காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை

தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.தீயை அணைக்கும் வழிமுறைகளை தீயணைப்பு நிலைய அலுவலர் விரிவாக விளக்கி கூறினார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

காங்கயம்:

காங்கயம்-கோவை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்கும் வழிமுறைகளையும் தீயணைப்பு நிலைய அலுவலர் விரிவாக விளக்கி கூறினார். மேலும் தீ அணைக்கும் வழிமுறைகள் பற்றி தீ அணைக்கும் கருவிகள் வைத்து அனைவருக்கும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com