search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A.Raza MP"

    • நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன் தலைமை தாங்கினார். மாவடட அவைத்தலைவர் முருகன், துணை செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தர்மன், பொருளாளர் வண்ணை சேகர் முன்னிலை வகித்தனர். மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா தொகுப்புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், நெசவாளரணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் தொண்டரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், நெசவாளரணி செயலாளர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:

    ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார். பல்வேறு தலைவர்களின் வரலாற்றை படித்துள்ள நான் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரைப் போல் உலகில் வேறு எந்த தலைவரையும் பார்த்ததில்லை. அண்ணாவால் கூட அகில இந்திய அரசியலில் கால் பதிக்க முடியவில்லை.

    முந்தைய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தி.மு.க.வை புலுவை போல் பார்க்கும் மனப்பாங்கு கொண்டிருந்தனர். வங்கிகளை தேசிய மயமாக்கியது, இலவச மின்சாரம் வழங்கியது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மட்டும் தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்களையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கிய பெருமை கருணாநிதிக்கு தான் உண்டு.

    கொள்கை, கோட்பாடு கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க. என்பதால் பா.ஜனதா நம்மை கண்டு பயப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சியை அகற்றியே தீருவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் நாட்டின் ஒரே முதல்-அமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். மதவாதமும் ஊழலும் கைகோர்த்துவரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், அப்துல் கையூம், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட விவசாய அணி பொன்னையா பாண்டியன், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட முன்னாள் துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான நவநீதன், இளைஞரணி மீரான் மைதீன், நிர்வாகிகள் வீரபாண்டியன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் செய்திருந்தார்.

    • முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு.

    வள்ளியூர் :

    முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நெல்லைகிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஞான திரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், வள்ளியூர் செயலாளர் சேதுராமலிங்கம், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை செயலாளர் ஜான் கென்னடி, பணகுடி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள்ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

    கிழக்கு மாவட்ட அவைத் தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கிரகாம்பெல் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாள ரும், முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தத்துவத்தின் அடையாளம். கட்சியையும், ஆட்சியையும் வளர்ச்சி அடைய செய்தவர். மிசா சட்டத்தில், திருமணமாகி 6 மாதத்தில் சிறை சென்றவர்.

    இந்தியா முழுவதும் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் உற்று நோக்குகின்றனர். கொரோனா காலத்தத்தில் மருத்துவர்களே செல்ல பயந்த கொரோனா வார்டில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியவர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரூ.6 லட்சம் கோடி கடன் இருந்தது. இருந்தாலும் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான மாதம் தோறும் பெண்கள் உரிமை தொகை ஆயிரம் ரூபாயை அண்ணா பிறந்தநாள் அன்று நிறைவேற்றுகிறோம்.

    தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கவில்லை. இருப்பினும் கொரோனா காலத்தில் தாய்,தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதியை கொடுத்தார்.அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு.மேலும் 13 ஆயிரம் கோடியில் மாதிரி பள்ளிகள் அமைத்து சுகாதாரம், கல்வியும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்து உள்ளார்.

    பேனா சிலை ஏன் வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். பெண் களுக்கு சொத்துரிமையில் பங்கு உண்டு என கையெழுத்து போட்டது, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கையெழுத்து மற்றும் பெண்களுக்கு கல்வி அதிகாரம் கொடுத்து கையெழுத்து போட்டது இந்த பேனா தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக நாங்குநேரி எஸ்.ஏ.வி பெட்ரோல் பங்கில் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை நினைவு கூர்ந்து 70 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தை ஆ.ராசா திறந்து வைத்தார்.

    நிகழ்சியில் மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோஷல், மாவட்ட துணை செயலாளர்கள் நம்பி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆதி பரமேஸ்வரன், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலை கண்ணு , மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கொண்டனர்.மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி நன்றி கூறினார்.

    ×