என் மலர்
உள்ளூர் செய்திகள்

கக்கன் படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் காங்கிரசார் மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
இன்று பிறந்தநாளையொட்டி கக்கன் படத்திற்கு காங்கிரசார் மரியாதை
- மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு கக்கன் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
நெல்லை:
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கன் பிறந்தநாளை யொட்டி இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கக்கன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைத்தலைவர் மகேந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் பரணி இசக்கி, சொக்கலிங்ககுமார், மாவட்ட ஓ.பி.சி பிரிவு தலைவர் டியூக் துரைராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் வெள்ள பாண்டியன், ராமகிருஷ்ணன், சிவன் பெருமாள், வண்ணை சுப்பிரமணியன், அருள்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் மகேந்திரன், தச்சை கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் தங்கராஜ், சரவணன், மணி, மண்டல தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






