search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை  குத்திக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
    X

    கோப்புபடம்

    திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை குத்திக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

    • அசோக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தகுமாா் , சுரேஷ்குமாா் ஆகியோரைக் குத்தியுள்ளாா்.
    • அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    திருப்பூர்:

    கும்பகோணம் அருகில் உள்ள வன்னிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பி.ஆனந்தகுமாா் (வயது 24). இவரது அண்ணன் சுரேஷ்குமாா் (27). இவா்கள் இருவரும் திருப்பூா் ஸ்ரீ நகரில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளா்களாகப் பணியாற்றி வந்தனா்.

    இந்த நிலையில், அனுப்பா்பாளையம் சந்தைப்பேட்டையில் கைப்பேசி பழுது நீக்கும் கடை வைத்திருந்த ஜாா்ஜ் என்கிற அசோக்குமாா் (32), ரவி என்கிற ஜெயகுமாா் (33) ஆகியோரிடம் இருவரும் பகுதிநேர வேலை செய்து வந்திருந்தனா்.இதையடுத்து, சகோதரா்கள் இருவரும் தனியாக செல்போன் பழுது நீக்கும் கடை வைப்பதற்கு முயற்சி செய்து வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில், ஆனந்தகுமாா், சுரேஷ்குமாா் ஆகியோா் கடந்த 2013 மே 5 ந்தேதி அனுப்பா்பாளையம் சந்தைபேட்டை அருகே வந்தபோது அவா்களைத் தடுத்து நிறுத்தி அசோக்குமாா், ஜெயகுமாா் ஆகியோா் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.

    அப்போது அசோக்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தகுமாா் , சுரேஷ்குமாா் ஆகியோரைக் குத்தியுள்ளாா். இதில், காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் கோவையில் உள்ள தனியாா் மருத்துவனையில் சோ்கப்பட்டிருந்த ஆனந்தகுமாா் உயிரிழந்தாா். இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இந்த வழக்கானது திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், அசோக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் எஸ்.கனகசபாபதி ஆஜரானாா்.

    Next Story
    ×