search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல் முருகன்
    X
    எல் முருகன்

    தி.மு.க. கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம்- எல்.முருகன்

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் இலக்கு என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    பா.ஜ.க. சார்பில் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் எங்களது இலக்கு. அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் வெற்றிக்காகவும் பாடுபடுவோம். தமிழக சட்டப்பேரவைக்குள் தி.மு.க. வரக்கூடாது என்பதில் குறியாக உள்ளோம்.

    தமிழ் கடவுள், தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது. தமிழகத்துக்கும், தமிழர்களின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். தி.மு.க.வின் இருண்ட ஆட்சி மீண்டும் வரக்கூடாது என தமிழக மக்கள் உள்ளனர்.

    தி.மு.க.வுக்கு தகுந்த பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள். எந்தெந்த தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடும் என பேச்சுவார்த்தையின் மூலம் முடிவு செய்யப்படும். இரட்டை இலக்கு எண்ணிக்கையில் தமிழக சட்டப்பேரவைக்கு பா.ஜ.க.வினர் செல்வார்கள்.

    கூட்டணி கட்சிகளை தி.மு.க. மதிப்பதில்லை. தி.மு.க. கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். கூட்டணி தர்மத்தை காக்கமாட்டார்கள். தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி பா.ஜ.க. அதற்கு தகுந்தாற்போல், தொகுதிகள் பெறப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைவது என்பது அவர்களது உட்கட்சி விவகாரம்.

    தமிழகத்தில் வாரிசு அரசியல் வெற்றி பெறாது. கட்சி மேலிடம் ஒதுக்கும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” என்றார்.
    Next Story
    ×