என் மலர்
திருநெல்வேலி
- கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.
- சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல நாளை இரவு முதல் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது
தென்மாவட்டங்களில் பொதுமக்கள் கொண்டாடும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இந்நாளில் மக்கள் தங்களது குல தெய்வமான சாஸ்தாவை குடும்பத்துடன் சென்று வழிபட்டுவது வழக்கம்.
குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும். மனதில் நினைத்த காரியம் நடக்கும்.
இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும் தான் அதிகம் இருக்கின்றன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கிறது. இந்த 3 மாவட்டங்களிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் சாஸ்தா அதாவது அய்யனார், பூரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
அன்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்பு போட்டு வழிபடுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.
இதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கோவிலில் சுவாமியின் பூடங்கள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான கோவில்களில் வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்து பந்தல் போடுதல், வண்ண விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மாதேவி செங்கொடி சாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திரத்திருவிழா நாளை நடக்கிறது. இதனையொட்டி கோவில்களில் நாளை காலை முதல் நாளை மறுநாள்(புதன்கிழமை) இரவு வரை சிறப்பு பூஜை களும், அன்னதானங்களும் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல மேலப்புதுக்குடியில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை விமரிசையாக நடக்கிறது.
தென்காசி மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாஸ்தா வழிபாடு நாளை நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திரளான பொதுமக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வந்து முந்தைய நாளே கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு நாளை மறுநாள்(புதன்கிழமை) அங்கு பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
இதற்காக நாளை இரவு முதல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்குவதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையொட்டி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து உள்மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- டொனிலாவை தடுத்து அவரிடம் இருந்த மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர்.
- நான் எனது 5 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பாத்திமா நகரை சேர்ந்தவர் டொனிலா (வயது 28). இவர் இன்று காலை தனது 5 குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
கலெக்டர் அலுவலகம் முன்பு வந்த போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை திறந்து அதில் இருந்து மண்எண்ணையை தன் மீது ஊற்றினார். இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் டொனிலாவை தடுத்து அவரிடம் இருந்த மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது டொனிலா கூறியதாவது:-
எனக்கும் கூத்தங்குழியை சேர்ந்த மிக்கேல்ராஜ் என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. எங்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் என 5 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எனது கணவர் விவகாரத்து செய்துவிட்டார்.
ஆனால் குழந்தைகளை பராமரிப்பதற்காக இதுவரை மாதாந்திர நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. எனவே நான் எனது 5 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன். எனது கணவரிடம் இருந்து நிவாரணம் வாங்கித்தரக்கோரி கூடன்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் .
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜேசு ஜெயராஜா மயக்க நிலையில் மூச்சு வராமல் கிடந்தார். இதனால் பதறிய அவர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்தவர் ஜேசு ஜெயராஜா(வயது 26). வேன் டிரைவர். இவரது மனைவி கல்பனா(23). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது.
ஜேசு ஜெயராஜாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். பின்னர் வெளியே சென்ற அவர் மாலையில் மது அருந்திய போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின் அவர் படுக்கை அறையில் சென்று படுத்து தூங்கினார்.
சிறிது நேரம் கழித்து கல்பனா சென்று பார்த்த போது, ஜேசு ஜெயராஜா மயக்க நிலையில் மூச்சு வராமல் கிடந்தார். இதனால் பதறிய அவர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
உடனே அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.
இதுபற்றி கல்பனா களக்காடு போலீசில் புகார் செய்தார். அவர் கோவிலில் அசைவ உணவு சாப்பிட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அசைவ உணவு சாப்பிட்டதால் அவர் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உண்டா? என்று களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் நேச மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேரன்மாகாதேவியில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- பாதிக்கப்பட்டவர்கள் 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 3 பேர் போலீசாருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர்சிங், குற்ற வழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் வைரலானது.
இதைத்தொடர்ந்து பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு குறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த சம்பவத்தை வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, பாதிக்கப்பட்ட வாலிபர்கள் 5 பேர் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். அப்போது அவர்கள் உதவி போலீஸ் சூப்பிரண்டு மட்டுமல்லாமல் காவல்துறையை சேர்ந்த வேறு சிலரும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது புகார் அளிக்காமல் இருக்க போலீசார் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் இன்று மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் இன்று ஆணையத்தின் முன்பு ஆஜராகிறார்.
அதேநேரம் சேரன்மாகாதேவியில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 3 பேர் போலீசாருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக வி.கே.புரம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு காவலர் போக பூமன், கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டவர்களே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அம்பை தனிப்பிரிவு காவலர் அல்லாமல், வி.கே.புரம் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
இந்த சம்பவங்கள் நடந்தபோது பணியில் இருந்து இன்ஸ்பெக்டர், காவலர்கள் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கூறி வருகின்றனர். இதனால் இன்னும் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
- கணவர் இறந்து விட்டதால், மகன் கந்தசாமி பராமரிப்பில் இசக்கியம்மாள் இருந்து வந்துள்ளார்.
- லோடு ஆட்டோவில் ஏற மறுத்த மூதாட்டி இசக்கியம்மாளை உறவினர்கள் தாக்கி உள்ளனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 80). இவர் களக்காடு மூணாற்று பிரிவில் உள்ள சுடுகாட்டில் நேற்று நீண்ட நேரமாக கட்டிலில் அமர்ந்திருந்தார்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரிடம் விசாரித்தபோது உறவினர்களே அவரை சுடுகாட்டில் விட்டுச்சென்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரித்தனர்.
விசாரணையில், கணவர் இறந்து விட்டதால், மகன் கந்தசாமி பராமரிப்பில் இசக்கியம்மாள் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரும் உயிரிழந்ததால், கந்தசாமியின் 2 மனைவிகளும் மூதாட்டி இசக்கியம்மாளை பராமரித்து வந்துள்ளனர். இசக்கியம்மாளும் அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நாளடைவில் வயது முதிர்வின் காரணமாக அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் பராமரிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று இசக்கியம்மாளை அவரது உறவினர்கள் லோடு ஆட்டோவில் கட்டிலுடன் ஏற்றி சுடுகாட்டில் விட்டு சென்று விட்டனர். அவர் பயன்படுத்திய சேலைகளையும், மூட்டையாக கட்டி அருகில் போட்டு விட்டு சென்று விட்டனர். அவர் உணவுக்கு வழியின்றி தவித்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவருக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வாங்கி கொடுத்தனர்.
இதற்கிடையே லோடு ஆட்டோவில் ஏற மறுத்த மூதாட்டி இசக்கியம்மாளை உறவினர்கள் தாக்கவும் செய்துள்ளனர். இதனால் அவருக்கு தலையில் வலி இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின் போலீசார் மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் எச்சரித்து, அவரை ஒப்படைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் மூதாட்டியை ஏற்கவும், பராமரிக்கவும் மறுத்து விட்டனர்.
இதனால் மூதாட்டி தெருவில் ஆதரவின்றி தவித்து வருவது தெரிய வந்தது. மூதாட்டி இசக்கியம்மாளில் மோதிரத்தையும், அவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் சிலர் ஏமாற்றி பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. உறவினர்கள் ஏற்க மறுத்ததால் தொடர்ந்து மூதாட்டி தெருவில் வசித்து வருகிறார். எனவே இவரை காப்பகத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வீர்சிங் மற்றும் போலீசார், இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேரின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.
- சிவந்திபுரத்தில் உள்ள இசக்கிமுத்துவின் வீட்டுக்கு சென்ற ஆர்.கே.காளிதாசன் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
நெல்லை:
விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் அம்மா நகரைச் சேர்ந்தவர்கள் இளையபெருமாள் மகன்கள் இசக்கிமுத்து (வயது 35), மாரியப்பன் (33) செல்லப்பா (31). இவர்கள் 3 பேரையும் குற்ற வழக்கில் விசாரணைக்காக அழைத்து சென்ற அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் போலீசார், இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேரின் வாயிலும் கற்களை வைத்து அடித்தும், அவர்களின் பற்களை பிடுங்கியதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் மற்றும் நிர்வாகிகள், சிவந்திபுரத்தில் உள்ள இசக்கிமுத்துவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினர். சங்க இயக்குனர்கள் எஸ்.கே.டி.காமராஜ், வைத்திலிங்கம், கருணாகரன், இந்து நாடார் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் காசிராஜ், சிவந்திபுரம் பொது வியாபாரிகள் சங்க தலைவர் அந்தோணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- 40 நாட்கள் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த் தனையுடன் தொடங்கியது.
- திருப்பலி முடிவில் பங்குதந்தை ஜான்சன் தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கினார்.
வள்ளியூர்:
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், உயிர்த்தெழுதலையும் நினைவூட்டும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த நாட்களில் அவர்கள் விருந்தோம்பலை தவிர்த்து விரதம் இருந்து வருவார்கள்.
இந்த ஆண்டு 40 நாட்கள் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த் தனையுடன் தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, தவக்கால சிலுவை பயண நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஏந்தி ஞாயிறு பவனி நடைபெற்றது. வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலயத்தில் தவக்கால குருத்தோலை ஞாயிறு சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக குருத்தோலை பவனி நடைபெற்றது.
குறித்தோலை பவனியை இன்று காலை 7 மணிக்கு வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை ஜான்சன், மரியதாஸ் , மற்றும் உதவி பங்கு தந்தை போஸ்கோ ஆகியோர் தொடங்கி வைத்தனர். பவானியானது பாத்திமா அன்னை திருத்தலத்தில் இருந்து தொடங்கி காந்திநகர் வடக்குத்தெரு மெயின் ரோடு வழியாக சென்று காந்தி நகர் தெற்கு தெரு வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. குருத்தோலை பவனில் பங்கு இறைமக்கள் மற்றும் வள்ளியூர் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் என ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலி முடிவில் பங்குதந்தை ஜான்சன் தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கினார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப் பட்டது. பின்னர் தவக்கால தியானம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை வள்ளியூர் பங்குத்தந்தை ஜான்சன், உதவி பங்குத்தந்தை போஸ்கோ மற்றும் பங்கு இறைமக்கள், இளைஞர்கள் மற்றும் அன்பியங்கள் ஆகியோர் செய்திருந்தனர். வருகிற 6-ந் தேதி பெரிய வியாழனும், 7-ந் தேதி இயேசு சிலுவையில் அறை யப் பட்ட புனித வெள்ளியும் கடைபிடிக்க ப்படுகிறது.
பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல் நிகழ்ச்சி, புனித வெள்ளி அன்று சிலுவை பாதை ஊர்வலமும் நடக்கிறது. வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்து உயிர்த்தெ ழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- கருங்காடு பகுதியில் சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 18 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 8.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அதேபோல் கன்னடியன் கால்வாய் பகுதி, வீரவநல்லூர், பத்தமடை, கூனியூர், சுத்தமல்லி, கொண்டா நகரம் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது.
பேட்டை அருகே உள்ள கருங்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக அங்கி ருந்த ஆயிரக் கணக்கான வாழைகள் சேதமடைந்தது.
இதே போல் தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடி, அடவிநயினார் அணைப்பகுதி கள் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.
எனினும் அணைகளுக்கு தண்ணீர்வரத்து இல்லை. அந்த வகையில் 143 அடி உயரம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் இன்றைய நீர்மட்டம் 20 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 42.09 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.55 அடியாகவும் உள்ளது.
- முருக பெருமாள், குணசேகரன் வீட்டின் அருகே நின்று கொண்டு அவதூறாக பேசி உள்ளார்.
- தாக்குதலில் தனலட்சுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
பேட்டை மலையாளமேடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் தனலட்சுமி (வயது 23), நர்சிங் கல்லூரி மாணவி.
தாக்குதல்
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருக பெருமாள். சம்பவத்தன்று முருக பெருமாளின் மகனுக்கும், குணசேகரனின் மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர் சமரசம் பேசி முடித்துள்ளனர்.
இந்நிலையில் முருக பெருமாள், குணசேகரன் வீட்டின் அருகே நின்று கொண்டு அவதூறாக பேசி உள்ளார். மேலும் முருக பெருமாள், அவரது மனைவி அமுதா, மகன் செல்லத்துரை ஆகியோர் சேர்ந்து குணசேகரனின் மகள் தனலட்சுமியை கம்பியால் தாக்கி உள்ளனர். இதில் தனலட்சுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
4 பேர் மீது வழக்கு
அப்போது அமுதாவின் சகோதரரும், தி.மு.க. பிரமுகருமான மலை கண்ணன் தனலட்சுமியை மிரட்டி உள்ளார். படுகாயம் அடைந்த தனலட்சுமி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் முருக பெருமாள் உள்பட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.
- பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
- விழாவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு எண்ணை காப்பு நடைபெற்றது.
களக்காடு:
நாங்குநேரியில் உள்ள வானமாமலைபெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலம் நம்மாழ்வாரால் 11 பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு பெற்றதும் ஆகும்.
பங்குனி பிரம்மோற்சவ திருவிழா
இத்தலத்தில் மட்டுமே ஸ்ரீசடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தங்கத் தேரோட்டத்திருவிழாவும், சித்திரை மாதம் பெரிய மரத் தேரோட்டமும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
தங்க சப்பரத்தில் பவனி
அதன்படி இந்த ஆண்டு பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு. தினசரி பெருமாள் தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.
5-ம் திருநாள் அன்று கருடசேவை இடம்பெற்றது. 7-ம் திருநாளான நேற்று தங்கச் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், எண்ணை காப்பும் நடைபெற்றது.
தொடா்ந்து நாங்குநேரி மற்றும் ஆழ்வார்திருநகரி ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கச்சப்ப ரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். தங்கச் சப்பரத்தில் காட்சி அளித்த பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனைகளும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இரவில் கண்ணாடி சப்பரத்தில் பெருமாள் திருவீதி உலா வந்தார். விழாவின் 10-ம் திருநாளான வருகிற 4-ந்தேதி தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.
- உறவினரை பார்ப்பதற்காக சுந்தரி கரிசூழ்ந்த மங்கலத்திற்கு பஸ்சில் சென்றார்.
- நகை திருட்டு போனது குறித்து சுந்தரி டிரைவரிடம் கூறினார்.
நெல்லை:
வி.எம். சத்திரத்தை சேர்ந்தவர் கடற்கரை முத்து. இவரது மனைவி சுந்தரி (வயது65). இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பத்தமடை அருகே உள்ள கரிசூழ்ந்த மங்கலத்திற்கு சென்றார். பத்தமடையை தாண்டி பஸ் சென்ற போது தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை திருட்டு போனதை கண்டு சுந்தரி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து டிரைவரிடம் கூறினார். பின்னர் அவர் பஸ்சை போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு சென்றார். போலீசார் விசாரணை நடத்தி நகையை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
செங்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் பலவேசம். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 57). இவர் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டில் உள்ளே நுழைந்து மகேஸ்வரி கழுத்தில் இருந்த தாலியை பிடித்து இழுக்கவும் திடீர் என்று விழித்துக்கொண்ட மகேஸ்வரி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்.
சுதாரித்து கொண்ட மர்ம நபர் மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு இருந்த 4 கிராம் நகையை மட்டும் அறுத்து கொண்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடிவருகிறார்.
- புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர்ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.
- மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். மாவட்ட நிர்வாகம் சார்பில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.






