கள்ளக்காதல் தகராறில் ஆஸ்பத்திரி ஊழியர் கொலை- 5 ஆண்டு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தவர் டெல்லியில் கைது

பக்கத்து வீட்டில் வசித்த லட்சுமி என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முகமது இர்பானை போலீசார் தேடி வந்தனர்.
கள்ளக்காதல் தகராறில் ஆஸ்பத்திரி ஊழியர் கொலை- 5 ஆண்டு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தவர் டெல்லியில் கைது
Published on

அம்பத்தூர்:

கொரட்டூர், சிவலிங்க புரத்தைச் சேர்ந்தவர் சாமிதாஸ் (52). இவர், அசோக் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு இவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கிணற்றில் கல்லை கட்டி போடப்பட்டு இருந்தது.

பக்கத்து வீட்டில் வசித்த லட்சுமி என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. இந்த கொலை தொடர்பாக லட்சுமியுடன் கணவர்போல் வசித்து வந்த முகமது இர்பான், மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக லட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த முகமது இர்பானும், லட்சுமியும் பின்னர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் கோவையில் பதுங்கி இருந்த லட்சுமியை போலீசார் கைது செய்தனர். 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முகமது இர்பானை போலீசார் தேடி வந்தனர். இதில் அவர் டெல்லியில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. இதை த்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்று முகமது இர்பானை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com