search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பை அருகே அரசு பஸ் நிற்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
    X

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    அம்பை அருகே அரசு பஸ் நிற்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

    • பாபநாசம் பணிமனையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் 506 என்ற பஸ், கரம்பை பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை.
    • 200-க்கும் மேற்பட்டோர் திடீரென பஸ்களை மறித்து சாலை மறியல் செய்தனர்.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பை பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி பொட்டல் மூலச்சி, மலையன்குளம். மாத உடையார் குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமத்தில் இருந்து நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் மக்கள் வேலை செய்கிறார்கள். மேலும் இப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நகர பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். இதற்காக பாபநாசம் பணிமனையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் 506 என்ற பஸ், கரம்பை பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் அப்பகுதி பொது மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

    பஸ் நின்று செல்லாததை கண்டித்து இன்று வக்கீல் பார்த்திபன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கரம்பை பகுதியில் திடீரென பஸ்களை மறித்து சாலை மறியல் செய்தனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு சேரன்மகாதேவி டி.எஸ்.பி.ராம கிருஷ்ணன் தலைமை யில் கல்லி டைக்குறிச்சி போலீசார், அம்பை தாசில்தார் மற்றும் பாபநாசம் பணிமனை நிர்வாக இயக்குனர், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அந்த பஸ் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியல் கை விடப்பட்டது.

    Next Story
    ×