என் மலர்
திருநெல்வேலி
- கணவன்-மனைவிக்கிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
- தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆத்தியடி தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் சரவணன் (வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் சென்னையில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். எனினும் கணவன்-மனைவிக்கிடையே நடந்த தகராறு காரணமாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை அம்பை ரெயில் கேட் அருகே நின்று கொண்டிருந்த சரவணன் அவ்வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்ததும் தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
- மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
நெல்லை:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் தற்போது வரை சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது வீசி வருவதால் இதமான சூழ்நிலை விலவி வருகிறது.
இதேபோல் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் நிலையில், புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணை பகுதிகளை பொறுத்தவரை ராமநதி, கடனா நதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக ராமநதி அணை பகுதியில் கனமழை பெய்தது. நேற்று 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 25 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 8 அடி அதிகரித்து இன்று 33 அடியாக உயர்ந்துள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் 26.50 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 28.50 அடியாக உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்து 25.25 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்தது. தொடர் மழையால் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 49 அடியாக உள்ளது.
இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 30 மில்லிமீட்டரும், ராமநதி, கடனா நதியில் தலா 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்த நிலையில், இன்று 3 அடி உயர்ந்து 44.20 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 56.76 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 65.09 அடியாக உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது பெய்துவரும் சாரல் மழை விவசாயத்திற்கு கை கொடுக்காவிட்டாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அதேநேரத்தில் ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பார்கள். ஆனால் போதிய மழை இல்லாததால் 1 மாதம் தாமதமாகி விட்டது. எனவே மழை தீவிரம் அடைந்தால் இந்த மாதத்திலாவது பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சாலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநகரில் லேசான சாரல் பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோரும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் குடைபிடித்தபடி சென்றனர்.
- முதலில் ஆடிய சேலம் 160 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய திண்டுக்கல் 163 ரன்கள் எடுத்து வென்றது.
நெல்லை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த சேலம் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய சன்னி சந்து 39 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசினார். அரவிந்த் 26 ரன்கள், கவின் 25 ரன்கள், மோகித் ஹரிஹரன் 21 ரன்கள் சேர்த்தனர்.
திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. கேப்டன் பாபா இந்திரஜித் அதிரடியாக ஆடினார். அவர் 50 பந்தில் 3 சிக்சர், 9 பவுண்டரி உள்பட் 83 ரன்கள் விளாசினார். அவருக்கு விமல் குமார் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து 42 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 3 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- அதிரடியாக ஆடிய சன்னி சந்து 39 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசினார்.
- திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
நெல்லை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேலம் அணியின் கவுசிக் காந்தி 7 ரன்னில் வெளியேறினார். அரவிந்த் 26 ரன்கள், கவின் 25 ரன்கள், மோகித் ஹரிஹரன் 21 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய சன்னி சந்து 39 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் சேலம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.
திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.
- 23-வது வார்டு பகுதி மக்கள் காட்சி மண்டபம் பகுதியில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுடர்வகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு- வாக்குவாதம் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
சாலை மறியல்
மேலும் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதுடன் கலங்கலான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் அதனை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 23-வது வார்டு பகுதி மக்கள் கலங்களான குடிநீருடன் இன்று நெல்லை - தென்காசி நெடுஞ்சாலையில் காட்சி மண்டபம் பகுதியில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் மறியல் போராட்டத்தில் தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுடர்வகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு- வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 3 நாட்களுக்குள் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக நெல்லை- தென்காசி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
+2
- கவுன்சிலர்கள்,மண்டல தலைவர்களுக்கு சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர் உலகநாதன் பேசினார்.
- கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு தபால் தலை
தொடர்ந்து தீர்மான ங்களை வலியுறுத்தி மேயர் சரவணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் அதிகளவில் நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதோடு, முதல் தலை முறை பட்டதாரிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, தமிழக தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா மற்றும் நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக மாநகராட்சியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலைகளை மத்திய அரசு வெளியிட வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தி.மு.க. கவுன்சிலர் சங்கர் கூறும்போது, எங்களது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக சரிவர குடிநீர் வினியோ கிக்கப்படவில்லை. எனவே உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
ம.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா பேசும்போது, 41-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசும்போது, பாதாள சாக்கடை 3-ம் கட்ட பணிகள் எப்போது தொடங்கும்? முறப்பநாடு குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகர விரிவாக்க பகுதி களுக்கு விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கவுன்சிலர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கு சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர் உலகநாதன் பேசினார்.
கவுன்சிலர் சின்னத்தாய் பேசும்போது, ஒரு சமூகத்தின் மனவலியை மாமன்னன் திரைப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது. எங்கள் பகுதியில் அதிகளவு ஓடைகள் உள்ளது. ஆனால் அதனை சீரமைக்காமல் உள்ளது. அண்ணா நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. எனவே அங்கு தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தூய்மை பணியா ளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தி.மு.க. கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கூறும்போது, நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்ட சிந்துபூந்துறை- உடையார்பட்டி சாலையை சீரமைத்ததற்கு நன்றி, சிந்துபூந்துறை மின்தகன மேடையில் கூடுதலாக ஒரு அறை அமைக்க வேண்டும், 1 ஆண்டாக பணிக்குழு கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. அதனை நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் பேசும்போது, மாநகர பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் சாப்பாட்டின் அளவு குறைத்து வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 28-வது வார்டுக்குட்பட்ட பூங்கா பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
திடீர் போராட்டம்
முன்னதாக, ரூ.32 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு மேயர் கையெழுத்திடாமல் உள்ளதால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டள்ளதாக கூறி கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் கூட்டத்திற்கு செல்லாமல் மாநகராட்சி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு சென்ற மேயர் சரவணன் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கூட்டத்திற்கு சென்றனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாபநாசம் பணிமனையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் 506 என்ற பஸ், கரம்பை பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை.
- 200-க்கும் மேற்பட்டோர் திடீரென பஸ்களை மறித்து சாலை மறியல் செய்தனர்.
சிங்கை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பை பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி பொட்டல் மூலச்சி, மலையன்குளம். மாத உடையார் குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில் இருந்து நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் மக்கள் வேலை செய்கிறார்கள். மேலும் இப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நகர பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். இதற்காக பாபநாசம் பணிமனையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் 506 என்ற பஸ், கரம்பை பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் அப்பகுதி பொது மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
பஸ் நின்று செல்லாததை கண்டித்து இன்று வக்கீல் பார்த்திபன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கரம்பை பகுதியில் திடீரென பஸ்களை மறித்து சாலை மறியல் செய்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு சேரன்மகாதேவி டி.எஸ்.பி.ராம கிருஷ்ணன் தலைமை யில் கல்லி டைக்குறிச்சி போலீசார், அம்பை தாசில்தார் மற்றும் பாபநாசம் பணிமனை நிர்வாக இயக்குனர், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அந்த பஸ் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியல் கை விடப்பட்டது.
- கூட்டத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- வக்கீல் அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
நெல்லை:
தமிழ்நாடு சமரச மையத்தின் உத்தரவின் பேரில் நெல்லை அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் மீடியேட்டர்களுக்கு இடையிலான முத்தரப்பு கலந்துரையாடல் கூட்டம் நெல்லை மாவட்ட சமரச மையம் மூலமாக அரசு சட்டக்கல்லூரியில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமரசமையத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் குறித்தும் பேசினார். இதில் சென்னை உயர்நீதிமன்ற சமரச மையத்தின் மூத்த பயிற்சியாளர் வக்கீல் அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ் மற்றும் தென்காசி, சங்கரன்கோவில், அம்பை, வள்ளியூர், நாங்குநேரி, சிவகிரி, ஆலங்குளம், செங்கோட்டை, ராதாபுரம் ஆகிய 9 தாலுகாவின் வக்கீல் சங்க தலைவர் மற்றும் செயலாளர்கள், வக்கீல்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெல்லைமாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்திருந்தார்.
- நேற்று 9-ம் திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
- 10-ம் திருவிழாவான இன்று காலை 5.30 மணிக்கு அருட்தந்தை அருள் பிரபாகர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள பண்டாரகுளம் புனித தோமையார் ஆலயம் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டும்தோறும் புனிதருக்கு திருவிழா கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு 1-ம் திருவிழா கடந்த 24-ந் தேதி மாலை அருட்தந்தை லூர்துசாமி கொடியை அர்ச்சித்து கொடியேற்றினார். பின்னர் மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலி, மாலை மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
நேற்று 9-ம் திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இரவு தேர்பவனி நடைறெ்றது. தேரில் புனித தோமையார் ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பக்தர்கள் நேர்ச்சையாக உப்பு, மிளகு தூவியும், பாடல்கள் பாடியும், வான வேடிக்கைகள் நிகழ்த்தியும் தேரை இழுத்துச் சென்றனர்.
தேர்திருவிழாவில் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். 10-ம் திருவிழாவான இன்று காலை 5.30 மணிக்கு அருட்தந்தை அருள் பிரபாகர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கமும், நற்கருணை ஆசிரும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் மற்றும் பண்டாரகுளம் பங்கு இறை மக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.
+2
- நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெரும்பாலான காய்கறிகளின் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையானது.
- மிளகாய் நேற்றைய விலையில் இருந்து குறைந்து கிலோ ரூ.90-க்கு விற்பனையானது.
நெல்லை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெரும்பாலான காய்கறிகளின் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையானது. உள்ளூர்களில் இருந்து காய்கறிகள் வராத தால், வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்வதால் ஏற்படும் செலவு தான் காய்கறிகளின் விலையேற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மொத்த மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.135 வரை விற்பனையானது. இதனால் வியாபாாரிகள் அதனை கடைகளுக்கு வாங்கி சென்று சில்லறை விற்பனையாக கிலோ ரூ.150 வரை விற்றனர். மேலும் மிளகாய் கிலோ ரூ.100 வரையிலும், பீன்ஸ் ரூ.120-க்கும் விற்பனையான நிலையில் இன்று அவற்றின் விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரப்படி டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மிளகாய் நேற்றைய விலையில் இருந்து குறைந்து ரூ.90-க்கு விற்பனையானது. பீன்ஸ் விலையும் ரூ.80 முதல் ரூ.100 என்ற நிலையில் விற்கப்பட்டது. பாவூர்சத்திரம் மார்க்கெட்டி லும் காய்கறிகள் வரத்து இருந்ததால் அங்கும் விலை சற்று குறைய தொடங்கி உள்ளது.
இதுகுறித்து நயினார்குளம் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரி கணேசன் கூறுகையில், பாவூர்சத்திரம், மானூர் களக்குடி, உக்கிரன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தற்போது தக்காளி வர ஆரம்பித்துள்ளது. இதனால் இனி தக்காளியின் விலை சற்று குறைய தொடங்கும் என்று நம்பலாம்.
அதே நேரத்தில் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகமாகவே உள்ளது. எனவே இன்று காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது. கேரட்-ரூ.70, முட்டை கோஸ்-28, பீட்ரூட்-50, அவரை-70, உருளை-25, கத்தரி-45 என்ற விலையில் விற்பனையாகிறது என்றார்.
மார்க்கெட் வியாபாரி அழகேசன் கூறுகையில், அவரைக்காய் ஒட்டன்சத்திரம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சற்று அதிகமாக வர ஆரம்பித்துள்ளது. நேற்று மிளகாய் ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது.
அதே நேரம் உருட்டு வகையான மிளகாய் இன்று ரூ.95-க்கு விற்பனையானது. நேற்று இதன் விலை ரூ.135-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.40 வரை குறைந்துள்ளது. அதேபோல் நேற்று 30 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.2,900 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.2,500 ஆக குறைந்துள்ளது என்றார்.
பாளை மார்க்கெட்
அதே நேரத்தில் பாளை மார்க்கெட்டில் இன்று தக்காளி, மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி மொத்த வியாபாரிகளுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரையும், சில்லறைக்கு ரூ.110-க்கும் விற்பனை ஆகிறது.
இஞ்சி விலை ெமாத்த வியாபாரிகளுக்கு கிலோ ரூ.200 ஆகவும், சில்லறைக்கு ரூ.220 வரையும் விற்கப்படுகிறது. இதேபோல பீன்ஸ், அவரைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது என்றார்.
- பஸ்சில் இருந்த மந்திரமூர்த்தியின் பாக்கெட்டில் இருந்த பர்சை 4 பெண்கள் திருடினர்.
- ஆறுமுகம் என்பவரிடம் 3 பெண்கள் ரூ.7 ஆயிரத்தை பிக்பாக்கெட் அடித்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிக்பாக்கெட்
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று பேட்டை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 56) என்பவர் பஸ்சில் டவுனுக்கு சென்றார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த பர்சை 4 பெண்கள் திருடினர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் கத்தி கூச்சலிடவே பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அவர்கள் 4 பேரையும் பிடித்து சந்திப்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஆஷா(37), திவ்யா(40), சுசீலா(47), லட்சுமி (20) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பர்சை மீட்டு மந்திர மூர்த்தியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் 3 பேர் கைது
இதேபோல் சந்திப்பு உடையார்பட்டியில் இருந்து டவுனுக்கு கோவிலுக்கு சென்ற ஆறுமுகம் என்பவரிடம் பஸ்சில் பயணம் செய்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த முத்துமாரி, ஜெயந்தி, விஜயலட்சுமி ஆகிய 3 பெண்கள் ரூ.7 ஆயிரத்தை பிக்பாக்கெட் அடித்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
நேற்று ஒரே நாளில் தேரோட்ட திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்த 2 முதியவர்களிடம் பிட்பாக்கெட் அடித்த 7 பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- விழா நாட்களில் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கோ பூஜை உள்பட 21 வகை பூஜைகள் நடந்தது.
- இன்று காலை கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு செங்கிடா காரசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை தொடங்கி இன்று வரை 2 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கோ பூஜை உள்பட 21 வகை பூஜைகள் நடந்தது. இன்று காலை கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






