என் மலர்
திருவாரூர்
- வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த யுவராஜ் தவறி சாலையில் விழுந்தார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகில் உள்ள செட்டிசிமிழியை சேர்ந்தவர் உலகநாதன் மகன் யுவராஜ் (வயது 20). இவர் கட்டட வேலை செய்து வந்தார்.
இவரும் இவரது நண்பர் அரவிந்த் (22) என்பவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது கொரடா ச்சேரி அருகே ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கிய போது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த யுவராஜ் தவறி சாலையில் விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த யுவராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வது.
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் கையேடு.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழப்பாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி சத்யா தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக வழிகாட்டி ஆசிரியர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.
இதில் பள்ளி வளர்ச்சி மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும், மாணவர்களின் கற்பித்தல் திறன் பற்றியும் கலந்துரையாடினர்.
இல்லம் தேடி கல்வியில் மாணவர்கள் பங்குபெற கேட்டுக்கொள்ளப்பட்டது.
கலை திருவிழா, குழந்தை களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு, இரண்டு வகுப்பறை கட்டிடம், கழிவறை கட்டி முடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அ டையாள அட்டை மற்றும் உறுப்பினர் கையேடு வழங்கப்பட்டது.
மேலும், அனைவரும் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கூட்ட நிறைவில் மறைந்த உறுப்பினர் ஜெகதீசுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முடிவில் ஆசிரியர் மதன்கு மார் நன்றி கூறினார்.
- மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்.
- முத்துப்பேட்டை சுற்றுவட்டார மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், வாழ்வுரிமை குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் பேசினர்.
இதில், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
- இத்திட்டத்தை பள்ளிகள், உணவகங்கள் அவர்களின் இடத்திலேயே செயல்படுத்த முன்வரவேண்டும்.
- மக்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் இயற்கை முறையில் மக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் சிறந்த குப்பை மேலாண்மை செய்யும் வணிக நிறுவனங்கள், பள்ளிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமையில் நடைபெற்றது.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சான்று வழங்கி பேசும்போது, நகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கபடும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பையிலிருந்து செல்வம் என்ற திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் இயற்கை முறையில் மக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தை பள்ளிகள், உணவகங்கள் அவர்களின் இடத்திலேயே செயல்படுத்த முன்வரவேண்டும்.
துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் நகரை தூய்மை நகராக பராமரிக்க முடியும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பு தேவை என்றார்.
நுண்ணுரம் தயாரிப்பு பணியை செய்துவரும் பாலம் தொண்டு நிறுவனத்திற்கான பாராட்டு சான்றினை செயலாளர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் ஆதேஸ் தலைமையில் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர்கள், வீரையன், ஈ ஸ்வரன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் அம்பிகா, சுகாதார பணியாளர்கள், கலந்து க்கொண்டனர்.
- மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
- மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி 400மீ குழாய் அமைப்பு மற்றும் மின்விசை அறை ஆகியவற்றை ஓ.என்.ஜி.சி செயல் இயக்குனர் அனுராக் தலைமையில் செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்து ஊராட்சியிடம் ஒப்படைத்தார்.
இவ்விழாவில் மாரிமுத்து எம்.எல்.ஏ, கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் சுஜாதா பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி பாலசுந்தரம், ஓ.என்.ஜி.சி பொறியியல் துறை அதிகாரி சுதிஷ், பொது மேலாளர் சம்பத், ஏரியா மேனேஜர் சரவணன், மேலாளர் கண்ணன், கட்டுமானபிரிவு மேலாளர் ரெத்தினம், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்குப் பகுதியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பொதுமக்களின் மழை மற்றும் வெள்ளக்கால பயன்பாட்டிற்காக, ஓ.என்.ஜி.சி சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு தங்கும் முகாம் கட்டிடங்களை ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குனர் அனுராக் முன்னிலையில் செல்வராஜ் எம்.பி. மற்றும் மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த செல்வராஜ் எம்.பி., அவை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளதால் மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் ஒன்றி யப் பெருந்தலைவர்பாஸ்கரன், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி ராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரெத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்ததும், தற்போது சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்தது.
- காப்பகத்தில் நல்ல உணவு பராமரிப்பு உரிய பாதுகாப்பு தேவையான மனநல மருத்துவ உதவிகள் செய்து ஒரு சில மாதத்தில் இவரை சரியான நிலையில் அனுப்பி வைப்போம் என்றார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி மனநலம் பாதிக்கப்பட்ட பட்டம் படித்த பெண் மீட்பு நம்பிக்கை மனநல காப்பகத்தில் இரவோடு இரவாக ஒப்படைப்பு
திருவாரூர் அரசினர் மருத்துவக்கல்லூரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த கனகவல்லி (வயது 32) என்பதும், திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்ததும், தற்போது சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவுப் படி இன்ஸ்பெக்டர் மணிமேகலை, காவலர்கள் மீனாட்சி, சத்யா ஆகியோ ர் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் ஆலோசனை பெற்று மீட்டெடுத்து நம்பிக்கை மனநல காப்பகம் கொண்டு வந்த சேர்த்தனர் .
நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் இவரை மனநல காப்பகத்தில் சேர்த்துக் கொண்டு கூறுகையில் ,காப்பகத்தில் நல்ல உணவு பராமரிப்பு உரிய பாதுகாப்பு தேவையான மனநல மருத்துவ உதவிகள் செய்து ஒரு சில மாதத்தில் இவரை சரியான நிலையில் அனுப்பி வைப்போம் என்றார்.
இந்நிகழ்வில் நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் சரவணன், செவிலியர் சுதா, சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
- புனித கொடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.
- முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உலக புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹா அமைந்துள்ளது.
தர்ஹாவின் 721-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியி லிருந்து புனித கொடியை பிராத்தனையுடன் தர்ஹா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.
பின்னர், புனித கொடியை சுமந்த பூ பல்லாக்கின் ஊர்வலம் தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.
இதில் பெரிய பல்லாக்குடன் பூக்களால் ஆன சிறிய பல்லாக்குகள், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் யானை, ஒட்டகங்கள், ஆட்டகுதிரைகள் என ஊர்வலமாக வந்தது.
ஊர்வலம் தர்ஹாவிலி ருந்து புறப்பட்டு ஜாம்புவா னோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் சென்றது.
அங்கு ஆசாத்நகர் மீன் மார்க்கெட் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் சென்றது. அங்கு ஆட்டோ சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறுபாலம், ஜாம்புவானோடை சென்று தர்ஹாவை வந்தடைந்தது.
பின்னர், தர்ஹா அருகில் உள்ள அம்மா தர்ஹா, ஆற்றாங்கரை பாவா தர்ஹா சென்று மீண்டும் தர்ஹாவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது.
பின்னர், கொடியேற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து, அகமது முகைதீன் லெப்பை துஆ ஓதினார். பின்னர், சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு புனித கொடியேற்றப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து, 8-ந் தேதி இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.
- பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் அதன் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
- நெல் பயிரில் மஞ்சள் நோய் மற்றும் அதன் மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படும் அட்மா திட்டத்தில் எழிலூர் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள் பற்றியும், பாரம்பரிய நெல் ரகம் அதன் மதிப்பு கூட்டுதல் பற்றியும், தற்போது நிலவி வரும் காலநிலையில் நெல் பயிரில் ஏற்படக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் மற்றும் அதன் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் மண்வள மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் இயற்கை பூச்சி விரட்டிகள் பற்றியும் நெல் பயிரில் மஞ்சள் நோய் மற்றும் அதன் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை பெரும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், கைபேசி எண் இ.கே.ஒய்.சி. இணைக்கவும், மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து பேசினார்.
முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார். பயிற்சியில் எழிலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் இளமதி சிவகுமார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் முன்னோடி விவசாயிகள் மணிமொழி, சுபத்ரா என 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபானகடைகள் அனைத்தும் மூட வேண்டும்.
- மேற்படி நாட்களில் மதுபா னங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை தர்ஹா பெரிய கந்தூரி விழா தொடர்பாக 25.11.2022 கொடியேற்றம் மற்றும் 04.12.2022 அன்று சந்தனகூடு நடைபெறவுள்ளதை முன்னிட்டு 25.11.2022 வெள்ளி கிழமை மற்றும் 04.12.2022 ஞாயிற்று கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு முத்துப்பேட்டை மற்றும் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லரைவிற்பனை மதுபா னகடைகள் அனைத்தும் மூடவும் அன்றைய நாட்களை விடுமுறை நாட்களாக அறிவித்து முத்துப்பேட்டை மற்றும் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபானகடைகள் அனைத்தும் மூடவும், மேற்படி நாட்களில் மதுபா னங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது என தொடர்புடைய டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ஆணையிடப்படுகிறது.
மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும்ப ட்சத்தில் தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர்காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி.
- நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை.
மன்னார்குடி:
மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், பேங்க் ஆப் பரோடா, மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டையில் வருகிற 29-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கால்நடை மருத்துவ முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மன்னார்குடி கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில் திருவாரூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் (பொ) டாக்டர் ராமலிங்கம், ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், பேங்க் ஆப் பரோடா மேலாளர் சிவின்டு சட்டர்ஜி , பேங்க் ஆப் பரோடா விவசாய அதிகாரி மோனிகா, பேங்க் ஆப் பரோடா ராஜ்குமார், மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன், செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், உள்ளிக்கோட்டை கால்நடை மருத்துவர் கார்த்திக், ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் டாக்டர் டி.தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
இந்த கால்நடை மருத்துவ முகாமில் மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? மாடு, ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய் பரவாமல் தடுப்பது எப்படி? கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பது எப்படி ? என்பது உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்களில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கப்ப டுகிறது.
மேலும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தடுப்பூசி செலுத்த ப்படுகிறது. இந்த முகாமில் சிறந்த கால்நடைகன்றுகளை பராமரிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்ப டுகின்றன.
- 24 மணி நேரமும் சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும்.
- மன்னார்குடியில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் நேரில் ஆய்வு செய்தார்.
அவரை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, நகர்மன்ற தலைவர் சோழராஜன், திமுக நகர செயலாளர் வீரா.கணேசன், மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.
விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மருத்துவமனையில் உள்ள ஐடிபிசிஆர் சோதனை மையத்தையும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், அண்மையில் திறக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவரிடம் மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பான நேசக்கரம் சார்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.எஸ்.ராஜேந்திரன், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் டாக்டர் வி.பால கிருஷ்ணன், மிட்டம் ரோட்டரி சங்கத் தலைவர் ரெங்கையன், நுகர்வோர் அமைப்பு நிர்வாகி வே ல்முருகன், லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் சந்தோஷ், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், சிரில் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இருதய நோய் டாக்டர் நியமிக்க வேண்டும், 24 மணி நேரமும் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும். 2019 ம் ஆண்டில் இடிந்துபோன கட்டிடத்துக்கு மாற்றாக சட்டமன்றத்தில் அறிவித்தபடி புதிய கட்டிடம் கட்ட வேண்டும், எம்.ஆர். ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும், மன்னார்குடியில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வே ண்டும்.
லேப்ராஸ்கோபி முறையிலான அறுவை சிகிச்சை செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்க வேண்டும், பவர் லாண்டரி வசதி ஏற்படுத்த வேண்டும்,என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டன.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.
- விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ண ப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5000 வைப்புத்தொகை டாம்செம் நிறுவனத்திற்கு செலுத்தப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர் நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்திற்கு 2 ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகை ரூ.3 லட்சத்தில் 30 சதவீதம் மானியம் ரூ.90,000 வீதம் ரூ.1.80 மானியமும், பழங்குடியினர் ஒருவருக்கு மானியம் ரூ.90,000 வீதம் ரூ.0.90 லட்சம் மானியமும் என மொத்தம் 3 நபர்களுக்கு ரூ 2.70 லட்சம் மானியம் இலக்கு நிர்ணயித்து அரசாணை வரப்பெற்றுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது.
தாட்கோவின்மாவட்ட அளவிலான தேர்வு குழுவி னரால் தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் டாம்செம் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும்.
விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ண ப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5000 வைப்புத்தொகை டாம்செம் நிறுவனத்திற்கு செலுத்தப்படும்.
கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்ட த்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 இலட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.
மேலும், இதில் பயன்பெற விரும்புபவர்கள் தாட்கோ என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பான் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், திட்ட அறிக்கை ஆகிய ஆவண ங்களுடன் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளர் அலுவலகம், அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி எதிரில், நாகை பைபாஸ் ரோடு, திருவாரூர் என்ற முகவரியிலும், 04366-250017 மற்றும் 9445029478 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






