என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aani Perunther thiruvizha"

    • திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் ஓடும் நிகழ்வு நடைபெறும்.
    • தீயணைப்புத்துறை வீரர்கள் மூலம் தேர்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை டவுன் நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோவில் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டின் 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

    அதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி பெருந்தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக ஆசியாவி லேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லை யப்பர் தேர் ஓடும் நிகழ்வு நடைபெறும். இந்த தேரோட்ட த்தின்போது அண்டை மாவட்டமான தென்காசி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆனி மாத திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் தேரோட்டம் அன்று 4 ரதவீதிகளிலும் சுவாமி நெல்லையப்பர் கோவிலில் உள்ள விநாயகர், சுப்பிரமணி யர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள் அடுத்தடுத்து வடம் பிடித்து இழுக்கப்படும். இதனை யொட்டி அந்த தேர்களை கழுவி சுத்தம் செய்யும் பணி இன்று காலை பாளை தீயணைப்புத்துறை வீரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

    தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தேர்கள் சுத்தம் செய்யப்பட்டது. ரதவீதிகளில் நிறுத்தப்பட்டி ருக்கும் 5 தேர்களும் இன்று சுத்தப்படுத்தப்பட்டதை யொட்டி காலையில் ரதவீதிகள் வழியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு இருந்தது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    ×