கூட்டணி தர்மத்தை காக்கமாட்டார்கள். தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி பா.ஜ.க. அதற்கு தகுந்தாற்போல், தொகுதிகள் பெறப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைவது என்பது அவர்களது உட்கட்சி விவகாரம்.

    தமிழகத்தில் வாரிசு அரசியல் வெற்றி பெறாது. கட்சி மேலிடம் ஒதுக்கும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” என்றார்.
    கீழ்பென்னாத்தூர் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயன் (வயது 70). உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்த நிலையில், சம்பவத்தன்று விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    களம்பூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    களம்பூரை அடுத்த சதுப்பேரி கிராமத்தில் மண் மற்றும் மொரம்பு மண் கடத்தியதாக சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த கார்த்தி (வயது 35), புகழேந்தி (23), மனோகரன் (28), பரத் (23), பழனி (40) ஆகிய 5 பேரை களம்பூர் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 5 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
    ஆரணி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்தை சேர்ந்த குமரவேல் என்பவரது மகன் பாலாஜி (வயது 22). இவரும், அவரது உறவினரான வேலூரை சேர்ந்த வினோத் (19) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அரியப்பாடி ஈச்ச ஓடை அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் காயம் அடைந்தனர். இதனையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பாலாஜி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரணமல்லூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அருகே பகவதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் பாலாஜி (வயது 22). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வீட்டில் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள நிலத்துக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அந்த பகுதியில் விவசாயத்துக்கு சென்ற பொதுமக்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கண்ணமங்கலம் அருகே வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள சேதாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 68). உடல்நிலை பாதிப்பு காரணமாக சந்தவாசலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தனது பேரன் ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் (25) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    பாளைய ஏகாம்பரநல்லூர் குன்றுமேடு பகுதியில் எதிரே கியாஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாமிக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். யுவராஜ் காயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் அருகே ஜடாதாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 32), விவசாயி. இவரது மனைவி செல்வகுமாரி (27). இவர் தனது தாய் வீடான பூங்கொல்லை கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அடுப்பு எரிப்பதற்காக விறகு கொண்டு வர தோட்டத்திற்கு சென்றார். அப்போது செல்வகுமாரியை நல்ல பாம்பு கடித்து விட்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு அவரை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வேட்டவலம் அருகே உடல்நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ரைஸ்மில் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (வயது 61), அப்பகுதியில் ரைஸ்மில் நடத்தி வந்தார். அவர், உடல்நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடத்தில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு, ரைஸ்மில்லில் வேலை பார்த்த ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளார்.

    அவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, ராஜேந்திரனை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு, சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

    வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×