களக்காடு அருகே புதுமாப்பிள்ளை மரணம்

ஜேசு ஜெயராஜா மயக்க நிலையில் மூச்சு வராமல் கிடந்தார். இதனால் பதறிய அவர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு அருகே புதுமாப்பிள்ளை மரணம்
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்தவர் ஜேசு ஜெயராஜா(வயது 26). வேன் டிரைவர். இவரது மனைவி கல்பனா(23). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது.

ஜேசு ஜெயராஜாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். பின்னர் வெளியே சென்ற அவர் மாலையில் மது அருந்திய போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின் அவர் படுக்கை அறையில் சென்று படுத்து தூங்கினார்.

சிறிது நேரம் கழித்து கல்பனா சென்று பார்த்த போது, ஜேசு ஜெயராஜா மயக்க நிலையில் மூச்சு வராமல் கிடந்தார். இதனால் பதறிய அவர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

உடனே அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.

இதுபற்றி கல்பனா களக்காடு போலீசில் புகார் செய்தார். அவர் கோவிலில் அசைவ உணவு சாப்பிட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அசைவ உணவு சாப்பிட்டதால் அவர் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உண்டா? என்று களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் நேச மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com