திருவாலங்காடு அருகே கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.யாழின் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருவாலங்காடு அருகே கடையின் பூட்டை உடைத்து திருட்டு
Published on

திருவாலங்காடு:

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் வசிப்பவர் யாழின் (வயது 31). இவர் அதே ஊராட்சியில் தக்கோலம் செல்லும் சாலையில் இன்டர்நெட் சென்டர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவர் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை பாதியளவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து யாழின் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com