என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் சாலை அமைக்க ஏற்பாடு செய்து தரக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது.
    • இதையடுத்து அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் பாப்பான்குளம் பஞ்சா யத்துக்கு உட்பட்ட பொத்தையடி கிராமத்தில் ஏராளமான தெருக்களில் சாலை வசதி இல்லாமல் இருந்துவந்தது. இதையடுத்து அந்த பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் சாலை அமைக்க ஏற்பாடு செய்து தரக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது.

    உடனடியாக அந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு சாலை அமைக்க ஏற்பாடுகள் செய்தார். இதையடுத்து அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின் கலந்து கொண்டு சாலை பணியை தொடங்கி வைத்தார். அப்போது பாப்பாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கிளை செயலாளர் ஜெயக்குமார், மகளிர் அணி பாமா, ஜாய்ஸ் மேகலா, வரலட்சுமி, அரசு ஒப்பந்ததாரர் சிவனேஷ் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் பொன் தங்கதுரை தலைமையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
    • செயலாளராக ஜெய்கணேஷ் மற்றும் புதிய நிர்வாகிகளும் பதவி யேற்றனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சௌபாக்கிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் பொன் தங்கதுரை தலைமையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினரான ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை மற்றும் கவுரவ விருந்தினரான வருங்கால மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு ஆகியோருக்கு ஏலக் காய் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ரமணி சுப்பிரமணியம், சந்திரா சண்முகநாதன், டாக்டர் பிந்து குமார், பிரபா நவமணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். புதிய ரோட்டரி கிளப் தலைவராக பதவியேற்ற சுதீர் கந்தனுக்கு முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் பொன் தங்கதுரை தனது கழுத்து ஆபரணத்தை அணிவித்து வாழ்த்து தெரி வித்தார். செயலாளராக ஜெய்கணேஷ் மற்றும் புதிய நிர்வாகிகளும் பதவி யேற்றனர்.

    விழாவில் நலத்திட்ட உதவிகளான கிளட்ச் ஸ்டிக், வீல் சேர், சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான பொருட்கள், ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 40 இன்ச் அளவி லான மானிட்டர், தையல் எந்திரம், சிவப்பிரகாஷ் மாணவனுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, சி.எம்.எஸ். விடுதிக்கு கலர் பிரிண்டர் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி தகுதி ஊக்க பரிசுகள் என பல்வேறு நலத்திட்டங்கள் வழ ங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் ரோட்டரி, லயன்ஸ் சங்க நிர்வாகிகள், வியாபாரி சங்க தலைவர்கள், செய லாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதை பொறுத்து மேகதாது அணை பிரச்சினை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள்.
    • முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் சில குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் கூறுவது போல எதுவும் இல்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அரிகேசவநல்லூரில் உள்ள அரியநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் மாநகர காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே சமூக நீதி. பல்வேறு மதங்கள் உள்ள இந்த நாட்டில் சமூக நீதி தேவை என்பதற்காகவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இந்த சட்டமானது ஒரு சமூகத்திற்கு எதிரான சட்டம் என சிலரால் தோற்றுவிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் 4 நபர்கள் இருந்தால் தனித்தனியாக அவர்களுக்கு சட்டம் இருக்க முடியாது. அதனாலேயே அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். சரத் பவார் போன்றோர் கூட இந்த சட்டத்தை விமர்சனம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர். இந்த கால கட்டத்திற்கு இந்த சட்டம் அவசியமானது. எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ள முத்தலாக் சட்டத்தை கூட சிலர் அரசியல் ஆக்கி வருகின்றனர். ஆன்மீகம் இந்தியாவை வளர்க்கிறது. ஆன்மீகம் என்பதில் அனைத்து மதமும் அடங்கும். எல்லா மத நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

    கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதை பொறுத்து மேகதாது அணை பிரச்சினை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள்.

    எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் 40 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிய சம்பவம் முற்றிலும் அரசியல் சார்ந்த கேள்வி. எனவே இது குறித்து நான் பதில் அளிக்க முடியாது.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பில் இருக்கும் எனக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளது. அதற்கு உட்பட்டு நான் செயல்படுகிறேன். முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் சில குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் கூறுவது போல எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டே தான் இருக்கிறது என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

    முன்னதாக அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் கோரிக்கை ஒன்றை நான் பார்த்தேன். அதில் ஒரு மதம் சார்ந்த திருவிழாவிற்கு, அதிக பஸ் மற்றும் ரெயில்களை விட வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார். ஒருவேளை என் கண்ணில் அது மட்டும் தான் பட்டதா என்று தெரியவில்லை. இங்கு திருச்செந்தூர் உள்பட ஏராளமான வழிபாட்டு தலங்கள் உள்ளது. அவர் எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் கோரிக்கை விட்டிருந்தால் அது மகிழ்ச்சி.

    ஒருவேளை அவர் அப்படி அனைத்து மதத்தினருக்கும் சேர்த்து கோரிக்கை விடாமல் விட்டிருந்தால் ஏற்றத்தாழ்வு பாரபட்சம் இருக்கக் கூடாது. தமிழகத்தில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களையோ, விழாக்களையோ பேசுவதே தவறு என்ற எண்ணம் இருக்க கூடாது. முதல்வரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. ஆக, இந்த பாரபட்சம் இல்லாத ஆன்மீக நிலை இருக்க வேண்டும்.

    செய்தித்தாள்களில் வந்த வேடிக்கையான செய்தியை பார்த்தேன். கஞ்சாவை இளைஞர்கள் சாப்பிட்டு பார்த்து இருக்கிறோம். இப்போது தமிழகத்தில் கஞ்சாவை எலிகள் சாப்பிட தொடங்கி இருப்பதாகவும், கஞ்சாவை தேடி போலீஸ் நிலையத்திற்கு வரும் எலிகளின் போதையை தடுப்பது எப்படி என்றும், போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது... எலிகளின் போதையை எப்படி தடுப்பது என்ற ஒரு பெரிய பிரச்சினை தமிழகத்தில் ஓடிக்கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.
    • திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பிளே ஆப் சுற்றுக்கு சிக்கலின்றி முன்னேறுவதற்கு இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பேட்டிங் செய்த மதுரை அணி கவனமாக ஆடியது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் ஹரி நிசாந்த் 34 ரன்களும், சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

    ஆதித்யாவும் தன் பங்கிற்கு 37 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.

    இதில், துஷர் ரஹேஜா அரை சதம் அடித்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, விஜய் சங்கர் 28 ரன்களிலும், விஷால் வைத்யா 21 ரன்களிலும், ராஜேந்திர விவேக் மற்றும் பால்சந்தர் அனிருத் தலா 11 ரன்களிலும், சதுர்வேதி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக விளையாடிய புவனேஸ்வரன் 18 ரன்களும், கோகுல்மூர்த்தி ஒரு ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இதனால், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    இந்த போட்டியின் வெற்றியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    • துவக்க வீரர்கள் ஹரி நிசாந்த் 34 ரன்களும், சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களும் சேர்த்தனர்.
    • திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பிளே ஆப் சுற்றுக்கு சிக்கலின்றி முன்னேறுவதற்கு இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பேட்டிங் செய்த மதுரை அணி கவனமாக ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் ஹரி நிசாந்த் 34 ரன்களும், சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஆதித்யாவும் தன் பங்கிற்கு 37 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார்.

    இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    • கிராமப்புறங்கள்,விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
    • பெருமாள்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பகுதியில் இருந்தும், மாநகரத்தில் விரிவாக்கப் பகுதியில் இருந்தும் தினமும் பாளை பகுதியில் உள்ள கல்லூரி களுக்கும், பள்ளிகளுக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிப்பதற்காக வந்து செல்கின்றனர்.

    மாநகர பகுதிக்குள் குறிப்பாக டவுன், பேட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட அளவு பஸ்கள் இயக்கப்பட்டா லும் மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள கிராமப்புறங்களில் மற்றும் விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் இந்த பஸ்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவ-மாணவிகள், பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் என கூட்டமாக காணப்படுகிறது.

    அந்த வகையில் இன்று காலை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் இருந்து டவுனுக்கு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெருமாள்பு ரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவ -மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். இதனை அந்த வழியாக வந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் ஒருவர் பார்த்து உடனடியாக அந்த பஸ் டிரைவரை பஸ்சை நிறுத்த சொல்லி அதில் தொங்கிக் கொண்டிருந்த மாணவிகளை படிக்கட்டில் இருந்து பஸ்சுக்குள் போகுமாறு அறிவுரை வழங்கினார். அதன் பின்னர் பஸ்சை கிளம்ப அறிவுறுத்தினார். தொடர்ந்து காலை மற்றும் மாலை வேலைகளில் மாநகர பகுதியில் பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த வேலைகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • புதிய பாலத்தில் இருந்து மேலப்பாளையம் சாலை வரை நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பாளை பஸ் நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம், வணிக வளாகம், பல்நோக்கு அரங்கம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளது.

    சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நெல்லை மாவட்ட மக்களின் ஜீவநதியாக விளங்கும் தாமிர பரணி ஆற்று தண்ணீரானது மாநகர பகுதியில் சாக்கடை உள்ளிட்ட கழிவுகளால் மாசடைவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

    இதனால் அந்த மாசுபாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தாமிர பரணி ஆற்றின் அழகை ரசிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை கலெக்டர் அலுவலகம் எதிரே நடை பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்துக்காக ரூ. 11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரமாக புதிய பாலத்தில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகத்தை தாண்டி மேலப்பாளையம் சாலை வரையிலும் சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    சுமார் 15 மீட்டர் அகலம் கொண்ட வகையில் அமைக்கப்படும் இந்த நடை பாதையில் மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் விடுமுறை காலங்களிலும், வெள்ள காலகட்டத்தின் போதும் தாமிரபரணி ஆற்றின் அழகை ரசிக்கும் வண்ணம் இந்த நடைபாதை அமைக் கப்பட்டுள்ளது. அந்த கால கட்டங்களில் இந்த நடை பாதையில் நின்று தாமிரபரணி ஆற்றின் அழகை புகைப்படம் எடுக்கவும், ரசிக்கும் விதமாகவும் 5 இடங்களில் 'வியூ பாய்ண்ட்' அமைக் கப்படுகிறது.

    தற்போது இங்கு சுமார் 65 சதவீத பணிகள் முடிவடை ந்துள்ள நிலையில் கிரானைட் ஒட்டும் பணி, மின் கம்பங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் வருகிற 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தாமிரபரணி நதியின் தூய்மையை பாதுகாக்க பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற் கொண்டு வரும் நிலையில் தற்போது அதன் அழகை ரசிக்கும் விதத்தில் நடை பெற்று வரும் இந்த பணியை பொதுமக்கள் பயனுள்ள தாகவே கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் இரவு நேரங்களில் அந்த நடை பாதைகளை மது பிரியர்கள் ஆக்கிரமித்து மது குடிப்பதை தவிர்க்கும் விதமாக கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலாளிகள் மேற்பார்வை யில் காவல் பணிகள் தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளை இணைத்து பிலாஸ்பூர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடித்து விட்டு நெல்லை பணிமனையில் 3 நாட்கள் ரெயில் காலியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் பிலாஸ்பூருக்கு(வண்டி எண்: 22620) வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    பிலாஸ்பூர் ரெயில்

    இந்த ரெயிலானது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.25 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா வழியாக தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளை இணைத்து திங்கட்கிழமை இரவில் பிலாஸ்பூருக்கு சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

    மறுமார்க்கமாக இந்த ரெயிலானது (வண்டி எண்: 22619) ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் பிலாஸ்பூரில் இருந்து காலையில் புறப்பட்டு அதே வழித்தடங்களின் வழியாக வியாழக்கிழமை அதிகாலையில் 3.30 மணிக்கு நெல்லைக்கு வந்தடைகிறது. இந்த ரெயிலில் ஒரு 2 அடுக்கு ஏசி பெட்டியும், 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 9 படுக்கை வசதி பெட்டிகளும், 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், 2 லக்கேஜ் மற்றும் மேலாளர் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்

    இதில் படுக்கை வசதி பெட்டியில் மொத்தம் 720 இருக்கைகள் உள்ளன. அதேபோல் 4 முன்பதிவு இல்லாத பெட்டியில் சுமார் 500 பேர் வரை பயணிக்கலாம். மூன்றடுக்கு ஏசி பட்டியில் மொத்தம் 360 பேர் வரை பயணிக்கலாம். 2 அடுக்கு ஏசி பெட்டியில் 52 பேர் பயணம் செய்யலாம். மொத்தம் இந்த ெரயிலில் சுமார் 1,500 பேருக்கும் மேலானவர்கள் இதில் பயணம் செய்ய முடியும்.

    இந்த ரெயில் சேவையானது வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நெல்லை பணிமனையில் பராமரிப்பு பணிகள் முடித்து விட்டு காலியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த காலி ரெயில் பெட்டிகளை கொண்டு தான் கடந்த மாதம் வரை நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது நேற்று முன்தினம் முதல் மேட்டுப்பாளையம் ரெயில் சேவை வியாழக்கிழமை புறப்படுவதற்கு பதிலாக, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்கிறது.

    காலி பெட்டிகள்

    இதன் காரணமாக இந்த வாரத்தில் இருந்து இந்த ெரயிலானது 3 நாட்கள் காலியாக நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் இந்த ரெயில் பெட்டிகளை கொண்டு நெல்லையில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும், தென்காசி, மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக பெங்களூருக்கு புதிய வாராந்திர சிறப்பு ெரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று தென் மாவட்ட ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    அதாவது ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குள் செல்லுமாறும், மறு மார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு சனிக்கிழமை காலை 9 மணிக்கு வந்தடையும் வகையில் இந்த ெரயில் சேவையை இயக்கலாம்.

    மேலும் சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயிலை 3 மாதங்களுக்கு இயக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து இந்த சேவைகளை இயக்க வலியுறுத்த வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இடிக்கப்பட்ட கோவில்களும் மீண்டும் கட்டித் தரப்படும் என்று அப்போதைய கமிஷனர் உறுதி அளித்தார்.
    • பாளையங்கால்வாயில் துவைத்த துணிகளை மாநகராட்சியில் கொண்டு வந்து காண்பித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், பிரம்ம நாயகம் மற்றும் பலர் திரண்டு வந்து அளித்த மனுவில், நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்ட போது அங்கு இருந்த 2 விநாயகர் கோவில்களும் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படும் என்று அப்போதைய கமிஷனர் உறுதி அளித்தார்.

    இதனை மீண்டும் கட்டித்தருமாறு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை கட்டப்படவில்லை. அதனை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த நிர்வாகி ஒருவர் துதிக்கையுடன் கூடிய விநாயகர் வேடத்தில் வந்திருந்தார்.

    தொடர்ந்து நெல்லையைச் சேர்ந்த சிராஜ் என்ற சமூக ஆர்வலர் பாளையங்கால் வாயை தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தார். முன்னதாக அவர் 10,15 வருடங்களுக்கு முன்பாக இருந்த பாளையங்கால்வாயில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எவ்வாறு தங்களது உடைமைகளையும், தங்களையும் அந்த கால்வாயின் நீரினால் தூய்மைப்படுத்தி கொண்டார்களோ, அதனைப் போன்றே பாளை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள பாளையங்கால்வாயில் துணிகளை துவைத்து, அந்த துணிகளின் நிலையை மாநகராட்சியில் கொண்டு வந்து காண்பித்தார். தொடர்ந்து அவர் பாளையங்கால்வாயை சுத்தப்படுத்திடவும், நெல்லையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மிக விரைந்து நடத்தி முடித்திட வேண்டியும் மனு அளித்தார்.

    • மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும்.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழில் முனை வோர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்ப டுகின்றன.

    புதிய கட்டிட திறப்பு விழா

    இந்நிலையில் கல்லூரியில் நடந்த எம்.எஸ்.எம்.இ. மைய புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு அறிவுறுத்தலின் படி கல்லூரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டார். விழாவில் சென்னை தலைமையக எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குநர் சுரேஷ்பாபு, உதவி இயக்குநர்கள் (நெல்லை) சிமியோன், ஜெரினாபபி மற்றும் அதிகாரி கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர்.

    நிகழ்ச்சியில் சுரேஷ்பாபு பேசுகையில், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்.எம்.இ. செயல்பாடுகள் நன்றாக உள்ளது. மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும் என்றார்.

    கல்லூரி பொதுமேலாளர் ஜெயக்குமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் ஆதரவுடன் இன்குபேஷன் மையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மாணவர்கள் தங்களது திறன்மிக்க யோசனைகளை வழங்க முன்வர வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கப்பட்டன.

    மேலும் மத்திய அரசு நடத்தும் ஹேக்கத்தான் போட்டிகள், தமிழக அரசின் ஸ்டார்ட்-அப் போட்டிகளில் எப்.எக்ஸ். கல்லூரி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர் ஜான்கென்னடி, தொழில் முனைவோர்துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மைய தலைவர் லக்ஷ்மி நாராயணன் மற்றும் மதுரை எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர்கள் உமா சந்திரிகா, ஜெயசெல்வம், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மிஷன் திட்ட தலைவர் ராகுல், பயிற்றுவிப்பாளர்கள் ராஜ், முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் பிரியா நன்றி கூறினார். 

    • கிட்டுமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார்.
    • சுடலைவடிவு என்ற சுதாவையும், அவரது மகன் ஆறுமுகவேலையும் காணவில்லை.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் பாபநாசம் மகள் சுடலைவடிவு என்ற சுதா (வயது34). இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராம நல்லூரை சேர்ந்த கிட்டுமணி (39) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆறுமுகவேல் (11) என்ற மகனும், மனிஷா (8) என்ற மகளும் உள்ளனர். கிட்டுமணி பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கிட்டுமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். இரவில் அனைவரும் வீட்டில் தூங்கினர். பின்னர் பார்த்த போது, சுடலைவடிவு என்ற சுதாவையும், அவரது மகன் ஆறுமுகவேலையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிட்டுமணி பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி.ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகனுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • விழாவுக்கு கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா பத்மஸ்ரீ டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவில் கல்லூரியின் செயலாளர் வி.பி. ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் டி. சாந்தி வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் நிர்மலா தொடக்க உரையாற்றினார். முதல்வர் து. ராஜன் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை கே. செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. முடிவில் சுயநிதிப்பிரிவு வணிகவியல்துறை தலைவர் எம். மனோகர் நன்றி கூறினார்.

    ×