என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டுப்போடுவது குறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி விளக்கியபோது எடுத்த படம்.
    X
    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டுப்போடுவது குறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி விளக்கியபோது எடுத்த படம்.

    மாணவிகள் ஓட்டுப்போடாமல் இருக்கக்கூடாது- கல்லூரி விழாவில் கலெக்டர் பேச்சு

    மாணவிகள் ஓட்டுப்போடாமல் இருக்கக்கூடாது என்று வந்தவாசியில் நடந்த கல்லூரி விழாவில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசினார்.
    வந்தவாசி:

    வந்தவாசியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் மகளிர் தினம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி நிறுவனர் முனிரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட நிர்வாகமும், தனியார் கல்லூரி நிர்வாகமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு மகளிர் தின நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

    பின்னர் பேசிய அவர் புதிய வாக்காளர்கள் ஓட்டு போடும்போது நமது தொகுதி வேட்பாளர்கள் என்ன செய்வார்கள், தொகுதிக்கு என்ன தேவை என்பதை அறிந்து வாக்களிக்கவேண்டும். கல்லூரியில் 4,000 மாணவிகள் இருக்கிறீர்கள். உங்களுடைய அத்தனை வாக்குகளும் பதிவாக வேண்டும். ஓட்டுப் போடாமல் இருக்க கூடாது என்று வலியுறுத்தினார்.

    தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வைத்து, அதில் வாக்களிப்பது குறித்து மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

    நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் அஜிதா பேகம், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாலட்சுமி, தாசில்தார் திருநாவுக்கரசு, கல்லூரி இயக்குனர் ரமணன், முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×