என் மலர்
திருப்பூர்
- வேப்ப மரங்கள் பலவற்றை சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 20க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்.
- அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் விஐபி நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டபட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வேப்ப மரங்கள் பலவற்றை சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 20க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப் -இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார், மாதப்பூர் நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில், ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டவுடன் அந்தப் பகுதியில் இருந்த சிலர் எழுந்து ஓட முயற்சித்த போது அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள், மாதப்பூர் ஊராட்சி விஐபி., நகரில் 20-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி கடத்தியது தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் மாதப்பூர் கதர்க்கடை வீதியைச் சேர்ந்த கருப்பையா மகன் வீரமணி(33) ,அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மகாலிங்கம்,(34) ,பெரியசாமி மகன் திருமலைச்சாமி(25), ஆறுமுகம் மகன் வெங்கடாசலம்(43), தனலிங்கசாமி,(28) ,சக்திவேல்(57) ஆகிய 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- காமராஜர் உருவ சிலைக்கு இளைஞர் அணி தலைவர் சுகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளியில் மற்றும் தாயம்மாள் லே அவுட் மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கும் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
காமராஜரின் 121 வது பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில்அனுப்பர்பாளையத்தில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு இளைஞர் அணி தலைவர் சுகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளியில் 150 மாணவ மாணவிகளுக்கும், தாயம்மாள் லே அவுட் மாநகராட்சி பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கும் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது .
இதில் மத்திய மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் அப்பாஸ்,மத்திய மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்,மத்திய மாவட்ட கௌரவ ஆலோசகர் லோகு ,மத்திய மாவட்ட ஆலோசகர் வசந்த் ,மாவட்ட நிர்வாகி மகேந்திரன் , மருது, தெற்கு நகர நிர்வாகிகள் ஹரிஸ் ராம்,முருகன், சரவணக்குமார், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அன்பகம் திருப்பதி தலைமை தாங்கி காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- தன்னலமற்ற சேவையை காமராஜர் செய்து அணைகள் பல கட்டி நீர்ப்பாசன புரட்சியை ஏற்படுத்தினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கே.வி. ஆர்.நகர், செல்லம்நகர் மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42-வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தலைமை தாங்கி காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியை தொடங்கி வைத்து கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசும்போது, 'தன்னலமற்ற சேவையை காமராஜர் வழங்கினார். அணைகள் கட்டி நீர்ப்பாசன புரட்சியை ஏற்படுத்தினார். அவரைப்போல் பொதுநல சேவையை மாணவ- மாணவிகள் செயல்படுத்த உறுதி ஏற்க வேண்டும்' என்றார். பின்னர் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தலைமை ஆசிரியர் மருதையப்பன், நிர்வாகிகள் சிட்டி பழனிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, பொன் மருதாசலம், மாரிமுத்து, தமிழன், அய்யப்ப சேவா சங்க தலைவர் சுனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசுப்பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
- பேருந்து ஓட்டுநா் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
அவிநாசி:
திருப்பூரில் இருந்து அரசுப் பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. கருவலூா் காளிபாளையம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த பொக்லைன் வாகனம், அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து ஓட்டுநா் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
- அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடந்த மே 24 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
- பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்
திருப்பூர்:
திருப்பூா், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-
திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடந்த மே 24 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில், எட்டாம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல் பிரிவுகள், மேம்பட்ட தொழில் நுட்ப படிப்பான மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெறலாம். ஒரு குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு டூல் கிட் விலையில்லாமல் வழங்கப்படும். அரசுப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயின்று இந்தப் பயிற்சியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் தமிழக அரசின் புதுமைப் பெண்திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 கூடுதலாகப் பெற்று வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
ஆகவே, விருப்பமுள்ள மாணவ, மாணவியா் திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2429201, 04258 - 230307, 04252 - 22334 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச முழு நேர அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
- பயிற்சி முடித்த அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
திருப்பூர்:
கனரா வங்கியின் சாா்பில் நடத்தப்படும் இலவச அழகு கலைப் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச முழு நேர அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது காலை, மாலை வேளைகளில் தேநீா், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடித்த அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா்-641652 என்ற முகவரிக்கு நேரில் வரவும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயலுக்குள் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுது செய்து கொண்டிருக்கிறார்.
- ஒரு பயனர், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்.
மனிதர்கள்-விலங்குகள் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிலிபித் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் புலி ஒன்று உலா வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில், வயலுக்குள் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுது செய்து கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் வரிப்புலி ஒன்று சாதாரணமாக நடந்து செல்வதை காண முடிகிறது. இதை மற்றொரு விவசாயி வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை ராஜ்லக்கானி என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் புலியையும், மனிதனையும் இவ்வளவு நெருக்கமாக பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளனர்.
வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். அதில் ஒரு பயனர், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்.
- பள்ளியில் இருந்து வந்த மாணவி ஒருவரை தாமஸ்குட்டி சரமாரி தாக்கினார்.
- போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய தாமஸ் குட்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்(வயது 22). இவரது தங்கை திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று மாலை தனது தங்கையை அழைத்து வருவதற்காக மாதேஷ் தனது நண்பர்களான வினோத்குமார்(23), தாமஸ்குட்டி(22) ஆகியோருடன் பள்ளிக்கு சென்றார். முன்னதாக, வினோத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு 3 பேரும் மது அருந்தி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் மதுபோதையில் 3 பேரும் பள்ளி முன்பு காத்திருந்தனர். அப்போது பள்ளியில் இருந்து வந்த மாணவி ஒருவரை தாமஸ்குட்டி சரமாரி தாக்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் தாமஸ் குட்டியை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி சென்றுவிட்டார்.
இதையடுத்து அவருடன் வந்த மாதேஷ், வினோத்குமார் ஆகிய இருவரையும் பிடித்து சரமாரி தாக்கினர். இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் 2பேரையும் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தாமஸ்குட்டி, பழனியம்மாள் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலிக்க மறுத்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் தாமஸ்குட்டி, மாணவியை மதுபோதையில் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய தாமஸ் குட்டியை வலைவீசி தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த மாணவியை பள்ளி முன்பு வாலிபர் சரமாரி தாக்கிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மொத்தம் 51 வாகனங்கள் வரும் ஜூலை 25ந் தேதி காலை 10 மணி அளவில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
- மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் இந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஜூலை 25 ந் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-
திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்ட்ட 34 இருசக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் வரும் ஜூலை 25ந் தேதி காலை 10 மணி அளவில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
திருப்பூரை அடுத்த அவிநாசி மடத்துப்பாளையம் சாலையில் சிவகுமாா் ரைஸ் மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் இந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. ஆகவே, மேற்கண்ட ஏலத்தில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அசோக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தகுமாா் , சுரேஷ்குமாா் ஆகியோரைக் குத்தியுள்ளாா்.
- அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
திருப்பூர்:
கும்பகோணம் அருகில் உள்ள வன்னிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பி.ஆனந்தகுமாா் (வயது 24). இவரது அண்ணன் சுரேஷ்குமாா் (27). இவா்கள் இருவரும் திருப்பூா் ஸ்ரீ நகரில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளா்களாகப் பணியாற்றி வந்தனா்.
இந்த நிலையில், அனுப்பா்பாளையம் சந்தைப்பேட்டையில் கைப்பேசி பழுது நீக்கும் கடை வைத்திருந்த ஜாா்ஜ் என்கிற அசோக்குமாா் (32), ரவி என்கிற ஜெயகுமாா் (33) ஆகியோரிடம் இருவரும் பகுதிநேர வேலை செய்து வந்திருந்தனா்.இதையடுத்து, சகோதரா்கள் இருவரும் தனியாக செல்போன் பழுது நீக்கும் கடை வைப்பதற்கு முயற்சி செய்து வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், ஆனந்தகுமாா், சுரேஷ்குமாா் ஆகியோா் கடந்த 2013 மே 5 ந்தேதி அனுப்பா்பாளையம் சந்தைபேட்டை அருகே வந்தபோது அவா்களைத் தடுத்து நிறுத்தி அசோக்குமாா், ஜெயகுமாா் ஆகியோா் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.
அப்போது அசோக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தகுமாா் , சுரேஷ்குமாா் ஆகியோரைக் குத்தியுள்ளாா். இதில், காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் கோவையில் உள்ள தனியாா் மருத்துவனையில் சோ்கப்பட்டிருந்த ஆனந்தகுமாா் உயிரிழந்தாா். இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், அசோக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் எஸ்.கனகசபாபதி ஆஜரானாா்.
- கடன் பிரச்சினை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் கூலிபாளையம் ரெயில் நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
இதில் இறந்தவர் திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தை சேர்ந்த சரவணன் (வயது 42) என்பது தெரிய வந்தது. அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்கையில், சரவணன் லாரி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் ரெயில் முன் பாய்ந்துதற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தீயை அணைக்கும் வழிமுறைகளை தீயணைப்பு நிலைய அலுவலர் விரிவாக விளக்கி கூறினார்.
காங்கயம்:
காங்கயம்-கோவை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்கும் வழிமுறைகளையும் தீயணைப்பு நிலைய அலுவலர் விரிவாக விளக்கி கூறினார். மேலும் தீ அணைக்கும் வழிமுறைகள் பற்றி தீ அணைக்கும் கருவிகள் வைத்து அனைவருக்கும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






