என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்களே திறந்து வைத்து"
- மணலூர் அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
- கண்காட்சியை 1-ம் வகுப்பு மாணவர்கள் ஒருங்கிணைந்து திறந்து வைத்தனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த மணலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். முன்னதாக எண்ணும் எழுத்தும் ஆசிரியர் பிரபா அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வசுந்தரா தேவி, துணை தலைவர் பார்வதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாதேவன், அன்னையர் குழு தலைவி ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி ஆசிரியர்கள் பரமேஸ்வரி, துர்க்கா தேவி, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் கலைவாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் புனிதா சிறப்புரையாற்றினார்.
இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஷர்மிளா, சங்கீதா, சுபஸ்ரீ, வினோதினி, ராஜலட்சுமி மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக "கற்றலை கொண்டாடுவோம்" கண்காட்சியை 1-ம் வகுப்பு மாணவர்கள் ஒருங்கிணைந்துரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
மேலும், கற்றலை கொண்டாடுவோம் பேனரில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரும் கையெழுத்திட்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில் ஆசிரியர் விஜயலட்சுமி நன்றியுரை வழங்கினார்.






