என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
    • அட்வகேட் அசோசியேசன் லாயர் அசோசியேஷன் சார்பில் அனைத்து வழக்கறிஞர்கள் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

    பொன்னேரி:

    பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் முதன்மை சார்பு நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், 1-2 உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வழக்கத்திற்கு மாறாக பொன்னேரி தாலுகாவில் உள்ள நாறவாரி குப்பம், தண்டல் காலனி, அத்திவாக்கம், பால வாயில், வடகரை,விளங்காடுபாக்கம் ரெட்டில்ஸ், உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளடக்கிய வழக்குகள் தற்போது திருவொற்றியூர் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றவரைமுறையை மாற்றி பொன்னேரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சேர்க்கும்படி பொன்னேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேசன் லாயர் அசோசியேஷன் சார்பில் அனைத்து வழக்கறிஞர்கள் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

    • மர்ம நபர்கள் விடியலை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • பழிவாங்க கபில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் விடியல் (வயது30). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த ஆண்டு சதிஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்தார்.

    நேற்று இரவு விடியல், தனது ஆட்டோவில் வீட்டின் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விடியலை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரிஷி, சுர்ஜித், கபில் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் நேற்று முன்தினம் கபில் கருப்பு நிற வேஷ்டி அணிந்து சென்று உள்ளார். இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் விடியல் கபிலிடம் தகராறில் ஈடுபட்டார். நீ என்ன பெரிய ரவுடியா, கருப்பு நிற வேட்டி அணிந்து செல்கிறாய் என்று கூறி கபிலை அடித்து நடுரோட்டில் முட்டி போட வைத்ததாக தெரிகிறது.

    இதற்கு பழிவாங்க கபில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 29-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாலை சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 29-ந்தேதி காலையிலும், அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூலை 5-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெற்று மாலையில் கொடியிறக்கத்துடன் திரு விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் திடீரென அன்புசெழியனை வழி மறித்து மிரட்டினர்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரவாயல்:

    மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அன்புசெழியன். தனியார் கியாஸ் கம்பெனியில் சூப்பர்வைசராக உள்ளார். இவர் இரவு பணி முடிந்து அதிகாலை 3மணி அளவில் மோட்டார் சைக்கிளில் அடையாளம்பட்டு சர்வீஸ் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது பின் தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் திடீரென அன்புசெழியனை வழி மறித்து மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 1000 ரூபாயை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்கத்து வீட்டில் வசித்த லட்சுமி என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
    • 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முகமது இர்பானை போலீசார் தேடி வந்தனர்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், சிவலிங்க புரத்தைச் சேர்ந்தவர் சாமிதாஸ் (52). இவர், அசோக் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு இவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கிணற்றில் கல்லை கட்டி போடப்பட்டு இருந்தது.

    பக்கத்து வீட்டில் வசித்த லட்சுமி என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. இந்த கொலை தொடர்பாக லட்சுமியுடன் கணவர்போல் வசித்து வந்த முகமது இர்பான், மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக லட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த முகமது இர்பானும், லட்சுமியும் பின்னர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த வாரம் கோவையில் பதுங்கி இருந்த லட்சுமியை போலீசார் கைது செய்தனர். 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முகமது இர்பானை போலீசார் தேடி வந்தனர். இதில் அவர் டெல்லியில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. இதை த்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்று முகமது இர்பானை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • மோதலில் வெங்கடேசனுக்கு கத்தி வெட்டு விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, அண்ணா நகர், முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    வேப்பம்பட்டு அரசு மதுபான கடை அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இந்த மோதலில் வெங்கடேசனுக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 7 அடி நீளமுள்ள இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து நடமாடின
    • 30 நிமிடங்களுக்கு மேல் நடனமாடியதை கிராம பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

    திருவள்ளூர் அடுத்த பட்டறை பெருமந்தூர் மொத்த பால் உற்பத்தியாளர் சங்கம் அருகே சாலை ஓரம் உள்ள வயல்வெளி பகுதியில் சுமார் 7 அடி நீளமுள்ள இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து நடமாடின.

    பெரும்பாலும் நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் மட்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து நடனமாடுவது வழக்கம்.

    ஆனால் இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனமாடிய அழகை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர்.

    சுமார் 30 நிமிடங்கள் இந்த நிகழ்வு நீடித்தது. இதையடுத்து 2 பாம்புகளும் வெவ்வேறு திசையில் பிரிந்து சென்றன. இரண்டு பாம்புகள் 30 நிமிடங்களுக்கு மேல் நடனமாடியதை பட்டறை பெருமந்தூர் கிராம பொதுமக்கள் திரளாக கூடி ஆச்சரியமாக கண்டு ரசித்தனர்.

    சிலர் தங்களது செல்போனில் வீடியோ படமாக எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட முகநூலில் பதிவிட்டு வைரலாக்கினர்.

    • அமலாக்கத் துறையினர் சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது.
    • தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான் என்று ஜெயக்குமார் கூறினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

    அரசியலைப் பொறுத்தவரை நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. பலரும் ஒன்று கூடி உள்ளார்கள். இது தொடருமா என்பதுதான் கேள்விக்குறி. கூடிவிட்டு எல்லோரும் கையைத் தூக்கிவிட்டதால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மட்டும் எண்ணாதீர்கள். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதால் எந்த தாக்கமும் ஏற்படாது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடுமையான கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற பெட்டிகளை கழற்றி விட்ட பின் அ.தி.மு.க. ரெயில் சென்று கொண்டிருக்கிறது.

    தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான். அமலாக்கத்துறை சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது.

    தேர்தல் நெருங்கும்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு வர வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் எந்த மாற்றமும் ஏற்படலாம்.

    எங்களைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; வந்தால்தான் அதிலுள்ள நெளிவு சுளிவுகள் பற்றி தெரியும் என தெரிவித்தார்.

    • டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்று இருப்பது ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரிய வந்தது.
    • கண்டெய்னர் கதவின் சீலை உடைக்காமல் அதில் உள்ள கதவின் நட்டுகளை கழற்றி 495 டயர்களை திருடி இருப்பது தெரிய வந்தது.

    பொன்னேரி:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து 1500 டயர்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு சென்றது. இந்த டயர்கள் அனைத்தும் பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

    பிரேசில் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் கண்டெய்னர் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் ரூ.8.29 லட்சம் மதிப்பு உள்ள 495 டயர்கள் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக பிரேசில் நாட்டில் உள்ள நிறுவனம் சென்னையில் உள்ள நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் டில்லி பாபு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்று இருப்பது ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரிய வந்தது. மேலும் கண்டெய்னர் கதவின் சீலை உடைக்காமல் அதில் உள்ள கதவின் நட்டுகளை கழற்றி நூதன முறையில் 495 டயர்களை திருடி இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக மணலி சன்னதி தெருவை சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணி (29), திருவொற்றியூரைச் சேர்ந்த இளமாறன் என்கிற அப்புன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவான 4 பேரை போலீசர் தேடி வருகிறார்கள்.

    • வைஷ்ணவி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
    • மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கம்மவார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.

    இதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதேபோல் மணவாளநகர் அடுத்த போளிவாக்கம் வைஷ்ணவி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 21-ந் தேதி சந்தோஷ் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 35) என்பவர் கடந்த 4 வருடங்களாக ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவர், சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள சிந்தலகுப்பம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அதன் முதல்மாடியில் வசித்து வந்தார். கடந்த 21-ந் தேதி சந்தோஷ் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.
    • யாழின் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருவாலங்காடு:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் வசிப்பவர் யாழின் (வயது 31). இவர் அதே ஊராட்சியில் தக்கோலம் செல்லும் சாலையில் இன்டர்நெட் சென்டர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவர் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை பாதியளவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.

    இதுகுறித்து யாழின் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    ×