என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
- உறவினரை பார்ப்பதற்காக சுந்தரி கரிசூழ்ந்த மங்கலத்திற்கு பஸ்சில் சென்றார்.
- நகை திருட்டு போனது குறித்து சுந்தரி டிரைவரிடம் கூறினார்.
நெல்லை:
வி.எம். சத்திரத்தை சேர்ந்தவர் கடற்கரை முத்து. இவரது மனைவி சுந்தரி (வயது65). இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பத்தமடை அருகே உள்ள கரிசூழ்ந்த மங்கலத்திற்கு சென்றார். பத்தமடையை தாண்டி பஸ் சென்ற போது தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை திருட்டு போனதை கண்டு சுந்தரி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து டிரைவரிடம் கூறினார். பின்னர் அவர் பஸ்சை போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு சென்றார். போலீசார் விசாரணை நடத்தி நகையை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
செங்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் பலவேசம். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 57). இவர் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டில் உள்ளே நுழைந்து மகேஸ்வரி கழுத்தில் இருந்த தாலியை பிடித்து இழுக்கவும் திடீர் என்று விழித்துக்கொண்ட மகேஸ்வரி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்.
சுதாரித்து கொண்ட மர்ம நபர் மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு இருந்த 4 கிராம் நகையை மட்டும் அறுத்து கொண்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடிவருகிறார்.






