என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • செந்தூ குமாரை மதுரை சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வந்தது தெரியவந்தது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை மகாராஜநகர் வேடவர்காலனியை சேர்ந்தவர் செந்தூர் முருகன் (வயது 55). இவர் பாளை சி.பி.சி.ஐ.டி.யின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவில் கடந்த 7 ஆண்டுகளாக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் இன்று காலை வீட்டில் விஷம் குடிந்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் நேற்று முன்தினம் செந்தூ குமாரை மதுரை சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வந்தது தெரியவந்தது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணிச்சுமை மற்றும் உயர் அதிகாரிகள் அழுத்தம் காரணமாக செந்தூர் குமார் தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 4 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.79 கோடியில் கட்டும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    பயணிகள் கோரிக்கை

    சுமார் 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பஸ் நிலைய பணிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி, முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தின் சுற்றுப்புற பகுதி வழியாக மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை (திங்கட்கிழமை) முதல் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தகர சீட்டுகள் அகற்றம்

    இதற்காக கடந்த சில நாட்களாக ராஜா பில்டிங் சாலையில் பஸ் நிலைய கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகள் அகற்றப்பட்டு சற்று உள்ளே தள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் சாலை அகலப்படுத்துதல் பணியும் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது வெயில், மழையினால் பாதிக்கப்படாமல் இருக்க பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 4 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நின்று செல்லும் பஸ்கள் விவரம்

    இந்த 4 நிறுத்தங்களிலும் நின்று செல்லும் பஸ்கள் குறித்த விவரத்தை நெல்லை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, சந்திப்பு பழைய பஸ் நிலையத்தில் 1-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் மார்க்கமாக செல்லும் பஸ்களான 1-டிஎல்எக்ஸ், 2-டி.எல்எக்ஸ் பஸ்கள் இயக்கப்படும்.

    2-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பாளை பஸ் நிலையம் மார்க்கமாக செல்லும் பஸ்களான 3 டி, 5 சி, 50, 5இ, 5ஈ, 9எப், 9, 104, 108, 10 எச். 101, 10, 10 கே, 10 எல், 11 ஏ, 14 சி, 22 சி ஆகிய பஸ்கள், இதே போல் 3-வது பஸ் 10சி, 10 டி, 10இ, 10எப் உள்ளிட்டவைகள்,

    3-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பாளை மார்க்கெட் மார்க்கமாக செல்லும் 16 ஏ, 16 சி, 16 டி, 6 எச், 3.ஏ, 4 எம், 6 சி, 98, 58. 15 எச், 12 எல், 161, 13ஏ, 13 பி, 9 எப், 9 என், 9 க்யூ 5 இ. எம். 0, 66, 8டி, 7பி, 9எம், 9பி, 10 கே, 10 எல், 14 ஏ, 4ஜே, 7 என், 70, 9 ஆர், 14 பி, 5ஏ, ஏகே. 3 டி, 12 எம், 121, 128, 15எப், 12 கே. 15 ஜி. 10. ஏ. 16 எப், 166, 15 ஏ. 158, 11 சி, 12 இ, 15 டி., 16 எச், 38 வி, 151, 16இ, 12 எச், 12 ஜே, 168 ஆகிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதே போல் 4-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்களான 6 ஏ, 38 வி, 68, 7எப், 78, 7 எச், 41, 5சி, 71, 71, 7சி, 22 சி, 5 ஏ, 7 ஜி, 148, 7எம், 7டி.7 பி, 60, 70, 4எம், 9டி, 12 எச், 10சி, 7ஏ, 5 எப், 98, 134, 6சி, 9க்யூ, 8டி, 6எச், ஏ.8இ.ஏ, 7க்யூ, 75, 7 ஆர், 7 என். 3வி. 9.எல். 10.பி. ஏ, 12 எல், 10 இ. 15 சி. 121. 15டி,3ஏ.5இ, 121, 16 ஏ. 101, 15 எப். 6.எச். 10.ஏ.6டி, 12 கே.5.எச்.4பி, டி 156, 12பி வழித்தட பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தூய்மை பணிகள்

    நாளை முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ள நிலையில் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இன்று மாலை முன்னோட்டமாக சில பஸ்களை இயக்கி பார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வருகிற 22-ந்தேதி முதல் மாநகராட்சி அலுவலகம் எதிரே பொருட்காட்சி திடலில் தற்காலிகமாக இயங்கி வரும் பஸ் நிலையம் மூடப்பட உள்ளது.

    • ஆலோசனை கூட்டத்திற்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் மேயர் சரவணன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை பழையபேட்டையில் தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது. நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலைராஜா, மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மேயர் சரவணன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், கோபி, அண்டன் செல்லத்துரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், இளைஞரணி மீரான், மாவட்ட பிரதிநிதிகள் வேங்கை வெங்கடேஷ், முகமது அலி, இசக்கி பாண்டியன், சுரேஷ், மத்திய மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், மீரான், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பழையபேட்டை நிர்வாகிகள் செந்தில் முருகன், நெல்லையப்பன், மாரியப்பன், பண்டாரம், ராஜேஸ்வரி, சார்லஸ் முத்துராஜ், அங்கப்பராஜ், பாண்டி, பரமசிவன், முருகன், முத்துசங்கா், சுபராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சரவண கார்த்திகேயன் ஐகிரவுண்டு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • பலத்த காயம் அடைந்த சரவண கார்த்திகேயனை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நெல்லை:

    பாளை சித்திரை வேலைக்கார தெருவை சேர்ந்தவர் சரவண கார்த்திகேயன் (வயது 50), பெயிண்டர். இவர் சம்பவத்தன்று பாளை வடக்கு ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள கேன்டீன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சரவண கார்த்திகேயன் கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சரவண கார்த்திகேயன் இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு கக்கன் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கன் பிறந்தநாளை யொட்டி இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கக்கன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைத்தலைவர் மகேந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் பரணி இசக்கி, சொக்கலிங்ககுமார், மாவட்ட ஓ.பி.சி பிரிவு தலைவர் டியூக் துரைராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் வெள்ள பாண்டியன், ராமகிருஷ்ணன், சிவன் பெருமாள், வண்ணை சுப்பிரமணியன், அருள்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் மகேந்திரன், தச்சை கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் தங்கராஜ், சரவணன், மணி, மண்டல தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முருகன் என்ற சுண்டல் முருகன் சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
    • முருகன், பாக்கெட்டில் இருந்த ரூ.120 -ஐ எடுத்து முத்துபாலனிடம் கொடுத்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், மெயின்ரோட்டை சேர்ந்தவர் தொழிலாளி முருகன் என்ற சுண்டல் முருகன் (வயது45). இவர் நேற்று சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிங்கிகுளத்தை சேர்ந்த முத்துபாலன் (28) அவரிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டார். அதற்கு முருகன் மறுத்தார்.இதையடுத்து முத்துபாலன், கத்தியை எடுத்து காட்டி, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன முருகன், பாக்கெட்டில் இருந்த ரூ.120 -ஐ எடுத்து கொடுத்தார். பின்னர் முத்து பாலன் தப்பி ஓடி விட்டார். இதுபற்றி முருகன் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி முத்துபாலனை கைது செய்தார்.

    • அந்தோணி தங்கராஜ் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
    • ஜாக்சன், திடீரென செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையை சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ஜாக்சன்(வயது 36). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு சேரன் மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவ ருடன் திருமணமாகி தற்போது பாளை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை மகாராஜநகர் ரெயில்வே கேட் பகுதிக்கு வந்த ஜாக்சன், திடீரென அந்த வழியாக வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஐகிரவுண்டு போலீசார் அங்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினர். நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் ஜாக்சன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில், ராகுல்காந்தி பிரதமராக வேண்டி நடைபெறும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது
    • நாங்குநேரியில் அமைந்துள்ள ஓசன்னா அன்பு இல்லத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாள் நாளை ( திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் ஏற்பாடுகள் செய்துள்ளார்.

    ராகுல்காந்தி பிறந்தநாளான நாளை( திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு, பாளை மகாராஜா நகரில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகிறார்.

    தொடர்ந்து திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில், ராகுல்காந்தி பிரதமராக வேண்டி நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கு பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்குகிறார்.மதியம் 12 மணிக்கு, நாங்குநேரியில் அமைந்துள்ள ஓசன்னா அன்பு இல்லத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

    மாலை 4 மணிக்கு ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் செய்து வருகிறார்கள்.

    • ஆனிப்பெருந்திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தேரோட்டம் 2-ந் தேதி நடைபெறுகிறது.

    நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனிப்பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அம்பாள் தேர் சாரம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சுவாமி தேர் சீராக ஓடுவதற்கு தேவையான அடிப்படை வேலைகள் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தேர்களை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீர் டேங்கர் லாரியுடன் வந்தனர். அவர்கள் விநாயகர், முருகர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர். இதை தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.திருவிழா, தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் ஓடும் நிகழ்வு நடைபெறும்.
    • தீயணைப்புத்துறை வீரர்கள் மூலம் தேர்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை டவுன் நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோவில் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டின் 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

    அதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி பெருந்தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக ஆசியாவி லேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லை யப்பர் தேர் ஓடும் நிகழ்வு நடைபெறும். இந்த தேரோட்ட த்தின்போது அண்டை மாவட்டமான தென்காசி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆனி மாத திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் தேரோட்டம் அன்று 4 ரதவீதிகளிலும் சுவாமி நெல்லையப்பர் கோவிலில் உள்ள விநாயகர், சுப்பிரமணி யர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள் அடுத்தடுத்து வடம் பிடித்து இழுக்கப்படும். இதனை யொட்டி அந்த தேர்களை கழுவி சுத்தம் செய்யும் பணி இன்று காலை பாளை தீயணைப்புத்துறை வீரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

    தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தேர்கள் சுத்தம் செய்யப்பட்டது. ரதவீதிகளில் நிறுத்தப்பட்டி ருக்கும் 5 தேர்களும் இன்று சுத்தப்படுத்தப்பட்டதை யொட்டி காலையில் ரதவீதிகள் வழியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு இருந்தது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • நெல்லை-செங்கோட்டை இடையே நேற்று முன்தினம் அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
    • இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை- செங்கோட்டை இடையே ரெயில் பாதையில் தண்டவாளங்கள் வலுப்ப டுத்தப்பட்டு மின்பாதை அமைக்கப்பட்டது.

    அதில் மின்சார ரெயில் என்ஜின் மூலம் அதிவேகமாக ரெயில்கள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    நெல்லை-செங்கோட்டை இடையே மின்சார என்ஜின் மூலம் ரெயில் இயக்குவதற்காக நேற்று முன்தினம் அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் எவ்வித குறைபாடுகளும் இன்றி ரெயில் இயங்கியதால், இன்று முதல் அந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதேநேரத்தில் அந்த வழித்தடத்தில் நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயில் (06681-06658) வழக்கம்போல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் தென்மலை, ஆரியங்காவு பகுதிகளில் இன்னும் மின்மயமாக்கல் பணிகள் முடிவடையாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று முதல் நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, மதியம் 1.50 மணி, மாலை 6.15 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு காலை 6.40 மணி, காலை 10.05 மணி, மாலை 5.50 மணிக்கும் இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட இருந்த நிலையில் இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டது.

    வழக்கம்போல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட நிலையிலேயே ரெயில் புறப்பட்டு சென்றது.

    இதுகுறித்து அதி காரிகளிடம் கேட்டபோது அவர்களுக்கும் இந்த திடீர் ரத்து குறித்த தகவல் தெரியவில்லை. ஓடுபாதையில் தேவையான அளவு மின்சாரம் வினியோகம் இல்லையா அல்லது மின்சார என்ஜின் இல்லையா என்பது குறித்து அவர்களுக்கும் முழு விபரம் தெரியவில்லை. இதனால் எந்த விதமான முன்னறிவிப்பும், காரணமும் இல்லாமல் மின்சார என்ஜின் ரெயில் இயக்கம் ரத்தானது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • கடந்த 3 மாதமாக மின் மோட்டார் பழுது நீக்கம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் புதிய நீர் மூழ்கி மோட்டாரை வாங்கிக் கொடுத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முனைஞ்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மேல கோடன்குளம் கிராமம்.

    இந்த ஊரில் உள்ள பொதுமக்களுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த மின் மோட்டார் பழுதானது. கடந்த 3 மாதமாக மின் மோட்டார் பழுது நீக்கம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வந்தனர். தண்ணீர் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

    இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனிடம், பழுதாகிக் கிடக்கும் ஊர் மின் மோட்டாரை சரிசெய்து தருமாறு, அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை உடனடியாக ஏற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவிலேயே, புதிய நீர் மூழ்கி மோட்டாரை அந்த ஊர் மக்களுக்கு வாங்கிக் கொடுத்தார். பின்னர் அது உடனடியாக பொருத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

    இதனையடுத்து அந்த பகுதிக்கு தற்போது தண்ணீர் விநியோகம் தொடங்கியது. கடந்த 3 மாதமாக தடைப்பட்டிருந்த தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்த தங்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிக் கொடுத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு மேலகோடன்குளம் கிராம மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

    ×