என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பம்பட்டு அருகே ஆட்டோ டிரைவருக்கு வெட்டு
- மோதலில் வெங்கடேசனுக்கு கத்தி வெட்டு விழுந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, அண்ணா நகர், முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
வேப்பம்பட்டு அரசு மதுபான கடை அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இந்த மோதலில் வெங்கடேசனுக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






