search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teeth"

    • இவரது மனைவி பாலசுபலட்சுமி (வயது 39). தனியார் பள்ளி ஆசிரியை.
    • மேலும், கை, கால், மூக்கிலும் காயம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் ஒப்பிலார் மணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பாலசுபலட்சுமி (வயது 39). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இரவு இவர் காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு விட்டு, மகன் திவ்யேஷ் கார்திக் (15), உறவினர் மகன் சரவண ப்பிரியன் (17) ஆகியோ ருடன் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். காரை க்கால் காமராஜர் சாலை கென்ன டியார் வீதி சந்திப்பில் சென்ற போது எதிர் திசையில் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்த அர்ஷாத் (19) என்பவர் மோதியதில், இருதரப்பும் தடுமாறி சாலையில் விழுந்தனர்.

    இதில், பாலசுப லட்சுமியின் 2 பற்கள் உடைந்து போனது. மேலும், கை, கால், மூக்கிலும் காயம் ஏற்பட்டது. அர்ஷாத்துக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த பாலசுபலட்மியை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீ சாரிடம் பாலசுபலட்மி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ஷாத்தை விசாரித்து வருகின்றனர்.

    • பல்வீர்சிங் மற்றும் போலீசார், இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேரின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.
    • சிவந்திபுரத்தில் உள்ள இசக்கிமுத்துவின் வீட்டுக்கு சென்ற ஆர்.கே.காளிதாசன் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

    நெல்லை:

    விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் அம்மா நகரைச் சேர்ந்தவர்கள் இளையபெருமாள் மகன்கள் இசக்கிமுத்து (வயது 35), மாரியப்பன் (33) செல்லப்பா (31). இவர்கள் 3 பேரையும் குற்ற வழக்கில் விசாரணைக்காக அழைத்து சென்ற அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் போலீசார், இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேரின் வாயிலும் கற்களை வைத்து அடித்தும், அவர்களின் பற்களை பிடுங்கியதாகவும் புகார் எழுந்தது.

    இந்த நிலையில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் மற்றும் நிர்வாகிகள், சிவந்திபுரத்தில் உள்ள இசக்கிமுத்துவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினர். சங்க இயக்குனர்கள் எஸ்.கே.டி.காமராஜ், வைத்திலிங்கம், கருணாகரன், இந்து நாடார் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் காசிராஜ், சிவந்திபுரம் பொது வியாபாரிகள் சங்க தலைவர் அந்தோணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    தற்போது பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, எளிதாக குணப்படுத்தும் சிகிச்சைகள் வந்து விட்டன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பல் மருத்துவத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, எளிதாக குணப்படுத்தும் சிகிச்சைகள் வந்து விட்டன. பல்லில் ஏற்படுகிற சொத்தை பிரச்சனைகளுக்கு பல வருடங்களுக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களைப் பூசி பல் சொத்தையை மறைத்தனர்.

    இன்றைய நாகரீக உலகில் தங்கப்பல்லையோ, வெள்ளிப்பல்லையோ பலரும் விரும்புவதில்லை.தங்களுடைய பற்கள் இயற்கையாகவும், வெண்மையாகவும் இருப்பதையே விரும்புகிறார்கள். பற்களில் படியும் கறைகளோ, மஞ்சள் நிற பற்களோ வெளியே தெரியக்கூடாது என்றும் நினைக்கின்றனர். டூத் பேஸ்ட் விளம்பரங்களில் வருவதுபோல் பளிச்சென்று முத்துப்பற்களே பலருக்கும் தேவையாக இருக்கிறது.

    அதற்கேற்ற வகையில் நிறைய முன்னேற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, செயற்கைப் பற்கள் பொருத்தப் பயன்படுத்துகிற பொருட்களில் நிறைய முன்னேற்றம் வந்துவிட்டது. அதாவது, சொத்தையை அடைப்பதற்கு கறுப்பு கலர் ஃபில்லிங் முன்பு பயன்படுத்தப்பட்டது. இப்போது வெள்ளை நிறத்திலேயே ஃபில்லிங் வந்துவிட்டது.

    பற்களில் சிறுசிறு புள்ளிகளாகக் காணப்படும் கறைகளைக் கூட மறைத்து இயல்பான பற்களைப்போல் காட்டும் அளவுக்கு தற்போது ஃபில்லிங் வந்துவிட்டது. பற்கள் என்ன நிறத்தில் இருக்கிறதோ, அதில் இருந்து சற்றும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு அதே நிறத்தில் ஃபில்லிங் செய்யும் வசதி வந்துவிட்டது. வெளித்தோற்றத்தில் ஃபில்லிங் செய்ததே தெரியாது.

    பல் சொத்தையை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க இப்போது மாத்திரையும் வந்து இருக்கிறது. இந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் சொத்தை உள்ள இடங்களில் மட்டும் கறுப்பு நிறத்தில் புள்ளிகள் தென்படும். இதன்மூலம் சொத்தை உருவாக இருப்பதை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம். எல்லாவற்றையும்விட முக்கியமாக, 6 மாதங்களுக்கு ஒரு முறை பற்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது!

    பல் பாதிப்பு, சொத்தை இவை எதனால் ஏற்படுகின்றது! என்றால் தீய பாக்டீரியாக்கள், சர்க்கரை, ஆசிட் இவைகளே பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. பல்லை பாதுகாக்க நாமும் சில வழிமுறைகளை கடைபிடிக்கலாமே.
    பயில்வான் போன்ற உடல் வலிமை உடையவர்கள் கூட பல் வலியில் துடித்து விடுவார்கள். காரணம் முறையான பல் பாதுகாப்பின்மைதான். பல் சுகாதாரமின்மை ஈறுகளில் நோய், பல் சொத்தை இவற்றினை எளிதில் உருவாக்கி விடும். பல், ஈறு பாதிப்புகள் அத்துடன் நிற்பதில்லை. சர்க்கரை நோய், குறை பிரசவம், இருதய பாதிப்பு, பக்க வாதம் இவைகள் ஏற்படவும் காரணமாகின்றது.

    இன்று பல் மருத்துவம் மிகப்பெரிய முன்னேற்ற நிலையினை அடைந்துள்ளது. இருப்பினும் பல் பாதிப்பு, சொத்தை இவை எதனால் ஏற்படுகின்றது! என்றால் தீய பாக்டீரியாக்கள், சர்க்கரை, ஆசிட் இவைகளே பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    பல்லில் எனாமல் தேயும் பொழுது ஓட்டைகள் ஏற்படுகின்றன. முதலில் பாதிக்கப்பட்டுள்ள இடம் மிருதுவாகும். வலி இருக்கும். சூடு, குளுமை, ஸ்வீட் சாப்பிட்டால் அந்த குறிப்பிட்ட இடத்தில் வலிக்கும். இந்த அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே பல் மருத்துவரிடம் சென்றால் உங்கள் பல்லினை பாதுகாத்து விடுவார். பொதுவில் வருடம் ஒருமுறையாவது பல் செக்-அப் செய்து கொள்வது அவசியமே.

    இருப்பினும் பல்லை பாதுகாக்க நாமும் சில வழிமுறைகளை கடைபிடிக்கலாமே.

    • பல்லில் எனாமல் கால்சியம், பாஸ்பேட் நிறைந்தது. இவை இரண்டும் உடலில் கிடைக்க வைட்டமின் டி நமக்கு வேண்டும். மருத்துவ அறிவுரையோடு வைட்டமின் ‘டி’ எடுத்துக்கொள்வோம்.

    • பாஸ்பரஸ் இருந்தாலே எனாமல் நன்கு பாதுகாக்கப்படும். கொட்டை வகைகள், முட்டை, பூண்டு, தக்காளி, பீன்ஸ் போன்றவை பாஸ்பரஸ் சத்தினை பெற உதவும்.

    • அன்றாட உணவில் 5 சதவீதத்துக்கு மேல் இனிப்புகள் வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது. இனிப்பில் உள்ள ஆசிட் பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    • சோடா அருந்துவதனை தவிர்த்துவிட வேண்டும்.

    • தூங்கும்பொழுது வாய்மூடி இருக்க வேண்டும். வாய் திறந்து தூங்கும் பொழுது வாய் வறண்டு விடுகின்றது. வாயில் உமிழ்நீர் வாய் மூடி இருக்கும் பொழுதே வாய் வறண்டு விடாமல் காக்கும். வறண்ட வாயில் பல் பாதிப்பு ஏற்படும்.

    • பாதுகாப்பான பல் பவுடர், பற்பசையினை உபயோகியுங்கள்.

    • காய்கறி ஜூஸ், பச்சை காய்கறிகள் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

    • 4-5 முந்திரியினை தினமும் உண்ணுங்கள். கெட்ட கிருமிகளை எதிர்க்கும் சத்துகள் இதில் அதிகம்.

    • ஆயுர்வேதம் எண்ணெய் வாய் கொப்பளிப்பினை பரிந்துரைக்கின்றது.
    பற்களை சீராக பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
    பற்களின் ஆரோக்கியத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியமான ஈறுகளை கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம் சீராக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இத்தாலியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 3600 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.

    ‘‘ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு வாய்வழி ஆரோக்கியம் அவசியமானது. அதனால் பற்களை சீராக பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், அது தொடர்பாக சிகிச்சை பெறுபவர்கள் வாய்வழி ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உணவில் உப்பை குறைவாக சேர்த்து கொள்வது, முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவைகளும் அவசியமானவை’’ என்கிறார்கள், பல் மருத்துவர்கள்.

    ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவது முக்கியமல்ல. அவைகளை சாப்பிட்டு முடித்தபிறகு பற்களை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
    ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவது முக்கியமல்ல. அவைகளை சாப்பிட்டு முடித்தபிறகு பற்களை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாய் துர்நாற்றம், பல் சிதைவு, பல்சொத்தை, பல்வலி போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும். ஒருசில உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்ப்பதும் பற்களுக்கு நலம் சேர்க்கும்.

    உடலின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க பழ வகைகள் சாப்பிடுவது நல்லது. எனினும் அவை பற்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் அசிட்டிக் அமிலங்களை உள்ளடக்கிய பழங்களான ஆப்பிள், திராட்சை போன்றவை பற்களின் எனாமலை பாதிக்க செய்பவை. அவைகளை சாப்பிட்டதும் உடனே வாய் கொப்பளித்து பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

    காபி பருகுவது பற்களுக்கு கேடு விளைவிக்கும். பல் சொத்தை மற்றும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும். அதனால் காபி குடித்து முடித்ததும் வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வது நல்லது.



    ரொட்டிகளில் இனிப்பு சுவை குறைவாக இருந்தாலும் அவை பல் இடுக்குகளில் சிக்கிவிட்டால் பிரச்சினையை ஏற்படுத்தும். எந்த உணவை சாப்பிட்டாலும் உணவு துகள்கள் பல் இடுக்குகளில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    சாக்லேட்டுகளை கடித்து ஆசுவாசமாக சுவைப்பது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுவதும் பற்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஆதலால் அவைகளை சாப்பிடும்போது பல் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    தண்ணீர் அதிகம் பருகுவது பற்களுக்கு நல்லது. அதேவேளையில் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் பற்களுக்கு கேடு விளைவிக்கும். வாய் பகுதியையும் உலர்வடைய செய்துவிடும். பற்களின் எனாமலும் பாதிப்புக்குள்ளாகும்.

    நொறுக்கு தீனி வகைகளையும் தவிர்க்க வேண்டும். அவை உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு பற் சிதைவுக்கும் காரணமாகிவிடும்.

    மது குடிப்பதும் பற்களுக்கு கேடானது. மதுவில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உமிழ்நீர் சுரப்பின் அளவை குறைத்துவிடும். பற்களில் பாக்டீரியா தொற்றுகள், ஈறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். 
    சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை பாதுகாக்க எந்தெந்த வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாகவே பற்களின் மீது அதிக ஆரோக்கியம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஈறுகளில் உண்டாகும் பாதிப்பு இதயத்தை பாதிக்கும் என ஆய்வுகளில் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இதுமட்டுமின்றி, வாய் சுகாதாரம் குறைபாடு ஏற்பட்டால் உடலில் எளிதாக பாக்டீரியாக்கள் அதிகம் தேங்கும் அபாயம் உண்டாகும். இதில், சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை பாதுகாக்க எந்தெந்த டிப்ஸ் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என இனி காணலாம்…

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பற்களை சுற்றி ஆரோக்கிய சீர்கேடு ஏற்படும் அபாயம் நிறையவே இருக்கிறது.

    ஃபங்கல் இன்பெக்ஷன் போன்ற தொற்றுகள் உண்டானால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குணமாக நாட்கள் அதிகம் எடுத்துக் கொள்ளும்.

    பற்களின் ஆரோக்கியம் சீர்குலைந்து போகாமல் இருக்க, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஃப்ளோரைடு டூத்பேஸ்ட் கொண்டு பல் துலக்க வேண்டியது அவசியம்.

    பொதுவாகவே நாளுக்கு இரண்டு முறை பல் துலக்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது கட்டாயம் என்கின்றனர் பற்கள் நல மருத்துவ நிபுணர்கள்.

    ஒருவேளை பற்கள் அல்லது ஈறுகளில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவது போல இருந்தால், நேரம் தாழ்த்தாமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

    பற்களுக்கு கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம். இப்போது கிளிப் அணிந்தவர்களுக்கான குறிப்புகளை பார்க்கலாம்.
    பற்களுக்கு கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம். இப்போது கிளிப் அணிந்தவர்களுக்கான குறிப்புகளை பார்க்கலாம்.

    கோணலான பற்களை நேர்செய்வது, தூக்கலான பற்களை உள்கொண்டு செல்வது, பற்களின் இடைவெளியைச் சரிசெய்வது போன்ற பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, ‘ஆர்தோடான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces) எனப்படும் ‘டென்டல் க்ளிப்’ பொருத்தப்படுகிறது.

    கிளிப் போடும்போது பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே சிறிய இடைவெளி ஏற்படும். இதற்கு உள்ளே உணவுத் துணுக்குகள் புகுந்து பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் வளர ஆரம்பிக்கும். இந்தத் துணுக்குகளை அகற்றாதபோது, பல்லின் எனாமல் பாதிக்கப்படலாம். ஈறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், சொத்தை விழுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். பல் உள்ளே தள்ளப்படுவதால், பல் வேரில் பிரச்சனை வரலாம். கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம்.

    கிளிப் அணிந்தவர்களுக்கான டிப்ஸ் :

    * ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம்.

    * ஒரு நாளைக்கு, குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

    * ஒவ்வொரு முறை உணவு உண்டதும், பல் துலக்குவது நல்லது. முடியாதபட்சத்தில், தண்ணீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.

    * பல் துலக்கியதும் ‘கிளிப்’ சுத்தமாக இருக்கிறதா என்பதை, கண்ணாடியில் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    * பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே ‘ஃப்ளாஸ்’ என்ற மெல்லிய மெழுகு நூலைப் பயன்படுத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.

    * சுவிங்கம், வாயில் ஒட்டிக்கொள்ளக்கூடிய சாக்லெட், மிட்டாய், பாப்கார்ன் போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

    * குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி பல், ஈறு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
    பளிச்சிடும் பற்கள் நமக்கு அழகு சேர்ப்பவையாகும். ஆரோக்கியமான பற்கள் முத்துகள்போல பளிச்சிடும். பற்களைப் பற்றிய சுவையான செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
    பளிச்சிடும் பற்கள் நமக்கு அழகு சேர்ப்பவையாகும். ஆரோக்கியமான பற்கள் முத்துகள்போல பளிச்சிடும். பற்களில் மஞ்சள் நிறம் படிவது ஏன் என்பது தெரியுமா? பற்பசையை கண்டுபிடித்தவர்கள் யார், டூத் பிரஷை உருவாக்கியவர்கள் யார்? பற்களில் பவள கற்களைப் பதித்து அலங்காரம் செய்துகொள்ளும் பழக்கம் கொண்டமக்கள் பற்றி அறிவீர்களா? பற்களுக்கான பிரத்தியேக வங்கி எங்கு செயல்படுகிறது? இதுபோன்ற பற்களைப் பற்றிய சுவையான செய்திகளை தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்...

    * மனிதர்களுக்கு வாழ்நாளில் 2 முறை மட்டுமே பற்கள் வளர்கிறது. முதலில் வளரும் பற்கள் விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை. இவை பால் பற்கள் அல்லது பாலர் பற்கள் எனப்படுகின்றன. அப்போது 20 பற்கள் மட்டுமே காணப்படும். அவை விழுந்த பின்பு இரண்டாம் முறை பற்கள் முளைக்கின்றன. அப்போது 32 பற்கள் வரை வளரும்.

    * பற்களின் வளர்ச்சி கருவிலேயே ஆரம்பமாகிவிடுகிறது. ஆனால் குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகுதான் பற்களின் வளர்ச்சி நிறைவடைகிறது. அரிதாக சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பது உண்டு.

    * பற்களின் எனாமல்தான் உடலின் கடினமான பொருளாகும்.

    * பற்களில் 300 வகையான பாக்டீரியா இனங்கள் வளர்ச்சி அடைகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பற்களை சேதப்படுத்தும் திறன் கொண்டவை.

    * ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் 40 நாட்களை பல் துலக்குவதற்காக பயன்படுத்துகிறான் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

    * வெளியே தெரிவது பற்களின் மூன்றில் ஒரு பகுதிதான். தாடையில், ஈறுகளினுள் 2 பங்கு பற்கள் மறைந்த நிலையில் உள்ளன.

    * மாயன் இன மக்கள் பழங்காலத்திலேயே பற்களில் துளையிட்டு அதில் செயற்கை வண்ணக் கற்களை பதித்து அலங்காரம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

    * நீரிழிவு, இதய பாதிப்புகள், எலும்புருக்கி போன்றவை பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

    * கைரேகைகளைப் போலவே பற்களும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மையுடன் இருக்கும்.

    * வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடைவாய்ப்பல், கடைவாய்ப்பல் என பற்கள் 4 வகைப்படும். வெட்டும் பற்கள் 8, கோரைப்பற்கள் 4, முன் கடைவாய் பற்கள் 8, கடைவாய்ப்பற்கள் 12 என்ற எண்ணிக்கையில் இருக்கும். சிலருக்கு கடைவாய் பற்களின் எண்ணிக்கை வேறுபடும்.

    * பல் துலக்குவது 40 சதவீத சுத்தத்தையே தருகிறது. பற்களை பஞ்சு கொண்டு துடைப்பது, கொப்பளிப்பது 60 சதவீத சுத்தத்திற்கு துணை செய்யும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    * சீனர்கள்தான் நவீன டூத்பிரஷை உருவாக்கியவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்கள் மூங்கில் கைப்பிடியும், முடிகள், நார்கள் கொண்ட பிரஷ்களை பயன்படுத்தி பல்துலக்கி உள்ளனர்.

    * இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஆலமரம் மற்றும் வேப்பமர குச்சிகளை பல்துலக்க பயன்படுத்துகிறார்கள். அதில் கிருமி எதிர்பொருட்கள் இருப்பதால் அவை டூத்பிரஸ் களைப்போல சிறந்தவை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    * கழிவறையில் இருந்து 6 அடி தூரத்திற்கு அப்பால் “டூத்பிரஷ்”களை வைத்திருப்பதே அவற்றில் கிருமிகள் தொற்றாமல் பாதுகாக்கும். பிரஷில் ஈரம் இல்லாமல் இருப்பதும் கிருமித் தொற்றை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும். பிரஷிற்கு மூடி பயன்படுத்தினால் கிருமித் தொற்றை பெருமளவு தடுக்கலாம்.

    * பழமை எகிப்தியர்கள் 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே பற்பசை களை பயன்படுத்தியுள் ளனர். அவர்கள், ஒருவகை கற் தூளையும், பழரசத்தையும் கலந்து பற்பசைபோல பயன்படுத்தி உள்ளனர்.

    * சீன ஆராய்ச்சியாளர்கள், எலியின் சிறுநீர் ஸ்டெம்செல்களைக் கொண்டு செயற்கை பல் எனாமலை உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.

    * நெதர்லாந்தில் குழந்தைகளுக்கான பால்பற்களை பராமரிக்கும் பல் வங்கி உள்ளது. இங்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பற்கள் சேமிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை பரிசோதித்தபின்பு அவர்களுக்கு பொருத்தமான பற்களை பொருத்த அனுமதிக்கிறார்கள்.



    * பல் விழுந்து முளைக்காதவர்கள், செயற்கையாக பற்கள் பொருத்தி அழகுபடுத்திக் கொள்வது வழக்கமாக உள்ளது. மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த வழக்கம் அதிகமாக இருக்கிறது. வயதானவர்கள் செயற்கை பல்கள் அணிவதும் உலகம் முழுவதும் பரவலாக உள்ளது.

    * இந்தியாவைச் சேர்ந்த ஆசிக் கவாய் என்ற 17 வயது இளைஞருக்கு தாடையில் கட்டி வளர்ந்து கொண்டே இருந்தது. அவர் ஆபரேஷன் செய்து கொண்டபோது அந்த கட்டிக்குள், 232 பற்கள் வளர்ந்தது கண்டுபிடித்து நீக்கப்பட்டது.

    * வாயில் உள்ள உமிழ்நீர் பற்களை பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.

    * உலகில் அதிகமானவர்களை பாதிக்கும் வியாதி பல்வலி என்று அறியப்பட்டுள்ளது.

    * லுசி பீமான் ஹோப்ஸ் உலகின் முதல் பெண் பல் மருத்துவர் ஆவார். இவர் 1866-ல் பல் மருத்துவ சான்றிதழ் பெற்றார்.

    * 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல் மருத்துவர்கள் எகிப்தில் இருந்துள்ளனர். ஹெசி ரே என்பது வரலாற்றில் அறியப்பட்ட பழமையான எகிப்திய பல்மருத்துவரின் பெயராகும்.

    * பல்வலியை குறிக்கும் அறிவியல் சொல் ஒடான்டால்ஜியா.

    * வலது கை பழக்கம் கொண்டவர்கள் தங்கள் உணவை வலது பக்கம் வைத்து மெல்லுவதும், இடது கை பழக்கம் உள்ளவர்கள், உணவை இடதுபக்கமாக வைத்து மெல்லுவதும் வழக்கமாகும். நீங்கள் அதிகமாக எப்படி மெல்லுகிறீர்கள் என்பதை ஒரு நிமிடம் கவனித்துப் பாருங்களேன்.

    * உலகில் அதிகமானவர்களால் நீல நிற பிரஷ் பயன்படுத்தப் படுகிறது.

    * காபி, டீ, பழரசங்கள், குளிர் பானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பற்களில் கறை படிய முக்கிய காரணமாகும். பானங்களைப் பருக, உறிஞ்சுகுழாய் (ஸ்டிரா) பயன்படுத்துவதும், புகையிலைப் பொருட்களை தவிர்ப்பதும் பற்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * இனிப்பு பொருட்கள், மற்றும் உணவுத் துணுக்குகள் பற்களில் தங்கும்போது கிருமிகள் பெருகி பற்களுக்கு பாதிப்பை உருவாக்கும். காலையும், இரவும் பல் துலக்கி கொப்பளிப்பது பற்களை பாதுகாக்கும் சிறந்த வழி யாகும். முத்துப்போல் பற்களை பராமரிப்போம், பளிச் புன்னகையால் பார்ப்பவர்களை கவர்வோம்! 
    இரண்டாம் உலகப்போருக்கு மூல காரணமான சர்வாதிகாரி ஹிட்லர் 1945-ம் ஆண்டு பதுங்கு குழியில் தற்கொலை செய்து கொண்டது தற்போதைய ஆராய்ச்சி மூலம் உறுதியாகியுள்ளது. #Hitler
    பாரீஸ்:

    ஜெர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் பெர் லினில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பதுங்கு குழியில் தனது காதலி ஈவா பிரயுனுடன் அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அவர் தற்கொலை செய்யவில்லை. நீர்மூழ்கி கப்பல் மூலம் அர்ஜென்டினாவுக்கு தப்பி சென்றார். அண்டார்டிகா அல்லது வேறு பகுதிக்கு சென்று தலைமறை வாகிவிட்டார் என்ற சர்ச்சையும் உள்ளது.

    அவரது மரணம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் சார்லியர் மற்றும் 4 நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓட்டில் இருந்த பல் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இடதுபுறத்தில் துப்பாக்கி குண்டு துளைத்த அடையாளம் உள்ளது.

    எனவே, ஹிட்லர் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி பெர்லினில்தான் மரணம் அடைந்துள்ளார் என உறுதியாக கூறியுள்ளனர். மேலும் அவர் சைவப்பிரியர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
    ×