என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேரோட்ட விழாவில் பங்கேற்க வந்த பக்தர்களிடம் பிக்பாக்கெட் அடித்த 7 பெண்கள் கைது
- பஸ்சில் இருந்த மந்திரமூர்த்தியின் பாக்கெட்டில் இருந்த பர்சை 4 பெண்கள் திருடினர்.
- ஆறுமுகம் என்பவரிடம் 3 பெண்கள் ரூ.7 ஆயிரத்தை பிக்பாக்கெட் அடித்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிக்பாக்கெட்
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று பேட்டை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 56) என்பவர் பஸ்சில் டவுனுக்கு சென்றார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த பர்சை 4 பெண்கள் திருடினர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் கத்தி கூச்சலிடவே பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அவர்கள் 4 பேரையும் பிடித்து சந்திப்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஆஷா(37), திவ்யா(40), சுசீலா(47), லட்சுமி (20) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பர்சை மீட்டு மந்திர மூர்த்தியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் 3 பேர் கைது
இதேபோல் சந்திப்பு உடையார்பட்டியில் இருந்து டவுனுக்கு கோவிலுக்கு சென்ற ஆறுமுகம் என்பவரிடம் பஸ்சில் பயணம் செய்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த முத்துமாரி, ஜெயந்தி, விஜயலட்சுமி ஆகிய 3 பெண்கள் ரூ.7 ஆயிரத்தை பிக்பாக்கெட் அடித்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
நேற்று ஒரே நாளில் தேரோட்ட திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்த 2 முதியவர்களிடம் பிட்பாக்கெட் அடித்த 7 பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






