என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • கல்லூரி சார்பில் மாணவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
    • மாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்கிற மனிதர்கள் வாழ்வில் முன்னிலை வகிக்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட நிர்வா கம், பொது நூலகத்துறை, பபாசி ஆகியவை இணைந்து மாவட்டத்தில் முதல் புத்தக திருவிழா நடத்த உள்ளது.

    இதற்கான விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சார இயக்கம் திருத்துறைப்பூண்டி பிர்லியண்ட் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    விழாவில் திருத்து றைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ராய் டிரஸ்ட் நிறுவன தலைவர் துரை ராயப்பன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி, வாசகர் வட்ட துணை தலைவர் கமல், கல்லூரி நிர்வாக அலுவலர் முத்தலிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில்:-

    திருவாரூரில் நடைபெறும் புத்தக திருவிழாவில் கல்லூரி சார்பில் மாணவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

    இன்றைய போட்டி நிறைந்த உலகில் அனைத்து துறைகளிலும் தங்களது அறிவை விரிவுபடுத்தி கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

    மாற்றத்தை எதிர்கொ ண்டு ஏற்றுக்கொள்கிற மனிதர்கள் வாழ்வில் முன்னிலை வகிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் விமலா அனை வரையும் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் தவமலர் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணலி நூலகர் செந்தில் நாதன் செய்திருந்தார்.

    • ஒப்பந்த தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும்.
    • தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி மற்றும் பேரூராட்சிகளின் குடிநீர் திட்டம், தெருவிளக்கு பராமரிப்பு, தூய்மைப்பணி ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்க அரசாணையின்படி மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு சி.பி.ஐ. நகர செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் முத்தையன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாரிமுத்து, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் முருகையன், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் உள்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • காலில் கட்டுடன் வந்து அமர்ந்திருந்த பெண்ணிடம் எழுந்து சென்று குறைகளை கேட்டறிந்தார்.
    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பெட்டிசன்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில் பெட்டிசன் மேளா நடைபெற்றது.

    இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பெட்டிசன்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    அப்போது, கால் உடைந்த நிலையில் காலில் கட்டுடன் வந்து அமர்ந்திருந்த பெண்ணிடம் எழுந்து சென்று போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் குறைகளை கேட்டறிந்தார்.

    இது பொதுமக்களின் மனதில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் மனித நேயத்தையும், பெருந்தன்மையையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • கோவில் மனை, மடம், நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர்.
    • அறநிலையத்துறைக்கு பகுதிக்கு பதிலாக வாடகை செலுத்த வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் கோவில் மனை, மடம், நிலங்களில் குடியிருப்போர் சங்க கூட்டம் நாகை செல்வராஜ் எம்.பி. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சந்திரராமன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, நகர செயலாளர் மார்க்ஸ், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், கோவில் மனை, மடம், நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர்.

    தற்போது அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் பகுதி என்பதை மாற்றி வாடகை என்ற பெயரில் மிக அதிகமான தொகை நிர்ணயம் செய்து, அறநிலையத்துறைக்கு பகுதிக்கு பதிலாக வாடகை செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்து வருகிறார்கள்.

    அவ்வாறு நிர்ணயம் செய்த தொகையை கட்ட தவறினால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீடு கட்ட மற்றும் எந்த சலுகைகளும் கிடைக்காது என்றும், இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சொல்லி வருவதை கைவிட வேண்டும். எனவே, தமிழக முதல்-அமைச்சரும், அறநிலையத்துறை அமைச்சரும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யோகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிலூர் ரவி, அமைப்பின் பொறுப்பாளர்கள் ஆடிட்டர் கருணாநிதி, மங்கலூர் பிரபாகரன், முஜிபூர் ரஹ்மான், ரெத்தினம், மருதுராஜேந்திரன், திருமலை உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கோவில் மனை மடம் நிலங்களில் குடியிருக்கும் சுமார் 300-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நிர்வாகி அன்பன் நன்றி கூறினார்.

    • ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது.
    • துரோகிகளை பற்றி டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகர அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.மூர்த்தியின் மகள் பூஜாவுக்கும் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகள் கார்த்திக்குக்கும் திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் சசிகலா, டி.டி.வி.தினகரன், திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது. ஒரு சில சுயநலவாதிகளால் தமிழகம் பாழடைந்து விட்டது. அவர்கள் செய்த தவறுகளால் தான், தீய சக்தியான தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் தான் இன்றைக்கு தவறான நடவடிக்கைகளில் சட்டசபையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    அம்மாவினுடைய கட்சி, அம்மாவின் தொண்டர்கள் பலர் தவறான பதவி வெறியால், நடைபெறும் பதவி சண்டைகளை பார்த்து வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அம்மாவினுடைய இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை உணரும் காலம் விரைவில் வரும். துரோகிகளை பற்றி டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். துரோகிகள் தான் என்பதை அவர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

    குறிப்பிட்ட சில நபர்களை வைத்து வைத்துக்கொண்டு கட்சியை விட்டு யாரையும் நீக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் தொண்டர்கள் சேர்ந்து கட்சியின் தலைமை பதவியான பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தலைவர் காலத்தில் விதி இருந்தது. அந்த விதியை பழனிசாமி மாற்றி யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதை மாற்றி 20 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு வேண்டும் என்று தலைவரின் விதியையே மாற்றி அமைத்துவிட்டார்கள்.

    துரோகம் செய்தவர்களுக்கு வெகு விரைவில் மக்களும் தொண்டர்களும் தீர்ப்பு தருவார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரட்டை இலை இருந்தும் தி.மு.க.விற்கு 20 மாதங்களில் 5 ஆண்டுகளில் வரவேண்டிய கெட்ட பெயர் இருந்தும், ஏதோ 20,000 ஓட்டில் அவர்கள் ஜெயிப்பார்கள் என்று நினைத்தோம்.

    ஆனால் 67,000 வாக்கு வித்யாசத்தில் ஜெயிப்பது என்பது எதிர்க்கட்சியாக போட்டியிட்ட அ.தி.மு.க. எங்கள் கோட்டை என்கிற இடத்தை கோட்டை விட்டுவிட்டது. செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று சொன்னார் என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருத்துறைப்பூண்டியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தண்ணீர் என்பது தங்கம், வைரத்தை விட மதிப்பு மிக்கது.

    திருத்துறைப்பூண்டி:

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் 17- வது வார்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கவுன்சிலர் ரமேஷ்குமார் தலைமையிலும், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

    நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து க்கொண்டு பேசும்போது, தண்ணீர் என்பது தங்கம், வைரத்தை விட மதிப்பு மிக்கது. எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி தண்ணீருக்கு உண்டு.

    உலகமே தண்ணீருக்கு போரிடும் நிலை வரலாம். நீர்நிலைகள் அனைத்தையும் தூய்மைபடுத்தி தண்ணீரை சேமிக்க வேண்டும். வீணாக தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    பெண்கள் நினைத்தால் மட்டுமே தண்ணீரை பாதுகாக்க முடியும்.எனவே நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    பின்னர் தண்ணீர் சிக்கனம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    நீர் நிலை கரைகளில் மரக்கன்று நடப்பட்டது.

    முன்னதாக தூய்மை பாரத மேற்பார்வையாளர் அம்பிகா வரவேற்றார், மகளிர் ஒருங்கிணைப்பாளர் நதியா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பெண்கள் ,சுகாதார பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    • மணலூர் அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
    • கண்காட்சியை 1-ம் வகுப்பு மாணவர்கள் ஒருங்கிணைந்து திறந்து வைத்தனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த மணலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். முன்னதாக எண்ணும் எழுத்தும் ஆசிரியர் பிரபா அனைவரையும் வரவேற்றார்.

    பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வசுந்தரா தேவி, துணை தலைவர் பார்வதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாதேவன், அன்னையர் குழு தலைவி ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி ஆசிரியர்கள் பரமேஸ்வரி, துர்க்கா தேவி, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் கலைவாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் புனிதா சிறப்புரையாற்றினார்.

    இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஷர்மிளா, சங்கீதா, சுபஸ்ரீ, வினோதினி, ராஜலட்சுமி மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக "கற்றலை கொண்டாடுவோம்" கண்காட்சியை 1-ம் வகுப்பு மாணவர்கள் ஒருங்கிணைந்துரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    மேலும், கற்றலை கொண்டாடுவோம் பேனரில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரும் கையெழுத்திட்டு மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முடிவில் ஆசிரியர் விஜயலட்சுமி நன்றியுரை வழங்கினார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

    திருவாரூர்:

    தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள 412 வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நான்கு வருடமாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவியிறக்கம் பெற்ற வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் போன்ற பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டவாறு பதவியிறக்கத்திலிருந்து பாதுகாத்திட வேண்டும், வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் முதல் அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக வருவாய் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை பிரிவில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வருவாய் துறை சார்ந்த பணிகள் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் உடனடியாக வருவாய் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக மனித சங்கிலி தொடர் வேலை நிறுத்த போராட்டம் போன்றவற்றில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
    • குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்து இன்றியமையாத தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டு கொண்டார்.

    முன்னதாக செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    இதில் ஊராட்சி துறை சார்பில், பணி மேற்பார்வையாளர் அமுதா கலந்து கொண்டு, குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் பற்றி எடுத்துக் கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், நீரினால் பரவும் நோய்கள் பற்றியும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் பாலசண்முகம், கிராம சுகாதார செவிலியர் கலைமணி ஆகியோர் சுகாதாரத் துறை அன்றாடம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு சிறுதான்யம் பயன்படுத்த வேண்டும் என்று தலைப்பிட்டு பேசினார்.

    துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.

    • நாச்சிகுளம் அரசு பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • பள்ளிக்குத் தேவையானதை முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் செய்து தரப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டாக்டர் கந்தசாமி தலைமையிலும், தலைமை ஆசிரியர்தமிழ்செல்வன், பிடிஏ தலைவர் தாஹிர், மேலாண்மை குழு தலைவர்செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    முன்னாள் மாணவர் சங்க செயலாளர்தாஜுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவர் டாக்டர் கந்தசாமி, துணைத்தலைவர்கள் தனுஷ். பாண்டியன், ஜாகிர் உசேன், செயலாளர்தாஜுதீன், துணை செயலாளர்க ள்குருநாதன், சத்யா, பொருளாளர்ஜான் முகமது, ஆலோசகர்களாக ஜெயசீலன், சோமசுந்தரம், தங்கராஜன், சேக்அலாவுதீன், சாகுல் ஹமீது, இர்பான்அலி, செயற்குழு உறுப்பினர்களாக தமிழ்ச்செல்வன், கணேசன், சுந்தரபாண்டியன், முருகானந்தம், செந்தில்குமாரி, அமீன், அபிராமி,காவியா ,அப்துல் ரகுமான், பாசிலன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இக்கூட்டத்தில், அலாவுதீன் ,ஆனந்த், ராஜலட்சுமி உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளிக்குத் மிக அவசியமான தேவைகளை முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் செய்து கொடுப்பது என்றும் வரும் ஆகஸ்ட் மாதம் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து முன்னாள் மாணவர்கள் குடும்ப விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    • பக்தர்களால் ரத காவடிகளும், கோவிலில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிகளும் நடந்தது.
    • விடையாற்றி விழாவும், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி-பருத்திச்சேரி கிராமத்தில் உள்ள குளுந்தமா காளியம்மன் கோவிலில் 77-ம் ஆண்டு பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று இரவு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

    தொடர்ந்து, அம்மன் வெண்ணை தாழி ரிஷப, சிம்ம, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 7 நாட்களும் வீதி உலா நடைபெற இருக்கிறது.

    விழாவின் கடைசி நாளான 28-ந்தேதி பக்தர்களால் ரத காவடி களும், கோவிலில் கஞ்சி வார்த்தல், அன்னதானம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து விடையாற்றி விழாவும், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமமக்கள், இளைஞர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • பருவமழை காலங்களில் நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதமாக செய்து வருகிறது.
    • பேரிடர் உபகரணங்கள் செயல்விளக்கம் குறித்து பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்புக்குழு தொடக்க நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதமாக செய்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்துடன் பாலம் சேவை நிறுவனம் இணைந்து பேரிடர் கால பணிகளை செய்து வருவதற்கும், தற்போது பேரிடர் மீட்புக்குழு அமைத்துள்ளதற்கும் நகராட்சி சார்பில் பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறினார்.

    மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகணபதி பேசுகையில்:-

    ஆபத்து காலங்களில் மீட்பு பணிகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும், அப்போது தான் பேரிடரி–லிருந்து அனைவரும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

    பேரிடர் மீட்புக்குழு செயல்பாடுகள் குறித்து பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறும்போது, திருவாரூர் மாவட்டத்தில் முதன்முறையாக பாலம் சேவை நிறுவனம் பேரிடர் மீட்புக்குழுவை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி தொடங்கியுள்ளது.

    மேலும், ஒரு லட்சம் மதிப்பிலான நவீன ஒலிபெருக்கி மீட்புகயிறு, ஸ்ரெட்சர், லைப் ஜாக்கெட், நவீன டார்ச்லைட் வாங்கப்–பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் மீட்புக்குழு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என்றார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சக்திவேல், ரமேஷ்குமார், வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி சரவணன், முன்கள மீட்பாளர் கண்ணதாசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பேரிடர் உபகரணங்கள் செயல்விளக்கம் குறித்து பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    ×