என் மலர்
திருநெல்வேலி
- பல்வீர்சிங்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பல்வீர்சிங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். மாவட்ட நிர்வாகம் சார்பில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
இதற்காக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் நாளை ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பல்வீர்சிங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், நிர்வாகிகள் யாசிர் அலி, திலிபன், கார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திராவிடர் தமிழர் கட்சி திருக்குமரன், இந்திய கம்யூனிஸ்டு நெல்லை மண்டல நிர்வாகி கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்ற வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும், இது தொடர்பாக பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- 7-ந்தேதி வெள்ளிக்கிழமை ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.
- 9-ந்தேதி \ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஏசுகிறிஸ்து சிலுவை பாடுகளையும், உயிர்தெழுததையும் நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் கடைப்பிடிக்கிறார்கள்.
தவக்காலத்தில் இறுதி வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புனிதவாரத்தின் முதல் நாளான இன்று குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.
பாளை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற பவனியில் ஏராளமானோர் குருத்தோலையுடன் கலந்து கொண்டனர். இதே போல் கதீட்ரல் பேராலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.
மேலும் பணகுடி, திசையன்விளை, அம்பை, வி.கே.புரம், சேரன்மகாதேவி, ராதாபுரம், கூடங்குளம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.
தூத்துக்குடியில் இன்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. லூர்தம்மாள்புரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்தந்தை பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பு இருந்து பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர் முன்னிலையில் குருத்தோலை கையில் பிடித்தவாறு பவனியாக ஆலயத்துக்கு வந்தனர்.
பின்னர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
இதைப்போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம் ஆலயம், அந்தோணியார் கோவில் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
உடன்குடி கிறிஸ்தியா நகரம் சேகரம் சார்பில் குருத்தோலை கீதபவனி ஆலயம் முன்பு இருந்து புறப்பட்டது. ஓசன்னா என்ற பாடலுடன் புறப்பட்ட ஊர்வலத்தில் சபை மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
ஊர் முழுவதும் சுற்றி வந்த பவனி பின்பு வடக்கு பஜார், சத்தியமூர்த்தி பஜார், சந்தையடிதெரு வழியாக ஆலயத்தை வந்து அடைந்தது.
இதேபோல பண்டாரஞ்செட்டிவிளை சேகரத்தில் சார்பாக சிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து புறப்பட்ட பவனி ஊர் முழுவதும் மற்றும் புதுமனை வழியாக வளம் வந்து மீண்டும் ஆலயம் அடைந்தது. உடன்குடி அருகே உள்ள வேதகோட்டை விளை, சந்தையடியூர், தங்கையூர், கொட்டங்காடு போன்ற கிராமப்புற பகுதியி லும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து ஆலயங்க ளிலிருந்து குருத்தோலைகளை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர். ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலய குருவானவர் டேனியல் தனசன், புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜேம்ஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஆலங்குளம், அண்ணாநகர், நல்லூர், அடைக்கலப்பட்டணம் , ரட்சணியபுரம், ஊத்துமலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சி. எஸ். ஐ. தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலை களை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர்.
கடையம் அருகே உள்ள மேட்டூர் சி.எஸ்.ஐ. பரி திருத்துவ ஆலயத்தில் மேட்டூர் சேகர உதவி குரு ஜோயல் சாம் மெர்வின் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
பல்வேறு வீதி வழியாக சென்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற 6-ந்தேதி பெரிய வியாழன் கடைப்பிடிக்கப்படு கிறது. இதையொட்டி பாதம் கழுவுதல் நடைபெறுகிறது. 7-ந்தேதி வெள்ளிக்கிழமை ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிலுவை பாதை ஊர்வலம் நடை பெறும்.
9-ந்தேதி ஏசுகிறிஸ்து உயிர்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
+2
- தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணய வேண்டும் என்ற உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வந்தது.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள், மருத்துவமனை யின் அனைத்து நிலை ஊழியர்களும் இன்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
பொது இடங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக முக கவசம் அணிந்து செல்வது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து இந்த நடைமுறை இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.
நெல்லை
இதையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வந்தது. நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் இன்று காலை முதலே நோயாளிகளின் உறவினர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் நடமாடும் அனைத்து தரப்பினரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
முகக்கவசம் அணியாமல் சிலர் வந்தபோதிலும், அவர்களுக்கு மருத்து வக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் முகக்கவசம் வழங்கினார். தொடர்ந்து அனைவரையும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தினார்.
ஏற்கனவே சமீப காலமாகவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, வட்டார அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்தபடியே சிகிச்சை அளித்து வருவதால் எங்களுக்கு இது புதிதாக தோன்றவில்லை என டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
தென்காசி, தூத்துக்குடி
தென்காசி, தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இன்று முதல் அனைத்து நோயாளிகள், உறவினர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவு றுத்தப்பட்டனர். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்திட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
ஏனென்றால் நோய் தொற்று என்பது முதலில் ஆஸ்பத்திரிகளிலேயே தொடங்குகிறது. எனவே, ஆஸ்பத்திரிகளில் இத்தகைய சீர்திருத்தத்தை தொடங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதன் பேரில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணியவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
- களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
- திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட சேவை விழா நடந்தது.
களக்காடு:
களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினசரி காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது.
திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட சேவை விழா நடந்தது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாள், வெங்கடாஜலபதி மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் வரதராஜபெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமிகளும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க ரத வீதிகளில் உலா வந்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 8-ம் நாளான 3-ந் தேதி (திங்கட்கிழமை) பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளிகிறார். 10-ம் நாளான 5-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது25).
- இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன் சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது25).
இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன் சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் காவியபிரியாவுக்கும் காதல் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து அசோக், காவியபிரியாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் அசோக்கிற்கும், அவரது மனைவி காவியபிரியா விற்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை யில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே கர்ப்பிணி யான காவியபிரியாவிற்கு கடந்த 23-ந் தேதி வளைகாப்பு விழா நடந்தது. இதற்கு அசோக்கின் உறவினர்களை அழைக்கவில்லை.
இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த அசோக் கடந்த 26-ந் தேதி விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் நாகர்கோ வில் தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு.
வள்ளியூர் :
முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நெல்லைகிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஞான திரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், வள்ளியூர் செயலாளர் சேதுராமலிங்கம், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை செயலாளர் ஜான் கென்னடி, பணகுடி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள்ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட அவைத் தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கிரகாம்பெல் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாள ரும், முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தத்துவத்தின் அடையாளம். கட்சியையும், ஆட்சியையும் வளர்ச்சி அடைய செய்தவர். மிசா சட்டத்தில், திருமணமாகி 6 மாதத்தில் சிறை சென்றவர்.
இந்தியா முழுவதும் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் உற்று நோக்குகின்றனர். கொரோனா காலத்தத்தில் மருத்துவர்களே செல்ல பயந்த கொரோனா வார்டில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியவர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரூ.6 லட்சம் கோடி கடன் இருந்தது. இருந்தாலும் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான மாதம் தோறும் பெண்கள் உரிமை தொகை ஆயிரம் ரூபாயை அண்ணா பிறந்தநாள் அன்று நிறைவேற்றுகிறோம்.
தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கவில்லை. இருப்பினும் கொரோனா காலத்தில் தாய்,தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதியை கொடுத்தார்.அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு.மேலும் 13 ஆயிரம் கோடியில் மாதிரி பள்ளிகள் அமைத்து சுகாதாரம், கல்வியும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்து உள்ளார்.
பேனா சிலை ஏன் வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். பெண் களுக்கு சொத்துரிமையில் பங்கு உண்டு என கையெழுத்து போட்டது, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கையெழுத்து மற்றும் பெண்களுக்கு கல்வி அதிகாரம் கொடுத்து கையெழுத்து போட்டது இந்த பேனா தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நாங்குநேரி எஸ்.ஏ.வி பெட்ரோல் பங்கில் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை நினைவு கூர்ந்து 70 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தை ஆ.ராசா திறந்து வைத்தார்.
நிகழ்சியில் மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோஷல், மாவட்ட துணை செயலாளர்கள் நம்பி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆதி பரமேஸ்வரன், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலை கண்ணு , மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கொண்டனர்.மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி நன்றி கூறினார்.
- ஓய்வூதியதாரர்களின் பதிவு எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஏற்கனவே, ஓய்வூதியம் பெற்று வந்த அசல் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நெல்லை:
நெல்லை, தென்காசி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குலசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் வருகிற ஆண்டிற்கான உயிர்வாழ் சான்றினை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கீழ்கண்ட விவரங்களுடன் பதிவேற்றம் செய்யுமாறும், உயிர்வாழ் சான்றினை தாக்கல் செய்வதற்கு யாரும் நேரில் அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஓய்வூதியதாரர்களின் பதிவு எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆதார் அட்டையினை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். (தவறான ஆதார் எண் உள்ளீடு செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்). வாரியம் மற்றும் தொழிலின் தன்மை சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
ஏற்கனவே, ஓய்வூதியம் பெற்று வந்த அசல் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் வங்கி கணக்கு ஐ.எப்.எஸ்.சி. கோடு, எம்.ஐ.சி.ஆர்.கோடு ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரிய ஓய்வூதியதாரர்கள், அவர்களது சாதியை சரியாக குறிப்பிட வேண்டும்.
புதிய குடும்ப அட்டை எண் மற்றும் அசல் அட்டை ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆயுள் சான்றுக்கு ஆதாரமாக ஓய்வூதிய ஆணை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர் அவரது ஆதார் அட்டையினை கையில் பிடித்துக் கொண்டிருப்பது போல் நேரடி போட்டோ எடுக்கப்பட வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு நெல்லை, தென்காசியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமுதா கார்த்திகேயன் தலைமையில் திசையன்விளையில் தீப்பந்தபோராட்டம் நடந்தது.
- பெண்கள் தீப்பந்தத்தை ஏந்தியபடி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
திசையன்விளை:
ராகுல் காந்தி எம்.பி.பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று இரவு நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமுதா கார்த்திகேயன் தலைமையில் திசையன்விளையில் பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு தீப்பந்தபோராட்டம் நடந்தது. பெண்கள் தீப்பந்தத்தை ஏந்தியபடி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மகாத்மா காந்தி வேஷம் அணிந்து வந்தவரிடம் மத்திய அரசுக்கு எதிரான மனுக்களை கொடுத்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் கலந்துகொண்டு பேசினார் போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மருதூர் மணிமாறன், விஜயபெருமாள், எஸ்.ஜி.ராஜன் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் வேலம்மாள், விமலா, பிரியா, லீலாவதி, லதா, ஸ்ரீதேவி, ஜெயசுதா, ராஜேஷ்வரி உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்
- விசாரணையில் கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
- மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான 5 வாலிபர்களும் இன்று சப்-கலெக்டர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக வந்த புகாரின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணையில் கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இதில் நேற்று பாதிக்கப்பட்ட வாலிபர்கள் மாரியப்பன், செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் ஆகியோர் சென்னை மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதனை பதிவு செய்துகொண்ட ஆணையம் நாளை மறுநாள் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங்கை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான 5 வாலிபர்களும் இன்று சப்-கலெக்டர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு ஆதரவாக சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பாப்பாக்குடி அருகே உள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டியில், சுமார் 10 அடி உயரத்தில் அவரது படம் பொறித்த டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
தற்போது இந்த டிஜிட்டல் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் உதவி போலீஸ் சூப்பிரண்டு நலமுடன் வாழ சிறப்பு பூஜைகளை அப்பகுதி மக்கள் செய்தனர்.
- பயணிகள் வசதிக்காக பஸ்நிலையத்தில் கடைகளுக்கு முன்பாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
- பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் கடும் வெயிலும், மழையிலும் தவித்து வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட புதிய பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்ப ட்டுள்ளது. கீழ்தளத்தில் பெரும்பாலான கடைகள் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது.
பயணிகள் வசதிக்காக பஸ்நிலையத்தில் கடைகளுக்கு முன்பாக நடை பாதை அமைக்கப்பட்டு ள்ளது. ஆனால் இந்த நடை பாதைகளில் பெரும்பாலான வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இதனால் பயணிகள் நடந்து செல்ல இடமின்றி அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் கடும் வெயிலும், மழையிலும் தவித்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து பஸ்நிலைய நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் மாநகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் இன்று மாநகராட்சி அதி காரிகள் பஸ்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சில வியாபாரிகள் ஆகிரமிப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக இன்றுக்குள் ஆக்ரமிப்புகள் அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் வியாபாரிகள் மீது அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளில் இருந்து 16 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆய்வின் போது சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் முருகன், மேற்பார்வை யாளர்கள் ஆறுமுகம், முருகன், மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
+2
- வரவு-செலவு அறிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.24 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது.
- பட்ஜெட் கூட்டத்தின் போது மக்களை தேடி மேயர் திட்டம் என பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருந்தது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
நிதி நிலை அறிக்கை
மேயர் சரவணன் பதவி ஏற்ற பின்னர் முதல் நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்து பேசியதாவது:-
நெல்லை மாநக ராட்சியில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. வருவாய் மூலதன நிதியின் கீழ் 93 கட்டிடங்கள் ரூ.843.91 லட்சம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டு 39 கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு, 31 பணிகள் நடந்து வருகிறது.
ஒப்பந்த புள்ளிக்காக 23 பணிகள் நடவடிக்கையில் உள்ளது. மாநகராட்சியில் 44 சிறுபாலங்கள் கட்ட ரூ.153.15 லட்சம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டு 14 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. ரூ.464.82 லட்சத்தில் 59 மழைநீர் வடிகால் பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு 12 பணிகள் முடிக்கப்பட்டு, 26 பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநக ராட்சியில் 2023-2024 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் வருவாய், குடிநீர், ஆரம்ப கல்விக்கான நிதி வருவாயாக ரூ.312.56 கோடியாக திட்டமிடப்பட்டு வருவாய், குடிநீர், ஆரம்ப கல்விக்காக ரூ.312.80 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த வரவு-செலவு அறிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.24 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது.
மாநகராட்சி கட்டுப் பாட்டில் உள்ள 32 பள்ளி களில் அனைத்து வகுப்பு களுக்கும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப் பட்டு அதனை தலைமை ஆசிரியர் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க கூடுதலாக 2 கருத்தடை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் தாமிரபரணியை அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்மானங்கள்
தொடர்ந்து, பாளை மனக்காவலம் பிள்ளை மருத்துவ மனை அருகே பல்நோக்கு மையம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும், கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை மாநகர எல்லை பகுதியில் மாநக ராட்சி சார்பில் கலைஞர் நுற்றாண்டு வளைவு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது.
மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 29 தி.மு.க. கவுன்சிலர்களும், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். மேயர் சரவணனுக்கு எதிராக 30-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறை வேற்ற திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் 11 தீர்மானங்களுக்கு மட்டும் கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். மற்ற 19 தீர்மானங்களை நிராகரிக்க தி.மு.க. கவுன்சிலர்கள் கூறினர்.
இது தொடர்பாக மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் 19 தீர்மானங்களை நிராகரிக்க வலியுறுத்தினர். இதனால் அந்த தீர்மா னங்களை உடனடியாக ஒத்தி வைப்பதாக கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவித்தார்.
ஆனால் 33 கவுன் சிலர்கள் தீர்மானத்திற்கு எதிராக கையெழுத்திட்டு உள்ளதால் அதனை நிராகரிக்க வேண்டும் என தி.மு.க. மூத்த கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். ஏற்கனவே மக்களை தேடி மேயர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.
அப்போது மக்களை தேடி மேயர் என்பதற்கு பதிலாக மக்களை தேடி மாநகராட்சி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி அந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது.
இந்நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தின் போது மக்களை தேடி மேயர் திட்டம் என பட்ஜெட் உரையில் இடம் பெற்றி ருந்தது. இதற்கு கவுன்சிலர்கள் ஆட்சே பனை தெரிவித்ததால் உடனடியாக அவை திருத்தம் செய்யப் படும் என மேயர் அறிவித்தார்.
கூட்டத்தில் கவுன் சிலர்கள் தச்சை சுப்பிர மணியன், சுதா மூர்த்தி, கோகுலவாணி, கிட்டு, ரவீந்தர், உலகநாதன், அனு ராதா, பவுல்ராஜ், கோட்டையப்பன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெக நாதன், முத்துலட்சுமி, சந்திர சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கி பேசினார்.
- கல்லூரி இயக்குனர் உள்ளிட்ட பலர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
நெல்லை:
சாரதா மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில்" தரவு அறிவியலில் வளர்ந்து வரும் போக்குகள்" என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரிச் செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா அறிவுரையின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத் தலைவர் வள்ளிநாயகி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கி பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் கல்லூரி உதவிப் பேராசிரியர் பொன்மொழி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்க ஆய்வு சுருக்கப் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். முன்னதாக அவரை சாரதா கல்லூரி உதவி பேராசிரியர் விஜயலட்சுமி அறிமுகப்படுத்தி பேசினார்.
தொடர்ந்து தரவு அறிவியல்- திசைகள் மற்றும் வாழ்க்கை சுழற்சி" என்ற தலைப்பில் பாண்டிச்சேரி டான் போஸ்கோ கல்லூரி உதவி பேராசிரியர் ராம லெட்சுமி, உரையாற்றினார். கருத்தரங்கில் கல்லூரி இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் உதவிபேராசிரியர் அமுதா நன்றி கூறினார்.






